கொல்கத்தா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி. #Liveupdates

Updated: 07 April 2019 22:51 IST

கொல்கத்தா அணி ஆறு புள்ளிகளும் ராஜஸ்தான் அணி இரண்டு புள்ளிகளும் பெற்றுள்ளன

Live IPL Score, RR vs KKR Live Cricket Score: Rajasthan Royals Face Kolkata Knight Riders Test At Home
இன்றைய போட்டி, ஜெய்ப்பூரில் நடக்கிறது © BCCI/IPL

ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஜெய்ப்பூரில் எதிர்கொள்கிறது.

நான்கு போட்டியில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. பட்லர், ஸ்மித், ஸ்டோக்ஸ் என நட்சத்திர வீரர்கள் இருந்தும் ராஜஸ்தான் அணியால் பெரிய வெற்றியை பதிவு முடியவில்லை.

ரஸல் என்னும் ஒன்றை ஆளே கொல்கத்தா அணிக்கு மூன்று வெற்றிகளை தேடி தந்துள்ளார். ஆர்சிபி அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடி 200+ ரன்களை கொல்கத்தா அணி சேஸ் செய்ய உதவினார்.

இன்றைய போட்டியில் கொல்கத்தா அணியின் வெற்றி நடையை ராஜஸ்தான் அணியால் தடுக்குமா என்பதை பார்ப்போம்.

ஸ்கோர்கார்டு தமிழில்

தமிழில் வர்ணனை

வரைபடம் தமிழில்

டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தனர். 

ராஜஸ்தான் அணிக்கு கேப்டன் ரஹானே மற்றும் பட்லர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ரஹானே விரைவில் அவுட் ஆக, புது பேட்ஸ்மேனாக ஸ்மித் களத்திற்கு வந்தார். 10 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 56/1.

பட்லர் 37 ரன்களில் அவுட் ஆக, அடுத்து வந்த ராகுல் த்ரிப்பத்தியும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ராகுல் ஆறு ரன்களில் அவுட் ஆக, ஸ்மித் உடன் இணைந்தார் பென் ஸ்டோக்ஸ். ஸ்டிவ் ஸ்மித் 73 ரன்களும் பென் ஸ்டோக்ஸ் 7 ரன்களும் எடுக்க, ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 139 ரன்கள் குவித்தது.

சுனில் நரேன் மற்றும் கிறிஸ் லின் கொல்கத்தா அணிக்கு அதிரடி துவக்கத்தை தந்தனர். ஆறு பவுண்டரி, மூன்று சிக்சர்கள் என அதிரடியான 47 ரன்கள் குவித்த நரேன், ஷ்ரேயஸ் கோபால் பந்துவீச்சில் அவுட் ஆனார். 10 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 105/1. கிறிஸ் லின் 43 ரன்களிலும் ராபின் உத்தப்பா 9 ரன்களிலும் விளையாடி வருகின்றனர். கொல்கத்தா அணி வெற்றி பெற இன்னும் 60 பந்துகளில் 35 ரன்கள் மட்டுமே தேவை.  

அரைசதம் கடந்து லின் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து உத்தப்பாவுடன் இணைந்தார் கில். 140 ரன்கள் இலக்கை கொல்கத்தா அணி 13.5 ஓவர்களில் சேஸ் செய்தனர். இதன் மூலம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
லைட் எரிந்தாலே அவுட் ஐபிஎல் சர்சசைக்கு தீர்வு சொல்லும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன்
''லைட் எரிந்தாலே அவுட்'' ஐபிஎல் சர்சசைக்கு தீர்வு சொல்லும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன்
ஸ்டெம்ப்ல பட்டுச்சு... லைட் எரிஞ்சுச்சு... ஆனா அவுட் இல்ல!
ஸ்டெம்ப்ல பட்டுச்சு... லைட் எரிஞ்சுச்சு... ஆனா அவுட் இல்ல!
ராஜஸ்தானை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த கொல்கத்தா
ராஜஸ்தானை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த கொல்கத்தா
கொல்கத்தா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி. #Liveupdates
கொல்கத்தா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி. #Liveupdates
Advertisement