ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டம் எங்கு, எப்போது, எதில் பார்க்கலாம்?

Updated: 30 April 2019 12:08 IST

இன்று ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் பெங்களூரு எம் சின்னசுவாமி மைதானத்தில் மோதுகின்றன.

RCB vs RR: When And Where To Watch Live Telecast, Live Streaming
8 தோல்விகளுக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐபிஎல் 2019 ப்ளேஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியாது. © BCCI/IPL

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் பதவி ரஹானேவிடமிருந்து ஸ்டீவ் ஸ்மித்திடம் கொடுக்கப்பட்டது. சன்ரைசஸ் ஹைதராபாத்துடன் நடந்த கடைசி போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது. டெல்லிவுடன் மோதிய ஆர்சிபி அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இன்று ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் பெங்களூரு எம் சின்னசுவாமி மைதானத்தில் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி அணிகள் ஏற்கெனவே ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் பென் ஸ்ட்ரோக்ஸ் ஆகிய வீரர்கள் இல்லாதது ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவாக அமையும். ஜோஸ் பட்லர் 311 ரன்கள் எடுத்துள்ளார். 8 இன்னிங்க்ஸில் 5 அரை சதங்கள் எடுத்துள்ளார். இப்போது அவர், உலகக் கோப்பை பயிற்சிக்காக சொந்த நாட்டுக்கு திரும்பவுள்ளார். ரஹானே கேப்டன் பதவியிலிருந்து விலகிய பிறகு ஃபார்முக்கு திரும்பி அதிக ரன்களை குவித்து வருகிறார்.

ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டம் எப்போது?

ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டம் ஏப்ரல் 30, 2019 (செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெறும்.

ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டம் எங்கே நடைபெறுகிறது?

ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டம் பெங்களூரு, சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.

ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ்ஆட்டம் எப்போது நடைபெறுகிறது?

ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டம் இரவு 8 மணிக்கு துவங்குகிறது.

ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டத்தை எதில் கண்டு ரசிக்கலாம்?

ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் கண்டு ரசிக்கலாம்.

ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ்ஆட்டத்தின் லைவ் அப்டேட்டுகளை எதில் பெறலாம்?

ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டத்தின் லைவ் அப்டேட்டுகளை ஹாட் ஸ்டார் மற்றும்  sports.ndtv.com மூலம் பெறலாம்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டம் எங்கு, எப்போது, எதில் பார்க்கலாம்?
ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டம் எங்கு, எப்போது, எதில் பார்க்கலாம்?
ராஜஸ்தான் அணியை தோற்கடிக்குமா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு?
ராஜஸ்தான் அணியை தோற்கடிக்குமா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு?
Advertisement