டெல்லி அணி நான்கு விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி #Highlights

Updated: 07 April 2019 19:22 IST

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இந்த போட்டி நடைப்பெறுகிறது.

Live IPL Score, RCB vs DC Live Cricket Score: Royal Challengers Bangalore Seek First Win, Host Delhi Capitals
இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் உள்ளது ஆர்சிபி © BCCI/IPL

இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் சந்திக்கிறது.

ஐந்து போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி கூட பெற முடியாமல் திணறி வருகிறது பெங்களூர் அணி. சென்ற போட்டியில் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் ‘பேக் டு பார்ம்' வந்தாலும் அவர்களால் வெற்றியை பெற முடியவில்லை. ரஸல் என்னும் சுனாமி ஆர்சிபி அணியின் வெற்றியை தட்டி பறித்தார்.

டெல்லி அணி, விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டில் வெற்றி மூன்றில் தோல்வி என நான்கு புள்ளிகள் பெற்று தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ளனர்.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்று ஐபிஎல் 2019 தொடரின் முதல் வெற்றியை ஆர்சிபி அணி பதிவு செய்யுமா அல்லது டெல்லி அணி தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஸ்கோர்கார்டு தமிழில்

தமிழில் வர்ணனை

வரைபடம் தமிழில்

டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இரண்டு அணிகளும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆர்சிபி அணியின் துவக்க வீரர்களாக பார்த்திவ் பட்டேல் மற்றும் விராத் கோலி களமிறங்கினர். டெல்லி அணிக்கு முதல் ஓவரை இஷாந்த சர்மா முதல் ஓவரை வீசினார்.

பெங்களூர் அணியின் துவக்க வீரரான பார்த்திவ் பட்டேல் (9) கிறிஸ் மோரிஸ் பந்துவீச்சில் அவுட் ஆனார். அவ்ரை தொடர்ந்து டி வில்லியர்ஸ் (17) ரபடா பந்துவீச்சில் அவுட் ஆக, விராத் கோலி மற்றும் ஸ்டாய்னிஸ் விளையாடி வருகின்றனர். கோலி 20 ரன்களும் ஸ்டாய்னிஸ் 14 ரன்களும் அடிக்க, ஆர்சிபி அணி 10 ஓவர்களில் 63/2.

மார்கஸ் ஸ்டாய்னிஸ் (15) ரன்களில் அக்‌சர் பட்டேல் பந்தில் அவுட் ஆனார். மூன்று சிக்சர்கள் அடித்த மொயன் அலி (32) சந்தீப் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் ஆனார். விராத் கோலி (41), அக்‌ஷதீப் (19), பவன் நேகி (0) ஆகியோர் அடுத்தடுத்து ரபடா பந்துவீச்சில் அவுட் ஆக, ஆர்சிபி அணி தட்டு தடுமாறியது.  இறுதியில் ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 149/8. டெல்லி அணியின் பந்துவீச்சாளர் ரபடா, நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார்.

டெல்லி அணிக்கு தவான் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினார்கள். ஷிகர் தவான் ரன் எடுக்காமல் அவுட் ஆக, ப்ரித்வி தொடர்ந்து ஐந்து பவுண்டரிகள் அடித்து அசத்தினார். ப்ரித்வி ஷா 28 ரன்களில் அவுட் ஆக, டெல்லி அணி பத்து ஓவர்களில் 80/2. ஷ்ரேயஸ் மற்றும் இங்ரம் களத்தில் உள்ளனர்.

இங்ரம் மொயின் அலி பந்து வீச்சில் 22 ரன்களுக்கு அவுட் ஆனார். அதன்பின் ஷ்ரேயஸ் உடன் இணைந்தார் பண்ட். ஷ்ரேயஸ் தனது அரைசதத்தை கடந்தார். அவர் 67 ரன்களுக்கு அவுட் ஆனார். மோரிஸ் ரன் எடுக்காமல் அவுட் ஆக, தொடர்ந்து பண்ட் 18 ரன்களில் அவுட் ஆனார். இறுதியில் டெல்லி அணி பெங்களூர் அணியின் 150 ரன்களை 18.5 ஓவர்களில் சேஸ் செய்து நான்கு விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது.  

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"மன்னித்துக் கொண்டே இருக்க முடியாது" தோல்விக்கு மனம் வருந்திய கோலி!
"மன்னித்துக் கொண்டே இருக்க முடியாது" தோல்விக்கு மனம் வருந்திய கோலி!
டெல்லி அணி நான்கு விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி #Highlights
டெல்லி அணி நான்கு விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி #Highlights
ரோஹித் சிக்ஸருக்கு கோலியின் நக்கலான ஸ்மைல்!
ரோஹித் சிக்ஸருக்கு கோலியின் நக்கலான ஸ்மைல்!
Advertisement