சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி #Highlights

Updated:06 April 2019 19:41 IST

சென்னை அணியின் நட்சத்திர வீரர் பிராவோ, காயம் காரணமாக இரண்டு வாரங்கள் விளையாட மாட்டார்

Live IPL Score, CSK vs KXIP Live Cricket Score: Chennai Super Kings, Kings XI Punjab Vie For Top Spot
சென்னை மற்றும் பஞ்சாப் அணி ஆறு புள்ளிகள் பெற்றுள்ளது © BCCI/IPL

இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிங்ஸ் XI பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டி நடைப்பெறுகிறது.

இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றது சென்னை அணி. பஞ்சாப் அணியும் மூன்று வெற்றி ஒரு தோல்வி என ஆறு புள்ளிகள் பெற்றுள்ளது.

சென்னை அணியின் நட்சத்திர வீரர் பிராவோ, காயம் காரணமாக இரண்டு வாரங்கள் விளையாட மாட்டார். மேலும் பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் சென்னனி சேப்பாக்கம் மைதானத்தில் அதிகம் விளையாடி இருப்பதால், இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,

சென்னை அணியின் துவக்க வீரர்கள் வாட்சன் மற்றும் அம்பத்தி ராயுடு எதிர்ப்பார்த்த அளவிற்கு விளையாடதது சென்னை அணிக்கு சற்று பின்னடைவே.

ஸ்கோர்கார்டு தமிழில்

தமிழில் வர்ணனை

வரைபடம் தமிழில்

டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு.  டு பிளஸிஸ், ஸ்கார்ட் மற்றும் ஹர்பஜன் சிங் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

ஐந்து ஓவர்களில் சென்னை அணி 47/0. வாட்சன் மற்றும் டுபிளஸிஸ் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.

வாட்சன், அஷ்வின் பந்துவீச்சில் சாம்யிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவருக்கு பின் ரெய்னா களத்திற்கு வந்தார். 10 ஓவர்களில் சென்னை அணி 71/1.

டுபிளஸிஸ் மற்றும் ரெய்னா அடுத்து அடுத்து அஷ்வின் பந்துவீச்சில் அவுட் ஆக, சென்னை அணி சிறு தடுமாற்றம் கண்டது. 15 ஓவர்களில் சென்னை அணி 108/3. 

கடைசி கட்டத்தில் தோனி அதிரடி கட்ட, சென்னை அணி 20 ஓவர்களில் 160 ரன்கள் குவித்தது. தோனி 37 ரன்கள் குவித்தார்.

பஞ்சாப் அணியின் துவக்க வீரர் கெயிலின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் ஹர்பஜன் சிங். மயன்க் அகர்வால் ரன் எதுவம் எடுக்காமல் அவுட் ஆக. 

பஞ்சாப் அணியின் துவக்க வீரர் கெயிலின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார் ஹர்பஜன் சிங். மயன்க் அகர்வால் ரன் எதுவம் எடுக்காமல் அவுட் ஆக. பஞ்சாப் அணி ஐந்து ஓவர்களில் 35/2.

ராகுல் மற்றும் சர்ப்ராஸ் கான் நன்றாக ஆடி கொண்டிருக்க, பஞ்சாப் அணி 10 ஓவர்களில் 71/2. 

15 ஓவர்களில் பஞ்சாப் அணி 105/2. பஞ்சாப் அணி இந்த போட்டியை வெல்ல இன்னும் 30 பந்துகளில் 56 ரன்கள் தேவை.

20 ஓவர்களில் பஞ்சாப் அணியால் 138 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐந்து போட்டிகளில் விளையாடி நான்காவது வெற்றியை பதிவு செய்தது சென்னை அணி.

  Comments
  தொடர்புடைய கட்டுரைகள்
  சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி #Highlights
  சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி #Highlights
  ஐபிஎல் 2019ல் சேப்பாக்கத்தில் மோதும் தோனி, அஷ்வின்!
  ஐபிஎல் 2019ல் சேப்பாக்கத்தில் மோதும் தோனி, அஷ்வின்!
  Advertisement