ஐ.பி.எல். 2019 : தொடர்ந்து 4-வது போட்டியிலும் பெங்களூரு தோல்வி!! #Highlights

Updated: 02 April 2019 23:43 IST

Rajasthan Royals vs Royal Challengers Bangalore: ஆட்டத்தை 20 வது ஓவர் வரை கொண்டு சென்ற ஆர்.சி.பி. பந்து வீச்சாளர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

Live IPL Score, RR vs RCB Live Cricket Score: Rajasthan Royals Win The Toss, Opt To Bowl vs RCB
IPL 2019, RCB vs RR: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு © BCCI/IPL

பெங்களுரூ அணியின் சோகம் தொடர்கிறது. தொடர்ந்து 4 வது போட்டியிலும் ஆர்.சி.பி. தோல்வியை தழுவியுள்ளது. என்னதான் இந்திய அணிக்கே கேப்டனாக இருந்தாலும் பெங்களூரு அணிக்கு ஒரு வெற்றிகூட தேடிக்கொடுக்க முடியாமல் கோலி திணறுகிறார்.

157 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.

முன்னதாக டாஸ் வென்ற ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி, பார்த்திவ் படேல் களம் இறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். 23 ரன்கள் எடுத்திருந்தபோது கோலி ஆட்டமிழந்தார். அரை சதம் கடந்த படேல் 67 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிவில்லியர்ஸ் 13 ரன்களை மட்டுமே எடுத்தார். ஸ்டாய்னிஸ் 28 பந்துகளில் 31 ரன்கள் எடுத்ததால் பெங்களூரு ரசிகர்கள் கடுப்படைந்தனர். கடைசியாக வந்த மொயின் அலி 2 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 18 ரன்களை விரைவாக குவித்தார்.

20 ஓவர் முடிவில் 158 ரன்களை ஆர்.சி.பி. எடுத்துள்ளது. 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் 19.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.

ஸ்கோர்கார்டு தமிழில்

தமிழில் வர்ணனை

வரைபடம் தமிழில்

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஐ.பி.எல். 2019 : தொடர்ந்து 4-வது போட்டியிலும் பெங்களூரு தோல்வி!! #Highlights
ஐ.பி.எல். 2019 : தொடர்ந்து 4-வது போட்டியிலும் பெங்களூரு தோல்வி!! #Highlights
ராஜஸ்தான், ஆர்சிபி ஆட்டம் எதில், எங்கு, எப்போது பார்க்கலாம்?
ராஜஸ்தான், ஆர்சிபி ஆட்டம் எதில், எங்கு, எப்போது பார்க்கலாம்?
Advertisement