சாம் குரானின் ஹாட்ரிக்கால் டெல்லியை மிரட்டிய கிங்ஸ் லெவன் பஞ்சாப்

Updated: 02 April 2019 12:43 IST

சாம் குரானில் அபார பந்துவீச்சு மற்றும் ஹாட்ரிக் விக்கெட்டால் டெல்லி கேப்பிட்டல்ஸை நிலை குலை செய்து வெற்றியை அவர்களிடமிருந்து பறித்தது.

Sam Curran Claims Hat-Trick As Kings XI Punjab Beat Delhi Capitals
சாம் குரான்  2.2 ஓவர்கள் வீசி 11 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டத்தை பஞ்சாப் வசம் மாற்றினார். © BCCI/IPL

சாம் குரானில் அபார பந்துவீச்சு மற்றும் ஹாட்ரிக் விக்கெட்டால் டெல்லி கேப்பிட்டல்ஸை நிலை குலை செய்து வெற்றியை அவர்களிடமிருந்து பறித்தது. டெல்லி 144 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற நிலையிலிருந்து 152 ரன்களுக்கு ஆல் அவுட் என்ற நிலைக்கு சென்றது. 8 ரன்களை சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டை இழந்தது. இந்த போட்டியில் சாம் குரான்  2.2 ஓவர்கள் வீசி 11 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டத்தை பஞ்சாப் வசம் மாற்றினார்.

பன்ட் 26 பந்தில் 39 ரன்களும், இங்ராம் 29 பந்தில் 38 ரன்களும் குவித்து டெல்லியை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றனர். அவர்கள் 6.5 ஓவரில் 62 ரன்கள் குவித்தனர். ஆனால், ஆட்டம் பன்ட் அவுட் ஆனதும் எதிர்பாராத விதமாக மாறியது. 

9 பந்துகளில் 4 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்டுகளை இழந்தது. பன்ட், ஷமி பந்தில் அவுட் ஆனதும் விக்கெட்டுகள் சரிய துவங்கின. 

ப்ரித்வி ஷா, இந்த போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினார். தவான் மற்றும் ஷ்ரேயாஸ் 61 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்து டெல்லியை வலுப்படுத்தினர். 

முன்னதாக பேட் செய்த கிங்ஸ் லெவன் கெயில் ஆடாததால் பெரிய ஸ்கோரை எட்ட தவறியது. 20 ஓவர் முடிவில் 166 ரன்களை மட்டுமே எடுத்தது. மில்லர் 43, சர்ஃப்ராஸ் 39 ரன்கள் குவித்தனர். மாரிஸ் 3, ரபாடா மற்றும் லாமிச்சனே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

மந்தீப்சிங் 21 பந்தில் 29 ரன் குவித்தது கிங்ஸ் லெவன் 160 ரன்களை கடக்க உதவியது. மில்லர், சர்ஃப்ராஸ் இணை 6.4 ஓவரில் 64 ரன்கள் சேர்த்தது.

Comments
ஹைலைட்ஸ்
  • சாம் குரான் தான் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர்
  • கிங்ஸ் லெவன் பஞ்சாப் 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது
  • 152 ரன்களுக்கு ஆல் அவுட் என்ற நிலைக்கு சென்றது டெல்லி
தொடர்புடைய கட்டுரைகள்
ப்ரீத்தி ஸிந்தாவுடன் பாங்க்ரா டான்ஸ் ஆடிய சாம் குரான்!
ப்ரீத்தி ஸிந்தாவுடன் பாங்க்ரா டான்ஸ் ஆடிய சாம் குரான்!
சாம் குரானின் ஹாட்ரிக்கால் டெல்லியை மிரட்டிய கிங்ஸ் லெவன் பஞ்சாப்
சாம் குரானின் ஹாட்ரிக்கால் டெல்லியை மிரட்டிய கிங்ஸ் லெவன் பஞ்சாப்
8 ரன்னுக்குள் 7 விக். வீழ்த்தி டெல்லியை வென்றது பஞ்சாப்!!...#Highlights
8 ரன்னுக்குள் 7 விக். வீழ்த்தி டெல்லியை வென்றது பஞ்சாப்!!...#Highlights
Advertisement