சென்னைக்கு எதிரான போட்டியில் ஃபார்முக்கு திரும்பிய மனீஷ் பாண்டே

Updated: 24 April 2019 19:09 IST

மனீஷ் பாண்டே, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி 49 பந்தில் 83 ரன்கள் குவித்தார். 

Manish Pandey Finds His Form In His Comeback Against CSK
மனீஷ் பாண்டே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமான ஃபார்முக்கு திரும்பியுள்ளார். © BCCI/IPL

மனீஷ் பாண்டே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமான ஃபார்முக்கு திரும்பியுள்ளார். மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மனீஷ் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். ஆறு போட்டிகளில் ஆடி 54 ரன்கள் குவித்திருந்தார் அவர். வில்லியம்சன் சொந்த காரணங்களுக்காக விலக மூன்றாம் நிலை வீரராக களமிறங்கினார் மனீஷ் பாண்டே. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி 49 பந்தில் 83 ரன்கள் குவித்தார். 

"வில்லியம் சன் விலகியதையடுத்து மனீஷ் அந்த இடத்தை சரியாக நிரப்புகிறார்" என்று சன்ரைசர்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். 

ஹர்பஜன் பந்தில் பாரிஸ்டோ டக் அவுட் ஆனதும் ஒரு விக்கெட் இழப்புக்கு 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மனீஷ் பாண்டே களமிறங்கி அசத்தினார். 

அதன் பின் அதிரடியாக ஆடிய மனீஷ் பாண்டே இந்த ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தை அடித்தார். ஆனாலும் சென்னை அணியின் பேட்டிங் சிரப்பாக இருந்ததால் சென்னை கடைசி ஒரு பந்து மீதமிருக்கையில் வென்று அசத்தியது. 

Comments
ஹைலைட்ஸ்
  • சிஎஸ்கே ஹைதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது
  • மனீஷ் பாண்டே, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி 49 பந்தில் 83ரன்கள் குவித்தார்
  • ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
"ஸ்ரேயாஸ், மணீஷ் பாண்டே 4வது இடத்துக்கு சிறந்தவர்கள்" - விக்ரம் ராத்தோர்!
"ஸ்ரேயாஸ், மணீஷ் பாண்டே 4வது இடத்துக்கு சிறந்தவர்கள்" - விக்ரம் ராத்தோர்!
தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணிக்கு இவர்கள் தான் கேப்டன்!
தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணிக்கு இவர்கள் தான் கேப்டன்!
ஐபிஎல் 2019: பும்ரா, பாண்ட்யா சிறப்பான ஆட்டம்... ப்ளே ஆஃப் சுற்றில் மும்பை!
ஐபிஎல் 2019: பும்ரா, பாண்ட்யா சிறப்பான ஆட்டம்... ப்ளே ஆஃப் சுற்றில் மும்பை!
சென்னைக்கு எதிரான போட்டியில் ஃபார்முக்கு திரும்பிய மனீஷ் பாண்டே
சென்னைக்கு எதிரான போட்டியில் ஃபார்முக்கு திரும்பிய மனீஷ் பாண்டே
பாகிஸ்தானுக்கு எதிராக மணிஷ் பாண்டே பிடித்த பலே கேட்ச்; குவியும் பாராட்டு!
பாகிஸ்தானுக்கு எதிராக மணிஷ் பாண்டே பிடித்த பலே கேட்ச்; குவியும் பாராட்டு!
Advertisement