ஐபிஎல் குவாலிஃபையர் 1: வைரலான தோனி - ஹர்திக் பாண்ட்யா ''ப்ரோமேன்ஸ்''

Updated: 08 May 2019 16:25 IST

ஹர்திக் பாண்ட்யா தோனிக்கு மிகவும் நெருக்கமான இளம் வீரர்களில் ஒருவர்.

MS Dhoni And Hardik Pandya
மும்பை - சென்னை இடையேயான குவாலிஃபையர் 1 போட்டியின் போது தோனியுடன் பாண்ட்யா பேசும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார் ஹர்திக் பாண்ட்யா. © Twitter @hardikpandya7

இந்திய கிரிக்கெட் ரசிகர் அனைவருக்கும் மட்டுமல்ல கிரிக்கெட் வீரர்களும் தோனிக்கு ரசிகர்களாக தான் உள்ளனர். அனைத்து இளைஞர்களுக்கும் தோனி வழிகாட்டியாக இருக்கிறார். ஹர்திக் பாண்ட்யா தோனிக்கு மிகவும் நெருக்கமான இளம் வீரர்களில் ஒருவர். மும்பை - சென்னை இடையேயான குவாலிஃபையர் 1 போட்டியின் போது தோனியுடன் பாண்ட்யா பேசும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார் ஹர்திக் பாண்ட்யா. அதில் "எனது இன்ஸ்ப்ரேஷன், என் நண்பர், என் சகோதரர், என் லெஜெண்ட்" என தோனியை குறிபிட்டுள்ளார்.

சென்னை அணியை முதல் குவாலிஃபையரில் மும்பை அணி 131 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. சேஸிங்கில் சூர்யக்குமார் யாதவின் அரைசதத்தால் ஒன்பது பந்துகள் மீதமிருக்கையில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இது மும்பை அணிக்கு எதிராக் பெறும் நான்காவது தொடர் தோல்வியாகும். ''போட்டியென்றால் யாராவது ஒருவர் தோற்கத்தானே வேண்டும். இன்று எங்களுக்கு சாதமாக சூழல் அமையவில்லை. ஏற்கெனவே இங்கு 7 போட்டிகளில் ஆடியுள்ளோம். பிட்ச் மிகவும் கடுமையானதாக இருந்தது. பந்து மட்டைக்கு வருவதை கணிக்க முடியவில்லை. இன்னும் பேட்டிங் அதிக கவனம் செலுத்த வேண்டும்'' என்றார் தோனி

டாப் ஆர்டர் வீரர்கள் டூப்ளெசிஸ் 6, வாட்சன் 10, ரெய்னா 5 ரன்களில் வெளியேறியது சென்னை அணிக்கு பின்னடைவை தந்தது. முரளி விஜய் ஓரளவுக்கு நிதானமாக ஆடி 26 ரன்களை குவித்தார். ஆனாலும் சிஎஸ்கேவுக்கு டாப் ஆடரின் சொத்தப்பல் பலவீனமாக மாறியது. 

தோனி மற்றும் ராயுடுவின் ஐந்தாவது விக்கெட்டுக்கான 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அணியை கெளரவமான ஸ்கோரை எட்ட வைத்தது. ராயுடு 42 ரன்களும், தோனி 37 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

"இந்த போட்டியில் சொதப்பிய வீரர்கள் அவர்களது அனுபவத்தால் அடுத்த போட்டியில் எளிதாக இந்த பிரச்சனையை சரிசெய்வார்கள்" என்று தோனி கூறினார்.

மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யக்குமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 71 ரன்கள் குவித்து மும்பை அணியை ஐந்தாவது முறையாக இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றார். சென்னை அணி குவாலிஃபையர் 2வில் டில்லி , ஹைதராபாத் இரு அணிகளில் ஒன்றை எதிர்கொள்ளும். 

Comments
ஹைலைட்ஸ்
  • அனைத்து இளைஞர்களுக்கும் தோனி வழிகாட்டியாக இருக்கிறார்
  • முதல் குவாலிஃபையரில் மும்பை அணி சென்னையை 131 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது
  • ஹர்திக் பாண்ட்யா தோனிக்கு மிகவும் நெருக்கமான இளம் வீரர்களில் ஒருவர்
தொடர்புடைய கட்டுரைகள்
தோனியை விமர்சித்த சச்சின்… சச்சினை வறுத்தெடுக்கும் தோனி ரசிகர்கள்!
தோனியை விமர்சித்த சச்சின்… சச்சினை வறுத்தெடுக்கும் தோனி ரசிகர்கள்!
'இவர் தான் அடுத்த தோனி' - லாங்கர் கூறும் அந்த வீரர் யார் தெரியுமா?
“தல-க்கு இப்படியொரு நிலைமையா!”- தோனியை மீம்ஸ்களால் வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்
“தல-க்கு இப்படியொரு நிலைமையா!”- தோனியை மீம்ஸ்களால் வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்
ஒருநாள் போட்டியில் ட்ராவிட் சாதனையை கடந்து தோனி சாதனை!
ஒருநாள் போட்டியில் ட்ராவிட் சாதனையை கடந்து தோனி சாதனை!
சர்ச்சையை கிளப்பிய தோனி கிளவுஸ்; முத்திரையை அகற்ற வேண்டும் என ஐசிசி திட்டவட்டம்!
சர்ச்சையை கிளப்பிய தோனி கிளவுஸ்; முத்திரையை அகற்ற வேண்டும் என ஐசிசி திட்டவட்டம்!
Advertisement