'தோனியை ஏன் பிடிக்கும்' சீக்ரெட் சொல்லும் ஜூனியர் வாட்சன்!

Updated: 24 April 2019 17:40 IST

37 வயதான வாட்சன் 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 96 ரன்கள் குவித்து சி.எஸ்.கேவின் தொடர் இரண்டு தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

MS Dhoni And Watson Junior Are High-Five Buddies - Watch
ஷேன் வாட்சன் 53 பந்தில் 96 ரன்கள் எடுத்து ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை மீண்டும் கைப்பற்றியது சென்னை. © Screengrab: www.iplt20.com

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, சி.எஸ்.கே வீரர்களின் குழந்தைகளோடு மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுபவர். சென்னை அணியின் துவக்க வீரர் ஷேன் வாட்சன் 53 பந்தில் 96 ரன்கள் எடுத்து ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை மீண்டும் கைப்பற்றியது. ஐபிஎல் 2019 தொடரில் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் திணறி வந்த வாட்சன் இந்த போட்டியில் அதிரடியாக ஆடி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை பெற்றி பெற வைத்தார். 

போட்டிக்கு பின் தனது மகனை பேட்டி கண்ட வாட்சன் "உனக்கு அணியில் யாரை பிடிக்கும்" என்றதற்கு, ஜூனியர் வாட்சன் லிட்டில் வில்லியம் ''எனக்கு தோனியை பிடிக்கும். காரணம் அவர்தான் எல்லா நேரமும் சிக்ஸர் அடிப்பார்'' என்றார். 

37 வயதான வாட்சன் 9 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 96 ரன்கள் குவித்து சி.எஸ்.கேவின் தொடர் இரண்டு தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார். போட்டி முடிந்து பேசிய வாட்சன் '' நான் ரன் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். அதை இன்று சிறப்பாக செய்ததாக கருதுவதாக தெரிவித்தார். 

ஐபிஎல் 2019ல் 11 போட்டிகளில் ஆடி வாட்சனின் முதல் அரைசதம் இது. இந்த மாற்றத்துக்காக அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெம்மிங், தோனி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். அவர்கள் என்ன அணியிலிருந்து ஃபார்மை காரணம் காட்டி நீக்கியிருக்கலாம். ஆனால் அவர்கள் என்மீது வைத்த நம்பிக்கை பெரிது என்றார். 

இறுதியில் 18வது ஓவரில் புவனேஷ்வர் குமார் பந்தில் பாரிஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இந்த சீசனில் தனது முதல் சதத்தை தவறவிட்டார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"தோனியின் அறிவுரை தான் எனக்கு இப்போதும் உதவுகிறது" - தீபக் சஹார்
"தோனியின் அறிவுரை தான் எனக்கு இப்போதும் உதவுகிறது" - தீபக் சஹார்
நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் தோனி: தகவல்!
நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் தோனி: தகவல்!
தோனியை குறித்து சிஎஸ்கே வெளியிட்ட பதிவு !!
தோனியை குறித்து சிஎஸ்கே வெளியிட்ட பதிவு !!
ரிஷப் பன்ட்டின் விக்கெட் கீப்பிங்கை விமர்சித்து ரசிகர்கள் பதிவிட்ட மீம்ஸ்!
ரிஷப் பன்ட்டின் விக்கெட் கீப்பிங்கை விமர்சித்து ரசிகர்கள் பதிவிட்ட மீம்ஸ்!
"இரவு-பகல் டெஸ்ட்டில் தோனி வர்ணனையாளராக வாய்ப்பில்லை": தகவல்!
"இரவு-பகல் டெஸ்ட்டில் தோனி வர்ணனையாளராக வாய்ப்பில்லை": தகவல்!
Advertisement