இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் டெல்லியை எதிர்கொள்கிறது சென்னை!!

Updated: 09 May 2019 09:49 IST

நேற்று நடந்த எலிமினேட்டர் சுற்றில், ஐதராபாத்தை வென்றது டெல்லி. இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை டெல்லி தக்க வைத்துள்ளது.

Rishabh Pant, Keemo Paul Star As Delhi Capitals Beat SunRisers Hyderabad To Enter Qualifier 2
21 பந்துகளில் 49 ரன்களை அதிரடியாக குவித்து ரிஷப் பண்ட் டெல்லியை வெற்றி பெறச் செய்தார். © BCCI/IPL

ஐ.பி.எல். எலிமினேட்டர் சுற்றில் ஐதராபாத்தை டெல்லி அணி வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் சென்னையை டெல்லி நாளை எதிர்கொள்கிறது. 

வெளியேற்றுதல் எனப்படும் எலிமினேட்டர் சுற்றில் ஐதராபாத் மற்றும் டெல்லி அணிகள் நேற்று விளையாடின. பாயின்ட்ஸ் டேபிளில் 3 மற்றும் 4-வது இடத்தில் இடம்பிடித்ததால் இந்த இரு அணிகளுக்கு இடையே எலிமினேட்டர் சுற்று நடத்தப்பட்டது. 

இதில் முதலில் பேட் செய்த ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன் 28, விஜய் சங்கர் 25 ரன்களை எடுத்தனர். டெல்லி அணியின் சிறப்பான பந்து வீச்சு ஐதராபாதின் ரன் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தியது. 

இதன்பின்னர் பேட் செய்த டெல்லி அணி பேட்ஸ்மேன்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 19.5 ஓவர்களில் டெல்லி அணி வெற்றி இலக்கை எட்டியது. பிரித்வி ஷா 56 ரன்கள் எடுத்தார். ராக்கெட் வேகத்தில் ரன் குவித்த ரிஷப் பண்ட் 21 பந்துகளில் 5 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 49 ரன்களை குவித்தார். 

இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி இறுதிப் போட்டிக்கான தகுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. நாளை நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை டெல்லி எதிர்கொள்கிறது. 

Comments
ஹைலைட்ஸ்
  • கடைசி 3 ஓவரில் 34 ரன் தேவைப்பட்டபோது 18-வது ஓவரில் 21 ரன் எடுத்தார் பண்ட்
  • 19-வது ஓவரில் பண்ட் பறக்க விட்ட சிக்ஸரால் டெல்லி வெற்றியை நெருங்கியது
  • 19 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஐதராபாதுக்கு குப்தில் நல்ல தொடக்கம் தந்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
ஐபிஎல் கேம் சேஞ்சர் பன்ட்டை உலகக் கோப்பை அணியில் சேர்க்காதது ஏன்?
ஐபிஎல் கேம் சேஞ்சர் பன்ட்டை உலகக் கோப்பை அணியில் சேர்க்காதது ஏன்?
இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் டெல்லியை எதிர்கொள்கிறது சென்னை!!
இறுதிப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் டெல்லியை எதிர்கொள்கிறது சென்னை!!
சி.எஸ்.கே.யுடன் மோதப் போவது யார்? - டெல்லி - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை!! #ScoreCard
சி.எஸ்.கே.யுடன் மோதப் போவது யார்? - டெல்லி - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை!! #ScoreCard
டெல்லி, சன்ரைசர்ஸ் எலிமினேட்டர் ஆட்டம் எங்கு எப்போது எதில் பார்க்கலாம்?
டெல்லி, சன்ரைசர்ஸ் எலிமினேட்டர் ஆட்டம் எங்கு எப்போது எதில் பார்க்கலாம்?
ஐபிஎல் எலிமினேட்டர்: டெல்லியின் வெளியூர் வெற்றி ஃபார்முலா கைகொடுக்குமா?
ஐபிஎல் எலிமினேட்டர்: டெல்லியின் வெளியூர் வெற்றி ஃபார்முலா கைகொடுக்குமா?
Advertisement