காயம் காரணமாக ப்ளே ஆஃப்பை மிஸ் செய்யும் கேதர் ஜாதவ்!

Updated: 06 May 2019 15:22 IST

உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர் கேதர் ஜாதவ் ஞாயிறன்று பஞ்சாப் அணியுடன் நடந்த ஆட்டத்தில் தோள்பட்டையில் காயமடைந்தார்.

Kedar Jadhav Likely To Miss Rest Of The Season With Shoulder Injury
ஆட்டத்தின் 14வது ஓவரில் பவுண்டரிக்கு சென்ற பந்தை தடுத்த போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. © BCCI/IPL

உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர் கேதர் ஜாதவ் ஞாயிறன்று பஞ்சாப் அணியுடன் நடந்த ஆட்டத்தில் தோள்பட்டையில் காயமடைந்தார். சென்னை அணியின் பயிற்சியாளர் ப்ளெமிங், "அவர் ப்ளே ஆஃப் போட்டிகளில் ஆடமாட்டார்" என அறிவித்துள்ளார். "அவருக்கு எக்ஸ்-ரே எடுக்கப்பட்டு வருகிறது அதன் பின்னரே அவரது உடல்நிலை குறித்து கூற முடியும்" என்றார்.

"அவரை இந்த தொடரில் மீண்டும் சென்னை அணியில் பார்க்க முடியாது. அவரது காயம் எந்த அளவில் உள்ளது என்பது சிகிச்சைக்கு பின் தெரியும்" என்றார். 

உலகக் கோப்பை அணியில் உள்ள வீரர்களுக்கு பிசிசிஐ பரிந்துரைத்த அளவுக்கு தீவிரமான காயம் கேதர் ஜாதவுக்கு இல்லை என்று கூறப்படுகிறது. 

இன்னும் சரியாக இந்தியாவின் உலகக் கோப்பை போட்டிக்கு ஒரு மாதம் இருக்கும்போது இந்த காயம் இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் அவரது உலகக் கோப்பை வாய்ப்பை மங்க செய்யும் என்று கூறப்படுகிறது.மேலும் கையில் ஏற்பட்ட காயத்தால் ஐபிஎல் தொடரில் அவர் பெரிதாக பந்துவீசவில்லை என்று கூறப்பட்டுள்ளது. 

ஆட்டத்தின் 14வது ஓவரில் பவுண்டரிக்கு சென்ற பந்தை தடுத்த போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அவரை அணியின் ஃபிசியோ டாமி சிம்செக் அழைத்து செல்ல, அவருக்கு பதிலாக முரளிவிஜய் ஃபீல்டிங் செய்தார்.

Comments
ஹைலைட்ஸ்
  • பவுண்டரிக்கு சென்ற பந்தை தடுத்த போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது
  • காயம் எந்த அளவில் உள்ளது என்பது சிகிச்சைக்கு பின் தெரியும்
  • அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் அவரது உலகக் கோப்பை வாய்ப்பை மங்க செய்யும்
தொடர்புடைய கட்டுரைகள்
தேசிய விளையாட்டு தினம்: கேதர் ஜாதவுடன் கோல்ஃப் விளையாடிய தோனி!
தேசிய விளையாட்டு தினம்: கேதர் ஜாதவுடன் கோல்ஃப் விளையாடிய தோனி!
பாண்ட்யாவுடன் ஹெலிகாப்ட்டர் முதல் ஸிவாவுடன் டான்ஸ் வரை – தோனி பிறந்தநாள் கொண்டாட்டம்
பாண்ட்யாவுடன் ஹெலிகாப்ட்டர் முதல் ஸிவாவுடன் டான்ஸ் வரை – தோனி பிறந்தநாள் கொண்டாட்டம்
உலகக் கோப்பை 2019: “நான் எங்கே களமிறங்கணும்னு…”- தினேஷ் கார்த்திக் ஓப்பன் டாக்
உலகக் கோப்பை 2019: “நான் எங்கே களமிறங்கணும்னு…”- தினேஷ் கார்த்திக் ஓப்பன் டாக்
உலகக் கோப்பை 2019: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்தியாவின் 11 பேர் யார்..?
உலகக் கோப்பை 2019: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்தியாவின் 11 பேர் யார்..?
உலகக்கோப்பை கிரிக்கெட் : இந்தியா - இங்கிலாந்து ஆட்டத்தில் கவனிக்கத்தக்க வீரர் கேதர் ஜாதவ்!!
உலகக்கோப்பை கிரிக்கெட் : இந்தியா - இங்கிலாந்து ஆட்டத்தில் கவனிக்கத்தக்க வீரர் கேதர் ஜாதவ்!!
Advertisement