அறிமுக ஐபிஎல் தொடரிலேயே அசத்திய ஜானி பாரிஸ்டோ!

Updated: 22 April 2019 18:14 IST

ஐபிஎல் 2019: 63.57 சராசரியுடன் 158 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 445 ரன்களை குவித்தார் ஜானி பாரிஸ்டோ.

Jonny Bairstow Makes History On IPL Debut
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக களமிறங்கிய ஜானி பாரிஸ்டோவுக்கு இதுதான் முதல் ஐபிஎல் தொடர். © BCCI/IPL

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக களமிறங்கிய ஜானி பாரிஸ்டோவுக்கு இதுதான் முதல் ஐபிஎல். முதல் தொடரிலேயே அதிக ரன்களை குவித்துள்ளார். ஏப்ரல் 23ம் தேதி ஐபிஎல் தொடரிலிருந்து விலகி இங்கிலாந்து உலகக் கோப்பை அணியுடன் இணையும் பாரிஸ்டோ, இந்த ஐபிஎல் தொடரில் 445 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 3 அரைசதங்களும், ஒரு சதமும் அடங்கும். 29 வயதான பாரிஸ்டோ கொல்கத்தாவுக்கு எதிரான கடைசி போட்டியில் 80 ரன்கள் குவித்து அசத்தினார். 

63.57 சராசரியுடன் 158 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 445 ரன்களை குவித்தார் ஜானி பாரிஸ்டோ. இங்கிலாந்து திரும்பும் பாரிஸ்டோ உலகக் கோப்பைக்கு முன் நிறைய போட்டிகளில் ஆடவுள்ளதாக கூறினார்.

ஏப்ரல் 23ம் தேதி சென்னையுடனான ஆட்டத்துக்கு பிறகு உலகக் கோப்பை அணியில் இணையவுள்ளதாகவும், அதன்பின் பாகிஸ்தான் தொடர் மற்றும் 2 பயிற்சி ஆட்டங்களில் ஆடவுள்ளதாக தெரிவித்தார்.

உலகக் கோப்பைக்கு பின் ஆஷஷ் தொடரும் வருவதால், "தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடுவது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.

இங்கிலாந்து தனது பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. 

இங்கிலாந்து அணி உலகக் கோப்பையில் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • 2019 ஐபிஎல் தொடரில் 445 ரன்கள் எடுத்துள்ளார் ஜானி பாரிஸ்டோ
  • கொல்கத்தாவுக்கு எதிரான கடைசி போட்டியில் 80 ரன்கள் குவித்து அசத்தினார்
  • ஐபிஎல் தொடரிலிருந்து விலகி இங்கிலாந்து உலகக் கோப்பை அணியுடன் இணைகிறார்
தொடர்புடைய கட்டுரைகள்
நான்காம் நிலை வீரர் குறித்த யூகங்களுக்கு பதில் இல்லை - விஜய் ஷங்கர்
நான்காம் நிலை வீரர் குறித்த யூகங்களுக்கு பதில் இல்லை - விஜய் ஷங்கர்
"என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ள ஐபிஎல் உதவியது" - ஜானி பாரிஸ்ட்டோ
"என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ள ஐபிஎல் உதவியது" - ஜானி பாரிஸ்ட்டோ
ஐபிஎல் கேம் சேஞ்சர் பன்ட்டை உலகக் கோப்பை அணியில் சேர்க்காதது ஏன்?
ஐபிஎல் கேம் சேஞ்சர் பன்ட்டை உலகக் கோப்பை அணியில் சேர்க்காதது ஏன்?
எலிமினேட்டர் சுற்றில் வெற்றி: "எல்லார் முகத்திலும் மகிழ்ச்சியை பார்க்கிறேன்" - ஷ்ரேயாஸ்
எலிமினேட்டர் சுற்றில் வெற்றி: "எல்லார் முகத்திலும் மகிழ்ச்சியை பார்க்கிறேன்" - ஷ்ரேயாஸ்
இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் டெல்லியை எதிர்கொள்கிறது சென்னை!!
இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் டெல்லியை எதிர்கொள்கிறது சென்னை!!
Advertisement