அஷ்வின் சர்ச்சை: விமர்சனத்துக்குள்ளான ராஜிவ் சுக்லாவின் கருத்து!

Updated: 26 March 2019 16:59 IST

''ஐபிஎல் கேப்டன்கள், ரெஃப்ரி ஆகியோர் கூடி எதிர்முனை பேட்ஸ்மேன் க்ரீஸை விட்டு வெளியே வந்தால், ரன் அவுட் செய்யக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது" என்று கூறினார் ராஜிவ் சுக்லா. 

Ravichandran Ashwin Mankad Controversy: IPL Chairman Rajeev Shukla Weighs In, Sparks Debate
அஷ்வின் பந்தை வீசாமளேயே பந்துவீச்சாளர் எண்ட்டில் ரன் அவுட் செய்தார். © BCCI/IPL

ஐபிஎல் 2019 சீசனில் நேற்று நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதனாத்தில் மோதின. இந்த போட்டியில் ராஜஸ்தான் சேசிங் செய்து கொண்டிருந்த போது 13வது ஓவரில் ரவிச்சந்திரன் அஷ்வின் ஜாஸ் பட்லருக்கு பந்துவீசினார். 

ராஜஸ்தான் வீரர் பட்லர் அஷ்வின் பந்து வீசும் போது பந்துவீச்சாளர் பக்கம் இருந்தார். ஆனால் பந்து வீசப்படுவதற்கு முன்பே பட்லர் க்ரீஸுக்கு வெளியே செல்வதை அறிந்த அஷ்வின் பந்தை வீசாமளேயே பந்துவீச்சாளர் எண்ட்டில் ரன் அவுட் செய்தார். இதற்கு அதிருப்தியை வெளிப்படுத்தியபடி பட்லர் வெளியேறினார். பட்லர் களத்தில் இருக்கும் வரை ராஜஸ்தானின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. மான்கடிங் எனும் வினோதமான முறையில் பட்லரை அஷ்வின் வீழ்த்தினார். இதனால் ராஜஸ்தான் நிலை குலைந்து போட்டியை வெல்ல முடியாமல் போனது. இதற்கு ஐபிஎல் சேர்மன் ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ள கருத்துக்கு கடுமையான விமர்சனம் எழுந்தது. "நியாயமாக கருத்து சொல்லுங்கள். எதோ ஏனோதானோ என்று கருத்து சொல்லாதீர்கள்" என்று கூறியுள்ளனர்.

ஐபிஎல் சேர்மன் ராஜிவ் சுக்லா இந்த நிகழ்வுக்கு தனது ட்விட்டரில் '' ஐபிஎல் கேப்டன்கள், ரெஃப்ரி ஆகியோர் கூடி எதிர்முனை பேட்ஸ்மேன் க்ரீஸை விட்டு வெளியே வந்தால், ரன் அவுட் செய்யக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது" என்று கூறினார். 

அஷ்வினின் இந்த செயல் விளையாட்டு வீரருக்குரியது அல்ல என்றார். அதற்கு ரசிகர்கள் நீங்கள் அனுதாபத்துக்கு கருத்து சொல்ல வேண்டாம் என்றனர். 

முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் ஆடிய கிங்ஸ் லெவன் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. கெயில் 79 ரன்களும், அகர்வால் 22 ரன்களும் எடுத்தனர். சர்ஃப்ராஸ் 46 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கிங்ஸ் லெவன் சார்பில் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும், குல்கர்னி, கெளதம் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது. பட்லர் 69 ரன் எடுத்து வித்தியாசமான முறையில் அவுட் ஆனார். ரஹானே 27, சாம்சன் 30, ஸ்மித் 20 என அவுட் ஆக ராஜஸ்தான் 17 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கிங்ஸ் லெவம் தரப்பில் முஜிப், கான், ராஜ்புத் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அஷ்வின் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
கோலியின் ஆக்ரோஷ ரியாக்‌ஷனுக்கு அஷ்வினின் பதில் என்ன?
கோலியின் ஆக்ரோஷ ரியாக்‌ஷனுக்கு அஷ்வினின் பதில் என்ன?
அபாரமான கேட்ச் மூலம் அஷ்வினை வெளியேற்றிய கோலியின் ரியாக்‌ஷன்
அபாரமான கேட்ச் மூலம் அஷ்வினை வெளியேற்றிய கோலியின் ரியாக்‌ஷன்
மீண்டும் மான்கடிங் சர்ச்சை: அஷ்வினை கலாய்த்த டேல் ஸ்டெயின்
மீண்டும் மான்கடிங் சர்ச்சை: அஷ்வினை கலாய்த்த டேல் ஸ்டெயின்
மான்கடிங் செய்ய வந்த அஷ்வினை வெறுப்பேற்றிய தவான்!
மான்கடிங் செய்ய வந்த அஷ்வினை வெறுப்பேற்றிய தவான்!
ஐ.பி.எல். 2019: பொலார்ட் அதிரடியால் பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை த்ரில் வெற்றி!! #Highlights
ஐ.பி.எல். 2019: பொலார்ட் அதிரடியால் பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை த்ரில் வெற்றி!! #Highlights
Advertisement