நைட் ரைடர்ஸை கவலையில் ஆழ்த்தும் குல்தீப்பின் மோசமான ஃபார்ம்!

Updated: 23 April 2019 15:47 IST

இந்தியாவின் மிகச்சிறந்த சுழற்பந்துவீச்சாளராக 2019 உலகக் கோப்பையில் முன்னிறுத்தப்படும் குல்தீப் யாதவின் சமீபத்திய ஃபார்ம் கவலையளிக்கும் விதமாக மாறியுள்ளது.

Kuldeep Yadav’s Poor Form Worries Kolkata Knight Riders
கொல்கத்தா அணிக்காக 9 போட்டிகளில் ஆடி வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே குல்தீப் வீழ்த்தியுள்ளார். © AFP

இந்தியாவின் மிகச்சிறந்த சுழற்பந்துவீச்சாளராக 2019 உலகக் கோப்பையில் முன்னிறுத்தப்படும் குல்தீப் யாதவின் சமீபத்திய ஃபார்ம் கவலையளிக்கும் விதமாக மாறியுள்ளது. கொல்கத்தா அணிக்காக 9 போட்டிகளில் ஆடி வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே குல்தீப் வீழ்த்தியுள்ளார். அதேசமயம் எக்கானமி 8.66 என்ற அளவில் உள்ளது. தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வியை தழுவி ஆறாவது இடத்தில் உள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

இது குறித்து கூறிய கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் ''கண்டிப்பாக குல்தீப்பின் ஃபார்ம் கவலையளிக்கிறது. அவர் சென்ற போட்டியில் எங்களுக்கு பெரிதும் உதவவில்லை. அதனால், அவருக்கு ஒரு ஓய்வளித்து, அவரை புத்துணர்ச்சியுடன் களமிறக்க முயற்சி செய்யவுள்ளோம்'' என்றார்.

குல்தீப் ஒருநாள் தரவரைசையில் 7வது இடத்தில் உள்ளார். அவரோடு 8வது இடத்தில் உள்ள சஹால் மற்றும் ஜடேஜா இந்திய அணியை உலகக் கோப்பையில் சுழற்பந்துவீச்சில் வழிநடத்துவார்கள் என்று அணி நிர்வாகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

குல்தீப் 44 ஒருநாள் போட்டிகளில் ஆடி 87 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2017 ஐபிஎல் தொடரில் இவர் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

குல்தீப் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களில் 59 ரன்களை வாரி வழங்கிய பின் சன் ரைசர்ஸ் உடனான போட்டியில் ஓய்வளிக்கப்பட்டுள்ளார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஆசியா லெவன்-வேர்ல்ட் லெவன்: விராட் கோலியுடன் 6 இந்திய வீரர்கள் தேர்வு?
ஆசியா லெவன்-வேர்ல்ட் லெவன்: விராட் கோலியுடன் 6 இந்திய வீரர்கள் தேர்வு?
2வது ஒருநாள்: முதல் போட்டியில் நடந்த தவறுகளை சரி செய்யுமா இந்தியா?
2வது ஒருநாள்: முதல் போட்டியில் நடந்த தவறுகளை சரி செய்யுமா இந்தியா?
"நாங்கள் தோனியை மிகவும் மிஸ் செய்கிறோம்" - வீடியோவில் உணர்ச்சிவசப்பட்ட சாஹல்!
"நாங்கள் தோனியை மிகவும் மிஸ் செய்கிறோம்" - வீடியோவில் உணர்ச்சிவசப்பட்ட சாஹல்!
ஒருநாள் போட்டிகளில் ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்!
ஒருநாள் போட்டிகளில் ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்!
ஒருநாள் போட்டிகளில் 2 ஹாட்ரிக் பெற்ற முதல் இந்தியர் ஆனார் குல்தீப் யாதவ்!
ஒருநாள் போட்டிகளில் 2 ஹாட்ரிக் பெற்ற முதல் இந்தியர் ஆனார் குல்தீப் யாதவ்!
Advertisement