ஐபிஎல் ப்ளேஆஃப் மற்றும் பெண்கள் டி20 சேலஞ்ச் போட்டிகளுக்கு நேரம் மாற்றம்!

Updated: 29 April 2019 18:44 IST

புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் உள்ளன.

IPL 2019 Playoff Matches To Start 30 Minutes Early
பெண்கள் டி20 சேலஞ்ச் போட்டிகளும் இரவு 7.30 மணிக்கு துவங்குகிறது. © Twitter

ஐபிஎல் போட்டியின் குவாலிஃபையர் 1 சென்னையில் மே 7ம் தேதியும், எலிமினேட்டர் சுற்று மே 8ம் தேதி, குவாலிஃபையர் 2 மே 10ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. ஐபிஎல்லின் இறுதி போட்டி மே 12ம் தேதி ஹைதராபாத்தில் நடைப்பெறுகிறது. பொதுவாக, ஐபிஎல் போட்டிகள் 7.30 மணிக்கு டாஸ் போட்டு, 8 மணிக்கு போட்டி தொடங்கும்.  ப்ளேஆஃப் போட்டிகள் மற்றும் இறுதி போட்டி 7.30 மணிக்கே தொடங்கும் என பிசிசிஐ ஆலோசனை குழு முடிவெடுத்துள்ளது.

புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் உள்ளன.

பெண்கள் டி20 சேலஞ்ச் போட்டிகள் மே 6ம் தேதி துவங்குகிறது. எல்லா போட்டிகளும் இரவு 7.30 மணிக்கு துவங்குகிறது. ஐபிஎல் எலிமினேட்டர் போட்டி நடைபெறும் மே 8ம் தேதி மட்டும் பெண்கள் போட்டி நேரம் மாலை 3.30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. பெண்கள் டி20 போட்டிகள் ஜெய்ப்பூரில் இருக்கும் சவாய் மன்சிங் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

சூப்பர் நோவாஸ், ட்ரையல் ப்ளாஸர்ஸ் மற்றும் வெலாசிட்டி என பெண்கள் டி20 சேலஞ்ச் அணிகளுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

போட்டி அட்டவணை:

மே 6: சூப்பர் நோவாஸ் vs ட்ரையல் ப்ளாசர்ஸ்

மே 8: ட்ரையல் ப்ளாசர்ஸ் vs வெலாசிட்டி

மே 9: சூப்பர் நோவாஸ் vs வெலாசிட்டி

இதில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகள் மே 11 நடக்கும் இறுதிப்போட்டியில் ஆடும் என்றும் கூறப்பட்டுள்ளது.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Comments
ஹைலைட்ஸ்
  • குவாலிஃபையர் 1 சென்னையில் மே 7ம் தேதி நடைபெறுகிறது
  • எலிமினேட்டர் சுற்று , குவாலிஃபையர் 2 விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது
  • இறுதி போட்டி மே 12ம் தேதி ஹைதராபாத்தில் நடைப்பெறுகிறது
தொடர்புடைய கட்டுரைகள்
இணையத்தில் வைரலான கைஃப்போடு கைஃப் எடுத்த புகைப்படம்
இணையத்தில் வைரலான கைஃப்போடு கைஃப் எடுத்த புகைப்படம்
"அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி" - வாட்சனின் இன்ஸ்டாகிராம் பதிவு!
"அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி" - வாட்சனின் இன்ஸ்டாகிராம் பதிவு!
"என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ள ஐபிஎல் உதவியது" - ஜானி பாரிஸ்ட்டோ
"என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ள ஐபிஎல் உதவியது" - ஜானி பாரிஸ்ட்டோ
ஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்!
ஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்!
'' தோனி தவறாக முடிவெடுப்பார். ஆனால், அவரிடம் சொல்ல முடியாது'' சர்ச்சையை ஏற்படுத்தும் குல்தீப் கருத்து!!
Advertisement