"சிறந்த கேப்டனாக மாற கோலி, தோனி, ரோஹித்தான் காரணம்": ஷ்ரேயாஸ்

Updated: 11 May 2019 12:20 IST

இதுவரை ஐபிஎல் தொடர்களில் இறுதி போட்டிக்கு முன்னேறாத ஒரே அணி டெல்லிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Shreyas Iyer Says MS Dhoni, Virat Kohli, Rohit Sharma
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஷ்ரேயாஸ் இளம் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு 2019 ஐபிஎல் தொடரில் மூன்றவாவது இடத்தை பிடித்துள்ளார். © BCCI/IPL

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஷ்ரேயாஸ் இளம் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு 2019 ஐபிஎல் தொடரில் மூன்றவாவது இடத்தை பிடித்துள்ளார். சென்னைக்கு எதிராக தோல்வியை சந்தித்து இறுதி போட்டிக்கான வாய்ப்பை இழந்தது. போட்டிக்கு பின் அளித்த பேட்டியில் ஷ்ரேயாஸ் கூறும்போது "24 வயதான நான் தோனி, கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோருடன் ஒன்றாக நின்று டாஸ் போடுவது துவங்கி, ஆடுவது எனக்கு மிகப்பெரிய அனுபவத்தை தருகிறது" என்றார்.

"ஒரு கேப்டனாக உரிமையாளரையும், அணி நிர்வாகத்தையும் நாங்கள் நிறையவே மகிழ்ச்சியடைய செய்திருக்கிறோம். முடிவெடுப்பதில் உள்ள அழுத்தம், அணியாக சிறப்பாக செயல்படுவது என அணி இந்த வருடம் சிறப்பாக ஆடியுள்ளது" என்றார். 

"டெல்லி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இறுதி போட்டிக்கு முன்னேற முடியாமல் போனது. பவர்ப்ளேயில் அதிக ரன்களை குவிக்க முடியாததே தோல்விக்கு காரணம்" என்றார் ஷ்ரேயாஸ்.

"விக்கெட் கைகொடுக்கும் என்று நினைத்தோம். ஆனால் அது கைகொடுக்கவில்லை. பேட்ஸ்மேன்கள் தான் இதற்கு பொறுப்பேற்கிறோம்" என்றார்.

"சிறப்பான பார்ட்னர்ஷிப்கள் இல்லாமல் போனதே தோல்விக்கு காரணம்" என்றார் ஷ்ரேயாஸ். இதுவரை ஐபிஎல் தொடர்களில் இறுதி போட்டிக்கு முன்னேறாத ஒரே அணி டெல்லிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
IPL 2020: வீரர்களின் பட்டியல் மற்றும் ஏலத்திற்கான அவர்களின் அடிப்படை விலை
IPL 2020: வீரர்களின் பட்டியல் மற்றும் ஏலத்திற்கான அவர்களின் அடிப்படை விலை
IPL 2020: மும்பை முக்கிய வீரர்கள் தக்க வைப்பு... 5 வீரர்களை விடுவித்தது சிஎஸ்கே
IPL 2020: மும்பை முக்கிய வீரர்கள் தக்க வைப்பு... 5 வீரர்களை விடுவித்தது சிஎஸ்கே
தோனியை குறித்து சிஎஸ்கே வெளியிட்ட பதிவு !!
தோனியை குறித்து சிஎஸ்கே வெளியிட்ட பதிவு !!
ட்விட்டரை தொடர்ந்து இன்ஸ்டாகிராம்... ஹேக் செய்யப்பட்ட வாட்சன் கணக்குகள்
ட்விட்டரை தொடர்ந்து இன்ஸ்டாகிராம்... ஹேக் செய்யப்பட்ட வாட்சன் கணக்குகள்
2020 ஐபிஎல் ஏலம் டிசம்பர் 19ம் தேதி கொல்கத்தாவில் நடக்கவுள்ளது
2020 ஐபிஎல் ஏலம் டிசம்பர் 19ம் தேதி கொல்கத்தாவில் நடக்கவுள்ளது
Advertisement