மான்கடிங் சர்சசைக்கு தீர்வு சொல்லும் ட்வீட்டர் வைரல் வீடியோ

Updated: 08 April 2019 18:17 IST

ஐபிஎல் போட்டிகளில் இடம்பெற்ற மான்கடிங் ரன் அவுட் முறை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.

Mankading Solved; New Technique Of Running Between Wickets - Watch
மிகப்பெரிய கம்பு ஒன்றை பிட்ஸ்சின் நடுவில் நின்று இருபுறமும் வைக்கும் வீடியோ வைரலாகியுள்ளது. © Twitter

ஐபிஎல் போட்டிகளில் இடம்பெற்ற மான்கடிங் ரன் அவுட் முறை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. அதனை கிண்டல் செய்யும் விதமாக டிவிட்டரில் ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மிகப்பெரிய கம்பு ஒன்றை பிட்ஸ்சின் நடுவில் நின்று இருபுறமும் வைக்கும் வீடியோ வைரலாகியுள்ளது. இதனை 2020 உலகக் கோப்பையில் பரிசீலிக்கும் படி கூறப்பட்டிருந்தது. 

முன்னதாக கிங்ஸ் லெவனுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் சேசிங் செய்து கொண்டிருந்த போது 13வது ஓவரில் ரவிச்சந்திரன் அஷ்வின் ஜாஸ் பட்லருக்கு பந்துவீசினார். 

ராஜஸ்தான் வீரர் பட்லர் அஷ்வின் பந்து வீசும் போது பந்துவீச்சாளர் பக்கம் இருந்தார். ஆனால் பந்து வீசப்படுவதற்கு முன்பே பட்லர் க்ரீஸுக்கு வெளியே செல்வதை அறிந்த அஷ்வின் பந்தை வீசாமளேயே பந்துவீச்சாளர் எண்ட்டில் ரன் அவுட் செய்தார். இதற்கு அதிருப்தியை வெளிப்படுத்தியபடி பட்லர் வெளியேறினார். இது கடுமையாக இணையதளங்களில் விமர்சிக்கப்பட்டது. 

பட்லர் களத்தில் இருக்கும் வரை ராஜஸ்தானின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. மான்கடிங் எனும் வினோதமான முறையில் பட்லரை அஷ்வின் வீழ்த்தினார்.  

இதற்கு  அஷ்வினிடம் கேட்டபோது '' இதில் விவாதிக்க எதுவுமே இல்லை. நான் விதிமுறைப்படி தான் நடந்து கொண்டேன். அப்படியென்றால் விதிகளில் திருத்தம் கொண்டு வரவேண்டும். அதோடு இது திட்டமிடப்பட்ட ஒன்று அல்ல தற்செயலானதே'' என்று கூறினார்.

இது விதிப்படி சரியானது என்று எம்.சி.சியின் விதிகளும் கூறியுள்ளது. விதி 41:16ன் படி எதிர்முனையில் உள்ள  பேட்ஸ்மேன் க்ரீஸை விட்டு வெளியேறினால் பந்துவீச்சாளர் அவரை ரன் அவுட் செய்யலாம். இந்த பந்து கணக்கில் கொள்ளப்படாது'' என்றும் கூறியது.

Comments
ஹைலைட்ஸ்
  • மான்கடிங் சர்ச்சைக்கு புது ஐடியா கண்டுபிடிப்பு
  • மான்கடிங் ரன் அவுட் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரிதும் விமர்சிக்கப்பட்டது
  • மான்கடிங் விதிப்படி சரியானது என்று எம்.சி.சியின் விதிகளும் கூறியுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
Ravichandran Ashwin Birthday: வாழ்த்து மழை பொழிந்த கிரிக்கெட் வீரர்கள்!
Ravichandran Ashwin Birthday: வாழ்த்து மழை பொழிந்த கிரிக்கெட் வீரர்கள்!
இந்திய அணியினருடன்
இந்திய அணியினருடன் 'போட் பார்ட்டி' கொண்டாடிய அனுஷ்கா ஷர்மா!
"ஆடும் லெவனில் அஸ்வின் இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது" - சுனில் கவாஸ்கர்!
"ஆடும் லெவனில் அஸ்வின் இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது" - சுனில் கவாஸ்கர்!
டிஎன்பிஎல் போட்டியில் வினோத பந்துவீச்சுக்கு பாராட்டு பெற்ற அஸ்வின்!
டிஎன்பிஎல் போட்டியில் வினோத பந்துவீச்சுக்கு பாராட்டு பெற்ற அஸ்வின்!
டிஎன்பிஎல்: சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அஸ்வினின் வித்தியாசமான பந்துவீச்சு!
டிஎன்பிஎல்: சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அஸ்வினின் வித்தியாசமான பந்துவீச்சு!
Advertisement