சென்னை அணி ஐந்து விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி #Highlights

Updated: 14 April 2019 19:51 IST

டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணியில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. கொல்கத்தா அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.  

Live IPL Score, KKR vs CSK, Live Cricket Score: CSK Win Toss, Opt To Bowl Against KKR At Eden Gardens
தன் வெற்றிநடையை தொடரவே சென்னை அணி எண்ணும் © BCCI/IPL

இன்று கொல்கத்தாவில் நடக்கும் ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் மோதுகின்றன. இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடி ஆறு வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது சென்னை அணி.

கொல்கத்தா அணி ஏழு போட்டிகளில் நான்கு வெற்றி மூன்று தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணியில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. கொல்கத்தா அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.  

ஸ்கோர்கார்டு தமிழில் 

தமிழில் வர்ணனை  

வரைபடம் தமிழில்  

கொல்கத்தா அணியின் துவக்கவீரர் கிறிஸ் லின் அதிரடியாக 82 ரன்கள் குவித்தார். அவரை தவிர வேறு வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 161 ரன்கள் மட்டுமே குவித்தார்.

லின், ரஸல் ஆகியோரின் விக்கெட்கள் உட்பட நான்கு விக்கெட்களை வீழ்த்தினார் இம்ரான் தாஹிர். தாகூர் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். 

சென்னை அணிக்கு டு பிளஸிஸ் அதிரடியான துவக்கத்தை கொடுத்தார். ஒரு முனையில் விக்கெட்கள் விழுந்தாலும், மறுமுனையில் ரெய்னா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐபிஎல் தொடரில் தனது 37 வது அரைசதத்தை ரெய்னா அடித்தார். இறுதியில் ஜடேஜா ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்தார். சென்னை அணி ஐந்து விக்கெட்கள் இழந்து 162 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஐந்து விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது சென்னை.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
''தொப்பி எப்படி போடணும்'' ப்ராவோவுக்கு க்ளாஸ் எடுத்த தோனி மகள் ஸிவா!
சென்னை அணி ஐந்து விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி #Highlights
சென்னை அணி ஐந்து விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி #Highlights
சிஎஸ்கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆட்டம் எங்கு, எப்போது, எதில் பார்க்கலாம்?
சிஎஸ்கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆட்டம் எங்கு, எப்போது, எதில் பார்க்கலாம்?
கொல்கத்தாவை ஈடன் கார்டனில் மிரட்டுமா சி.எஸ்.கே?
கொல்கத்தாவை ஈடன் கார்டனில் மிரட்டுமா சி.எஸ்.கே?
Advertisement