8 ரன்னுக்குள் 7 விக். வீழ்த்தி டெல்லியை வென்றது பஞ்சாப்!!...#Highlights

Updated: 02 April 2019 00:06 IST

வலுவான தொடக்கம் அமைந்தபோதிலும் பெரிய ஸ்கோரை அடிப்பதற்கு பஞ்சாப் வீரர்கள் தவறினர். டெல்லியின் சிறப்பான பந்து வீச்சு பஞ்சாபின் ரன் குவிப்பை முடக்கியது.

Live IPL Score, KXIP vs DC Live Cricket Score: Kings XI Punjab Host Delhi Capitals, Look To Continue Winning Streak At Home
டேவிட் மில்லரும், சர்ப்ராஸும் நல்ல பார்ட்னர்ஷிம் அமைத்தனர். © BCCI/IPL

பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெறுவதற்கு ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 

பஞ்சாபின் தொடக்க பேட்ஸ்மேன்களாக கே.எல். ராகுலும், சாம் குரனும் களமிறங்கினர். ராகுல் 15 ரன்களிலும், குரன் 20 ரன்களிலும் வெளியேற அடுத்து வந்த அதிரடி பேட்ஸ்மேன் மயங்க் அகர்வால் 6 ரன் எடுத்திருந்த போது ரன் அவுட் ஆனார். இதன்பின்னர் சர்ப்ராஸ் - டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தனர். 

இந்த இணை டெல்லி பந்து வீச்சுக்கு சவாலாக இருந்தது. இருவரும் அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டியதால் பஞ்சாபின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. 39 ரன் எடுத்தபோது கீப்பிங் கேட்ச் முறையில் சர்ப்ராஸ் வெளியேற, அடுத்த சில நிமிடங்களிலும் மில்லரும் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 

இதன்பின்னர் ரன் குவிப்பு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது. 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 166 ரன்களை எடுத்தது. 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களம் இறங்கியுள்ளது. 

இதுவரை நடந்த ஆட்டங்களில் 3 போட்டிகளில் விளையாடி டெல்லியும், பஞ்சாபும் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. 

பாயின்ட்ஸ் டேபிளில் டெல்லி அணி 4-வது இடத்தில் இருக்கிறது. இரு அணிகளும் தங்களது 3-வது வெற்றியை எட்டும் முனைப்பில் உள்ளன. 

கடந்த சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய பஞ்சாப், 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 177 ரன்களை சேஸ் செய்து வென்றதால் மனதளவில் பஞ்சாப் அணி வலிமையாக காணப்படுகிறது. 

அதே நாளில் கொல்கத்தாவை சூப்பர் ஓவரில் டெல்லி வென்றது. 

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 14 ரன் வித்தியாசத்தில் வென்று பஞ்சாப் தனது 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

167 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

முன்னதாக ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 166 ரன்களை எடுத்தது.

பஞ்சாபின் தொடக்க பேட்ஸ்மேன்களாக கே.எல். ராகுலும், சாம் குரனும் களமிறங்கினர். ராகுல் 15 ரன்களிலும், குரன் 20 ரன்களிலும் வெளியேற அடுத்து வந்த அதிரடி பேட்ஸ்மேன் மயங்க் அகர்வால் 6 ரன் எடுத்திருந்த போது ரன் அவுட் ஆனார். இதன்பின்னர் சர்ப்ராஸ் - டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தனர்.

இந்த இணை டெல்லி பந்து வீச்சுக்கு சவாலாக இருந்தது. இருவரும் அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டியதால் பஞ்சாபின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. 39 ரன் எடுத்தபோது கீப்பிங் கேட்ச் முறையில் சர்ப்ராஸ் வெளியேற, அடுத்த சில நிமிடங்களிலும் மில்லரும் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

இதன்பின்னர் ரன் குவிப்பு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது. 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 166 ரன்களை எடுத்தது. 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களம் இறங்கியது.

ப்ரித்வி ஷா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். தவான் 30 ரன்களும், ஷ்ரேயாஸ் 28 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை அளித்தனர்.

அடுத்து வந்த ரிஷப் பந்த் 39 ரன்களும், இங்ராம் 38 ரன்களும் எடுத்தனர். 144 ரன்கள் எடுத்தபோது 4 விக்கெட்டுகளை மட்டுமே டெல்லி இழந்திருந்தது.அடுத்த 8 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது டெல்லி.

144 ரன்னுக்கு 3 விக்கெட் என்ற நிலையில் டெல்லி இருந்தபோது அந்த அணிதான் வெற்றி பெறும் என அடித்து சொல்லப்பட்டது.

ஆனால் ஷமி, சாம் குரனின் மேஜிக்கால் டெல்லி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தது. கடைசி 8 ரன்னில் டெல்லி 7 விக்கெட்டுகளை இழந்ததுதான் பரிதாபம்.

இந்த ஐ.பி.எல்.சீரிஸில் பெஸ்ட் பந்து வீச்சாக பஞ்சாபின் பவுலிங்கை சொல்லலாம்.

ஸ்கோர்கார்டு தமிழில்

தமிழில் வர்ணனை

வரைபடம் தமிழில்

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ப்ரீத்தி ஸிந்தாவுடன் பாங்க்ரா டான்ஸ் ஆடிய சாம் குரான்!
ப்ரீத்தி ஸிந்தாவுடன் பாங்க்ரா டான்ஸ் ஆடிய சாம் குரான்!
சாம் குரானின் ஹாட்ரிக்கால் டெல்லியை மிரட்டிய கிங்ஸ் லெவன் பஞ்சாப்

Advertisement