ஒற்றைக் கையில் கேட்ச் செய்து ரெய்னாவை வெளியேற்றிய பொலார்ட்

Updated: 04 April 2019 17:51 IST

சென்னைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ரெய்னாவை போலார்ட் ஒற்றைக்கையில் கேட்ச் செய்த முறை அனைவரையும் வியக்க வைத்தது.

Kieron Pollard Pulls Off One-Handed Catch, Leaves Twitter In Awe
2 பவுண்டரிகளுடன், 16 ரன்கள் எடுத்து அதிரடி மோடுக்கு மாறிய ரெய்னாவை கேட்ச் செய்து வெளியேற்றினார் பொலார்ட். © Twitter

மும்பை இந்தியன்ஸ் அணியின் போலார்ட் பெரிய ஷாட்களை ஆடி ஹிட் அடிப்பதில் வல்லவர் என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் அவரது அக்ரோபாட்டிங் திறமைகள் ட்விட்டரில் வைரலாகின. சென்னைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ரெய்னாவை ஒற்றைக்கையில் கேட்ச் செய்த முறை அனைவரையும் வியக்க வைத்தது. 2 பவுண்டரிகளுடன், 16 ரன்கள் எடுத்து அதிரடி மோடுக்கு மாறிய ரெய்னாவை கேட்ச் செய்து வெளியேற்றினார் பொலார்ட். 

முன்னதாக டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் குவித்தது. சூர்யகுமார்யாதவ் அபாரமாக ஆடி அரைசதமடித்தார். 

க்ருணால் பாண்ட்யா 42 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பாண்ட்யா 25, பொலார்ட் 17 ரன்களை கடைசி கட்டத்தில் அதிரடியாக குவிக்க மும்பை இந்தியன்ஸ் 170 ரன்களை கடந்தது.  சென்னை தரப்பில் ப்ராவோ, சஹார், ஜடேஜா, தாஹிர், மோஹித் ஷர்மா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. கேதர் ஜாதவ் மட்டும் அரைசதமடித்தார். மற்ற யாரும் ரன் குவிக்காததால் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
மும்பை போட்டியின் போது தோனியுடன் செல்ஃபி எடுத்த பாட்டி
மும்பை போட்டியின் போது தோனியுடன் செல்ஃபி எடுத்த பாட்டி
ஒற்றைக் கையில் கேட்ச் செய்து ரெய்னாவை வெளியேற்றிய பொலார்ட்
ஒற்றைக் கையில் கேட்ச் செய்து ரெய்னாவை வெளியேற்றிய பொலார்ட்
மான்கடிங் முறையில் அவுட் செய்ய தோனியை எச்சரித்த க்ருணால் பாண்ட்யா
மான்கடிங் முறையில் அவுட் செய்ய தோனியை எச்சரித்த க்ருணால் பாண்ட்யா
தோனி முன்பே ஹெலிகாப்டர் ஷாட் ஆடி அசத்திய ஹர்திக் பாண்ட்யா!
தோனி முன்பே ஹெலிகாப்டர் ஷாட் ஆடி அசத்திய ஹர்திக் பாண்ட்யா!
ஐபிஎல் 2019: 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வென்றது மும்பை! #Highlights
ஐபிஎல் 2019: 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வென்றது மும்பை! #Highlights
Advertisement