ஐபிஎல் தொடரை ட்ரோல் செய்த ரசிகருக்கு ஹாரி கர்னேவின் பதில்

Updated: 20 April 2019 19:40 IST

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற 32 வயதான கர்னே டி20 லீக்களில் ஆடி வருகிறார். புக்பேஷ், பாகிஸ்தான் லீக் போன்றவற்றில் ஆடி வருகிறார்.

Kolkata Knight Riders Pacer Harry Gurney Shuts Down Trolls Calling IPL “Clown Cricket”
ஹாரி கர்னே, இங்கிலாந்து அணிக்காக 10 ஒருநாள் மற்றும்  2 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். © BCCI/IPL

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரி கர்னே ஐபிஎல் தொடரில் அவரது பங்கேற்பு குறித்த விமர்சனங்களுக்கு அவர் பதிலளித்துள்ளார். "இங்கிலாந்து கவுண்டி போட்டிகளுக்கு திரும்பிவிடுங்கள்... நீங்கள் ஆடுவது ஒரு க்ளவுன் (கோமாளி) கிரிக்கெட்" என்ற ரசிகரின் விமர்சனத்துக்கு பதிலளித்துள்ளார். அதில் "ஐபிஎல் தான் உலகில் அதிக பேர் பார்க்கும் 6வது லீக் தொடர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கர்னே கொல்கத்தா ஆடிய கடைசி 4 போட்டிகளில் மூன்று போட்டிகளில் ஆடியுள்ளார். பெர்குசனுக்கு பதிலாக களமிறங்கிய அவரிந்த சீசனில் தான் அறிமுகமானார். துவக்க போட்டியில் 2/25 என அபாரமாக பந்து வீசினார்.

அடுத்து கொல்கத்தா சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சந்திக்கிறது.

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற 32 வயதான கர்னே டி20 லீக்களில் ஆடி வருகிறார். புக்பேஷ், பாகிஸ்தான் லீக் போன்றவற்றில் ஆடி வருகிறார்.

கர்னே 103 முதல்தர போட்டிகளில் 310 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்து அணிக்காக 10 ஒருநாள் மற்றும்  2 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • ஹாரி கர்னே ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு விளையாட தொடங்கியுள்ளார்
  • கர்னே கொல்கத்தா ஆடிய கடைசி 4 போட்டிகளில் மூன்று போட்டிகளில் ஆடியுள்ளார்
  • ஐபிஎல் தான் உலகில் அதிக பேர் பார்க்கும் 6வது லீக் தொடர்: கர்னே
தொடர்புடைய கட்டுரைகள்
ஐபிஎல் 2019: விதி மீறல் காரணமாக ரோஹித் ஷர்மாவுக்கு அபராதம்!
ஐபிஎல் 2019: விதி மீறல் காரணமாக ரோஹித் ஷர்மாவுக்கு அபராதம்!
பேட்டால் ஸ்டம்பை இடித்து கோவத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா!
பேட்டால் ஸ்டம்பை இடித்து கோவத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மா!
ஐபிஎல் தொடரை ட்ரோல் செய்த ரசிகருக்கு ஹாரி கர்னேவின் பதில்
ஐபிஎல் தொடரை ட்ரோல் செய்த ரசிகருக்கு ஹாரி கர்னேவின் பதில்
Advertisement