"ஏற்றுக்கொள்ளவே முடியாது" தோல்விக்காக மனம் வருந்திய கேப்டன் கோலி!

Updated: 06 April 2019 16:44 IST

முதல் வெற்றியை அடைந்துவிடலாம் என்ற நோக்கில் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியது ஆர்சிபி. ஆனால், பந்துவீச்சில் ஆர்சிபி சொதப்பியதால், கேகேஆர் வெற்றி பெற்றது.

Virat Kohli Lashes Out At Bowlers After RCB vs KKR IPL 2019 Match
"கடைசி நான்கு ஓவர் பந்துவீச்சு நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று" என்று கூறியுள்ளார் விராட் கோலி. © BCCI/IPL

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதியதில் ஐந்தாவது முறையாக ஆர்சிபி இந்த சீசனில் தோற்றுள்ளது. இந்தப் போட்டி தோல்வியில் முடிந்ததற்கு அணியின் பந்துவீச்சாளர்கள் மீது தன்னுடைய வருத்தத்தை தெரிவித்தார் கோலி. முதல் வெற்றியை அடைந்துவிடலாம் என்ற நோக்கில் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியது ஆர்சிபி. ஆனால், பந்துவீச்சில் ஆர்சிபி சொதப்பியதால், கேகேஆர் வெற்றி பெற்றது. ஒரு பக்கம் பந்துவீச்சு சொதப்பினால், மறுபக்கம் ரஸல் பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் எடுத்து ரன்களை குவித்தார். 13 பந்தில் 48 ரன்கள் எடுத்து ஆட்டத்தை விறுவிறுப்பாக்கினார்.

2019 ஐபிஎல்லில் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோற்றுள்ளது ஆர்சிபி. இந்த முறை தோற்ற பிறகு கோலி, "கடைசி நான்கு ஓவர் பந்துவீச்சு நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று" என்று கூறியுள்ளார்.

"தோல்வி குறித்து யோசிக்கவே முடியவில்லை. கடைசி நான்கு ஓவர்கள் பந்துவீச்சை ஏற்றுக்கொள்ள முடியாது. வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போது மிக தெளிவாக விளையாட வேண்டியுள்ளது. இப்படி பந்துவீசினால், புள்ளிபட்டியலில் இப்போது இருக்கும் இடத்துக்கும் மட்டுமே ஆர்சிபி அணி தகுதியானதாக இருக்கும். இதற்கு ராக்கெட் சைன்ஸ் எல்லாம் இல்லை. கடினமான சூழ்நிலையை தைரியமாக கையாளவேண்டியுள்ளது. எதிர் அணியில் ரஸ்லை போன்றவர்கள் இருக்கும்போது இது சாத்தியமற்றது தான். ஆனால், சூழ்நிலையை கையாள வேண்டியுள்ளது" என்று பரிசளிப்பு விழாவில் கோலி கூறினார்.

விராட் கோலி 49 பந்தில் 84 ரன்கள் குவித்தார். ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார். ஆனால், 17 பந்துகள் மீதம் இருக்கும்போது அவர் அவுட் ஆனார்.
"நான் அவுட் ஆனது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. இன்னும் 20 அல்லது 25 ரன்கள் எடுத்திருக்க வேண்டும் என்று தோன்றியது. இன்னிங்க்ஸ் முடிவில் இந்த ரன்கள் போதுமானதாக இருக்கும் என்று நினைத்தேன்" என்றார்.

"இதுவரைக்கும் நடந்த போட்டிகள் இந்த சீசனில் சரியானதாக அமையவில்லை. ஆனால், வெற்றி பெற வாய்ப்பு இன்னும் இருக்கிறது. நம் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது" என்றார் விராட் கோலி.

Comments
ஹைலைட்ஸ்
  • 2019 ஐபிஎல்லில் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோற்றுள்ளது ஆர்சிபி
  • 13 பந்தில் 48 ரன்கள் எடுத்து ஆட்டத்தை விறுவிறுப்பாக்கினார் ரஸல்
  • "கடைசி நான்கு ஓவர் பந்துவீச்சு நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது" - கோலி
தொடர்புடைய கட்டுரைகள்
"கோலி எல்லாவற்றையும் மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது" - சவுரவ் கங்குலி!
"கோலி எல்லாவற்றையும் மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது" - சவுரவ் கங்குலி!
"விராட் கோலி உலகின் மிகச் சிறந்த கேப்டன்" - பாராட்டிய சோயிப் அக்தர்!
"விராட் கோலி உலகின் மிகச் சிறந்த கேப்டன்" - பாராட்டிய சோயிப் அக்தர்!
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா கோலி?
சாஹாவின் சிறப்பான விக்கெட் கீப்பிங்... பன்ட்டை காலாய்த்த ரசிகர்கள்!
சாஹாவின் சிறப்பான விக்கெட் கீப்பிங்... பன்ட்டை காலாய்த்த ரசிகர்கள்!
"கங்குலி, தோனியை விட விராட் கோலி தான் சிறந்தவர்" - கவுதம் கம்பீர்
"கங்குலி, தோனியை விட விராட் கோலி தான் சிறந்தவர்" - கவுதம் கம்பீர்
Advertisement