அதிரடியாக ஆடி குல்தீப்பை அழவைத்த மொயின் அலி... தேற்றிய ரசிகர்கள்!

Updated: 20 April 2019 17:27 IST

ஆட்டத்தின் 16வது ஓவரை குல்தீப் வீச அதில் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை விளாசினார் மொயின் அலி. இது குல்தீப்பை பெருமளவில் பாதித்தது. அதன்பின் வந்த டைம் அவுட் ப்ரேக்கில் குல்தீப்பை ராணா தேற்றினார்.

Kuldeep Yadav Left In Tears By Moeen Ali
17வது ஓவரின் போது இந்த காட்சிகள் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகின. அதில் குல்தீப் கண்களில் நீர் வழிந்தது. © Hotstar/IPL

கொல்கத்தா, ஆர்சிபி இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் குல்தீப் வீசிய ஓவரில் ஆர்சிபி வீரர் மொயின் அலி 26 ரன்கள் விளாசினார்.இதனால், அழுதே விட்டார் குல்தீப் யாதவ். ஆட்டத்தின் 16வது ஓவரை குல்தீப் வீச அதில் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை விளாசினார் மொயின் அலி. இது குல்தீப்பை பெருமளவில் பாதித்தது. அதன்பின் வந்த டைம் அவுட் ப்ரேக்கில் குல்தீப்பை ராணா தேற்றினார்.

17வது ஓவரின் போது இந்த காட்சிகள் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகின. அதில் குல்தீப் கண்களில் நீர் வழிந்தது. இதனை இந்திய ரசிகர்கள் "கமான் குல்தீப் இது ஒரு ஆட்டம் தான் நீங்கள் சிறந்த பந்துவீச்சாளர்தான்" என தேற்றினர்.

வர்ணனையாளர் மொபெங்க்வாவும் குல்தீப்பை "இது ஒரு ஓவர் இதற்காக வருந்த வேண்டாம். இதையெல்லாம் நீங்கள் கடந்து வர வேண்டும்" என்றார்.

குல்தீப்பின் அந்த ஓவர்தான் ஆர்சிபி முன்னிலை பெற காரணமானது. அதன் பின் ஆர்சிபி 5 ஓவரிஒல் 91 ரன்கள் குவித்தது. 

குல்தீப் வீசிய 4 ஓவரில் ஆர்சிபி 59 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் ஸ்பின்னர் ஒருவரின் மோசமான பந்துவீச்சாக இது பதிவானது.

கோலி, மொயின் அலி அதிரடியால் ஆர்சிபி 213 ரன்கள் குவித்தது. ரஸல் அதிரடி காட்டியும் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா தோல்வியை தழுவியது.

Comments
ஹைலைட்ஸ்
  • மொயின் அலி 26 ரன்கள் எடுத்ததால் கண்ணீர் விட்டு அழுதார் குல்தீப்
  • குல்தீப் யாதவ் வீசிய ஓவரில் ஆர்சிபி 27 ரன்கள் எடுத்தது
  • டைம் அவுட் ப்ரேக்கில் குல்தீப்பை ராணா தேற்றினார்
தொடர்புடைய கட்டுரைகள்
2வது ஒருநாள்: "என்ன ஒரு டெடிக்கேஷன்"... ரிஷப் பன்ட்டை பாராட்டிய சஹால்!
2வது ஒருநாள்: "என்ன ஒரு டெடிக்கேஷன்"... ரிஷப் பன்ட்டை பாராட்டிய சஹால்!
உலகக் கோப்பை 2019: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்தியாவின் 11 பேர் யார்..?
உலகக் கோப்பை 2019: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்தியாவின் 11 பேர் யார்..?
தோனி குறித்த சர்ச்சை கருத்துக்கு விளக்கமளித்த குல்தீப் யாதவ்!
தோனி குறித்த சர்ச்சை கருத்துக்கு விளக்கமளித்த குல்தீப் யாதவ்!
'' தோனி தவறாக முடிவெடுப்பார். ஆனால், அவரிடம் சொல்ல முடியாது'' சர்ச்சையை ஏற்படுத்தும் குல்தீப் கருத்து!!
நைட் ரைடர்ஸை கவலையில் ஆழ்த்தும் குல்தீப்பின் மோசமான ஃபார்ம்!
நைட் ரைடர்ஸை கவலையில் ஆழ்த்தும் குல்தீப்பின் மோசமான ஃபார்ம்!
Advertisement