அல்சாரி மீதான விமர்சனம்... ட்விட்டரில் விமர்சிக்கப்பட்ட மஞ்ரேக்கர்!

Updated: 16 April 2019 16:51 IST

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் காயமடைந்த அல்சாரி ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார் என மும்பை அணி அறிவித்துள்ளது.

Sanjay Manjrekar Faces Twitter Fury For Alzarri Joseph vs Lasith Malinga Tweet
அல்சாரி தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஐபிஎல்-லின் சிறந்த பந்துவீச்சான 6/12 ஐ தனது முதல் போட்டியிலேயே பதிவு செய்தார்.  © BCCI/IPL

சஞ்சய் மஞ்ரேக்கர் எதிர்மறையான கருத்துக்களை ட்விட் செய்து விமர்சனத்துக்குள்ளாவது வழக்கமாகியுள்ளது. தற்போது அவர் மும்பை வீரர் அல்சாரி மற்றும் மலிங்கா குறித்து தெரிவித்துள்ள கருத்து ட்விட்டரில் விமர்சனத்துக்குள்ளானது. மும்பை அணியில் மலிங்கா உள்ளூர் போட்டிகளில் ஆடுவதற்காக நடுவில் ஓய்வில் சென்ற போது அணியில் சேர்க்கப்பட்டார் அல்சாரி ஜோசப்.

அல்சாரி தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஐபிஎல்-லின் சிறந்த பந்துவீச்சான 6/12 ஐ தனது முதல் போட்டியிலேயே பதிவு செய்தார். 

22 வயதான அல்சாரி ஜோசப் 3.4 ஓவர்கள் வீசி 12 ரன்களை கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் முதல் சீசனில் சொகைல் தன்வீரின் 6/14 என்ற சாதனையை முறியடுத்தார்.

"கிங்ஸ் லெவன் அணியுடன் இரண்டு ஓவர்கள் வீசி 22 ரன்களை அடுத்த போட்டியில் தந்ததால் அவருக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு வழங்காமல் மலிங்காவுக்கு வழங்கலாம். அல்சாரிக்கு வழங்குவது உணர்ச்சிகரமான முடிவு" என சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவிக்க அது விமர்ச்னத்துக்குள்ளானது.

மலிங்கா அடுத்த போட்டியில் ஆர்சிபியுடன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அல்சாரி தோள்பட்டை வலி காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார்.

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் காயமடைந்த அல்சாரி ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார் என மும்பை அணி அறிவித்துள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
கோலி குறித்து கவாஸ்கர் கருத்துக்கு பதிலளித்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
கோலி குறித்து கவாஸ்கர் கருத்துக்கு பதிலளித்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
“என்னைக் கிழிச்சுத் தொங்கவிட்டுடார்!”- ஜடேஜாவின் அதிரடியும்; மஞ்சரேக்கரின் பல்டியும்!
“என்னைக் கிழிச்சுத் தொங்கவிட்டுடார்!”- ஜடேஜாவின் அதிரடியும்; மஞ்சரேக்கரின் பல்டியும்!
"அன்ப்ளாக் செய்யுங்கள்" மஞ்ரேக்கரை கலாய்த்த மைக்கேல் வாகன்
"அன்ப்ளாக் செய்யுங்கள்" மஞ்ரேக்கரை கலாய்த்த மைக்கேல் வாகன்
“போதும், போதும் நிறுத்துங்க!”- தன்னை விமர்சித்த முன்னாள் வீரருக்கு ஜடேஜா கொடுத்த ‘பன்ச்’
“போதும், போதும் நிறுத்துங்க!”- தன்னை விமர்சித்த முன்னாள் வீரருக்கு ஜடேஜா கொடுத்த ‘பன்ச்’
"ரிஷப் பன்ட் இந்த தலைமுறையின் விரேந்தர் சேவாக்" : மஞ்ரேக்கர்
"ரிஷப் பன்ட் இந்த தலைமுறையின் விரேந்தர் சேவாக்" : மஞ்ரேக்கர்
Advertisement