சன்ரைசர்ஸ் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி #Highlights

Updated: 31 March 2019 19:34 IST

முதல் போட்டியில் சென்னையிடமும் இரண்டாம் போட்டியில் மும்பையிடமும் தோல்வி கண்டது பெங்களூர் அணி

Live IPL Score, SRH vs RCB Live Cricket Score: Winless Royal Challengers Bangalore Aim To Get Off The Mark Against SunRisers Hyderabad
டாப் பார்மில் உள்ளது சன்ரைசர்ஸ் அணி © BCCI/IPL

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும் மோதுகின்றன.

முதல் போட்டியில் சென்னையிடமும் இரண்டாம் போட்டியில் மும்பையிடமும் தோல்வி கண்டது பெங்களூர் அணி. கோலி, டி வில்லியர்ஸ் என வீர்ர்கள் இருந்தும் வெற்றி பெற முடியாமல் தவிக்கிறது பெங்களூர் அணி.

சன்ரைசர்ஸ் அணிக்கு டேவிட் வார்னர் டாப் பார்மில் உள்ளார். பந்துவீச்சுக்கு பெயர் போன சன்ரைசர்ஸ் அணி, கோலிக்கு கடும் சவாலை கொடுப்பார்கள் என கருதப்படுகிறது.

ஸ்கோர்கார்டு தமிழில்

தமிழில் வர்ணனை

வரைபடம் தமிழில்

காயம் காரணமாக வில்லியம்சன் விளையாடவில்லை. அதனால் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக புவனேஷ்வர் குமார் செயல்படுகிறார்.

டாஸ் வென்ற ஆர்சிபி அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் அணிக்காக டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேரிஸ்டவ் துவக்க வீரராக களமிறங்கினர்.

ஐந்து ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 51/0 . வார்னர் 27 ரன்களும் பேர்ஸ்டோ 24 ரன்களும் எடுத்துள்ளனர். 

அதிரடியாக ஆடிய பேர்ஸ்டோ, அரைசதத்தை கடந்தார். பேர்ஸ்டோ 67 ரன்கள் குவிக்க வார்னர் 38 ரன்கள் குவிக்க சன்ரைசர்ஸ் அணி பத்து ஓவர்களில் 105/0 குவித்துள்ளது.

சிக்சர் பவுண்டரி என அமர்க்களப்படுத்திய பேரிஸ்டோ, சதம் அடித்தார். மறுமுனையில் வார்னர் அரைசதத்தை கடந்து விலையாடி கொண்டிருக்கிறார். 16 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 184/0. பேரிஸ்டோ 114 ரனகளிலும் வார்னர் 69 ரன்களிலும் குவித்துள்ளனர்.

பேர்ஸ்டோ 114 ரன்களில் அவுட் ஆனார். பின் வார்னர் தன் சரவெடியை காட்ட, அவரும் சதம் அடித்தார். சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 231/2. பெங்களூர் அணி இந்த போட்டியை வெல்ல, 232 ரன்கள் தேவை.

இமாலய இலக்கை நோக்கி பேட்டிங் துவங்கிய ஆர்சிபி அணி, முதல் ஐந்து ஓவர்களுக்குள் மூன்று விக்கெட்களை இழந்த்து. டி வில்லியர்ஸ் 1 ரன்னுக்கு கிளின் போல்ட் ஆக, விராட் கோலி வார்னரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக ஆர்சிபி அணியின் நம்பிக்கை முற்றிலும் முடிந்தது. தொடர்ந்து மொயின் அலி ரன் அவுட் ஆக, ஆர்சிபி அணி ஏழு ஓவர்களில் 35/5.

232 என்னும் இமாலய இலக்கை செய்யும் ஆர்சிபி, துவக்கத்திலையே விக்கெட்களை இழந்து தடுமாறியது. 13 ஓவர்களில் ஆர்சிபி அணி 72/6.

காலின் டி 37 ரன்கள் அடித்தார். இறுதியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சன்ரைசர்ஸ் அணியின் முகமது நமி நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார். 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஹைதராபாத்துடன் தோல்வி... கோலி மற்றும் ஆர்சிபியை கலாய்த்த நெட்டிசன்கள்
ஹைதராபாத்துடன் தோல்வி... கோலி மற்றும் ஆர்சிபியை கலாய்த்த நெட்டிசன்கள்
ஐபிஎல் 2019: குறைந்த வயதில் ஐபிஎல் ஆடிய வீரர் ப்ரயாஸ் பர்மன்
ஐபிஎல் 2019: குறைந்த வயதில் ஐபிஎல் ஆடிய வீரர் ப்ரயாஸ் பர்மன்
சன்ரைசர்ஸ் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி #Highlights
சன்ரைசர்ஸ் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி #Highlights
ஐபிஎல் 2019: ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஆட்டம் எங்கு, எப்போது, எதில் பார்க்கலாம்?
ஐபிஎல் 2019: ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஆட்டம் எங்கு, எப்போது, எதில் பார்க்கலாம்?
Advertisement