சொந்த மண்ணில் சென்னையை வீழ்த்துமா ராஜஸ்தான்?

Updated: 11 April 2019 18:03 IST

ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள சென்னை சூப்பர்கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

RR vs CSK Preview: Struggling Rajasthan Royals Look To Check Chennai Super Kings Rampage
ஏற்கெனவே நடந்த போட்டியில் சென்னையிடம் தோற்ற ராஜஸ்தான், தற்போது சொந்த மண்ணில் சென்னையை எதிர்கொள்கிறது. © BCCI/IPL

ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள சென்னை சூப்பர்கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஐந்து போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டும் பதிவு செய்துள்ள ராஜஸ்தான், ஒரே ஒரு தோல்வியை சந்தித்துள்ள சென்னை அணியை சந்திக்கிறது. தோனியின் தலைமையில் சிஎஸ்கே அபாரமாக ஆடி வருகிறது. பந்துவீச்சு, பேட்டிங் என ஆல் ரவுண்ட் அணியாக திகழ்கிறது சிஎஸ்கே. வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ராஜஸ்தான் அணி தடுமாறு வருகிறது. 

மஹேந்திர சிங் தோனி தலைமையில் சிறப்பாக ஆடிவரும் சென்னை சூப்பர் கிங்ஸ், கிட்டத்தட்ட ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்துவிட்டது என்றே சொல்லலாம். இன்னொரு பக்கம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகவும் மோசமாக ஆடி வருகிறது. ஏற்கெனவே நடந்த போட்டியில் சென்னையிடம் தோற்ற ராஜஸ்தான், தற்போது சொந்த மண்ணில் சென்னையை எதிர்கொள்கிறது.

இனி வரும் ஆட்டங்கள் அனைத்தையும் வென்றால் தான் ராஜஸ்தானால் ப்ளே ஆஃப் பற்றி யோசிக்க முடியும். சென்ற ஆட்டத்தில் சஞ்சு சாம்சனின் சதமும் ராஜஸ்தானின் வெற்றிக்கு பலனளிக்கவில்லை. பட்லரும் கடந்த இரண்டு ஆட்டங்களில் சொதப்பி வருவதால் ராஜஸ்தானின் பேட்டிங் வலுவிழந்துள்ளது. 

ஸ்மித், ஆர்சிபிக்கு எதிராக 38, கொல்கத்தாவுக்கு எதிராக 73 என ஃபார்முக்கு திரும்பியிருப்பது ஆறுதல் அளிக்கிறது. பந்துவீச்சில் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், உனக்டட் மற்றும் குல்கர்ணி ஆகியோர் இன்னும் அணிக்கு பலம் சேர்த்தால் அணிக்கு வெற்றியை தர முடியும்.

சி.எஸ்.கே அணியின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் சமபலம் வாய்ந்ததாக உள்ளன.

அணிகள்:

சிஎஸ்கே:

தோனி, ரெய்னா, ஜடேஜா, ஹர்பஜன், வாட்சன், ப்ராவோ, முரளி விஜய், கரண் ஷர்மா, கேதர் ஜாதவ், ராயுடு, வில்லி, தாஹிர், டூப்ளெஸிஸ், சஹார், சாம் பில்லிங்ஸ், மோஹித் ஷர்மா, ஷரதுல் தாக்கூர், ஷோரே, சாண்ட்னர், மோனு குமார், பிஷ்னோய், ஜெகதீசன், ருதுராஜ் , ஆசிப்

ராஜஸ்தான்:

ரஹானே, தவால் குல்கர்ணி, ஸ்டூபர்ட் பின்னி, ஸ்டீவன் ஸ்மித், பட்லர், வருண் ஆரோன், உனக்டட், ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன், மனன் வோரா, பிரகாஷ் சோப்ரா, ஆஷ்டன் டர்னர், இஸ் சோதி , க்ருஷ்ணப்பா கெளதம், ராகுல் திரிபாதி, ஷ்ரேயாஸ் கோபால், லியம் லிவிங்ஸ்டான், ஷஷாங்க் சிங், மஹிபால் லோமோர், ரஞ்சனே, தாமஸ், ஆர்ச்சர், ரியான் பராஹ், அர்ய்மன் பிர்லா, சுதேசன் மிதுன்.

Comments
ஹைலைட்ஸ்
  • ஒரு தோல்வியை சந்தித்துள்ள சென்னை புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது
  • இதற்கு முந்தைய போட்டியில் சென்னையிடம் தோற்றது ராஜஸ்தான்
  • தோனியின் தலைமையில் சிஎஸ்கே அபாரமாக ஆடி வருகிறது
தொடர்புடைய கட்டுரைகள்
"நோபால் சர்ச்சைக்காக தோனிக்கு 3 போட்டிகளில் தடை விதிக்க வேண்டும்" - சேவாக்
"நோபால் சர்ச்சைக்காக தோனிக்கு 3 போட்டிகளில் தடை விதிக்க வேண்டும்" - சேவாக்
"அவரும் மனிதர்தான்" தோனி விஷயத்தில் மைக்கேல் வாகனுக்கு பதிலளித்த கங்குலி!
"அவரும் மனிதர்தான்" தோனி விஷயத்தில் மைக்கேல் வாகனுக்கு பதிலளித்த கங்குலி!
படுத்துக் கொண்டே சிக்ஸரடித்த ஜடேஜாவை தலையில் தட்டிய தோனி!
படுத்துக் கொண்டே சிக்ஸரடித்த ஜடேஜாவை தலையில் தட்டிய தோனி!
களத்தில் கோபப்பட்ட தோனியை விமர்சித்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன்!
களத்தில் கோபப்பட்ட தோனியை விமர்சித்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன்!
பரபரப்பான போட்டியில் படுத்துகொண்டே சிக்ஸர் அடித்த ஜடேஜா
பரபரப்பான போட்டியில் படுத்துகொண்டே சிக்ஸர் அடித்த ஜடேஜா
Advertisement