
பெங்களூருவுக்கு எதிரான ஐ.பி.எல். ஆட்டத்தில் மும்பை அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. பெங்களூரு அணி தனது 2-வது வெற்றியை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
முன்தாக பெங்களூருவும், மும்பையும் மோதியபோது 6 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றிருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பெங்களூரு அணி சிறப்பான திறமையை வெளிப்படுத்தலாம்.
கடந்த போட்டியில் பஞ்சாபை வீழ்த்தி பெங்களூரு தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதற்கு அதிரடி வீரர் டிவில்லியர்ஸ், கேப்டன் கோலி ஆகியோர் முக்கிய காரணமாக இருந்தனர்.
பந்து வீச்சை பொறுத்தளவில் சாஹல் மட்டும் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி வருகிறார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இன்றைக்கு வெற்றி தேவைப்படுகிறது.
இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.