சென்னையின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா மும்பை?

Updated: 02 April 2019 19:02 IST

இரு அணிகளும் மும்பை வான்கடே மைதானத்திஒல் நடப்பு ஐபிஎல் தொடரின் 15வது போட்டியில் மோதவுள்ளன.

MI vs CSK Preview: Mumbai Indians Hope To Stop Chennai Super Kings
ஐபிஎல் 2019ல் இதுவரை தோற்கடிக்கப்படாத அணியாக சென்னை அணி உள்ளது. © AFP

ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தும் முனைப்பில் களமிறங்குகிறது. ஐபிஎல் 2019ல் இதுவரை தோற்கடிக்கப்படாத அணியாக சென்னை அணி உள்ளது. இந்த இரு அணிகளும் ஐபிஎல் தொடர்களின் பலம் வாய்ந்த அணிகளாக உள்ளன. இரு அணிகளும் தலா மூன்று முறை பட்டம் வென்றுள்ளன. 

இரு அணிகளும் மும்பை வான்கடே மைதானத்திஒல் நடப்பு ஐபிஎல் தொடரின் 15வது போட்டியில் மோதவுள்ளன. சென்னை அணி ஆர்சிபி, டெல்லி, ராஜஸ்தான் அணிகளை வென்றுள்ளது. மும்பை அணியோ டெல்லி மற்றும் பஞ்சாப்பிடம் தோற்று ஆர்சிபியுடன் வெற்றியை பதிவு செய்துள்ளது. 

இரு அணிகளுக்குமிடையேயான போட்டி தற்போது மும்பைக்கு சாதகமாகவே உள்ளது. கடைசியாக ஆடிய 5 மும்பை சென்னை போட்டிகளில் 4 போட்டிகளை மும்பையே வென்றுள்ளது. ஒட்டு மொத்தமாகவும் 14-12 என மும்பையே முன்னிலை வகிக்கிறது. எனினும் தோனியின் கம்பேக் ராஜஸ்தானுக்கு எதிராக அபாரமாக இருந்தது 46 பந்தில் 75 ரன்கள் குவித்து அசத்தினார். தோனி பேட்டிங் செய்ய வரும் போது சிஎஸ்கே 3 விக்கெட்டுகளை இழந்து 27 ரன்கள் எடுத்திருந்தது. ரெய்னாவுடன் இணைந்து தோனி 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அடுத்து ப்ராவோவுடன் இணைந்து 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

சென்னை அணியின் பலமாக அந்த அணியின் பேட்டிங் வரிசையின் நீளமும், சுழற்பந்துவீச்சும் உள்ளது. அதேசமயம் மும்பை வேகப்பந்துவீச்சில் பலமாக உள்ளது. மும்பையின் பேட்டிங் பெரிதும் ரோஹித், டிகாக்கை நம்பியே உள்ளது. 

மும்பை இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வீரர் அல்ஸாரி ஜோசப் அல்லது பென் கட்டிங்கை ஆட வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை அணி பவர்ப்ளேக்குவுக்கு பிறகு பந்துவீச தாஹிர், ஹர்பஜன், ஜடேஜா கூட்டணியை பலமாக வைத்துள்ளது. 

அணி விவரம்:

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித், டிகாக், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா, யுவராஜ்சிங், பொலார்ட், மலிங்கா, ராகுல் சஹார், பென் கட்டிங், பய்ஸ்வால், இஷான் கிஸன், சித்தேஷ் லட், லீவிஸ், மயன்க் மார்கண்டே, மெக்லென்ஹன், அல்ஸாரி, பெகன்ட்ராஃப், அன்குல் ராய், பரிந்தர் சரம், சலாம், ஆதித்யா தாரே, சூர்யகுமார் யாதவ், ஜெயந்த் யாதவ்.

சிஎஸ்கே: தோனி, ரெய்னா, ஜடேஜா, ஹர்பஜன், வாட்சன், ப்ராவோ, முரளி விஜய், கரண் ஷர்மா, கேதர் ஜாதவ், ராயுடு, வில்லி, தாஹிர், டூப்ளெஸிஸ், சஹார், சாம் பில்லிங்ஸ், மோஹித் ஷர்மா, ஷரதுல் தாக்கூர், ஷோரே, சாண்ட்னர், மோனு குமார், பிஷ்னோய், ஜெகதீசன், ருதுராஜ் , ஆசிப்

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
மும்பை போட்டியின் போது தோனியுடன் செல்ஃபி எடுத்த பாட்டி
மும்பை போட்டியின் போது தோனியுடன் செல்ஃபி எடுத்த பாட்டி
ஒற்றைக் கையில் கேட்ச் செய்து ரெய்னாவை வெளியேற்றிய பொலார்ட்
ஒற்றைக் கையில் கேட்ச் செய்து ரெய்னாவை வெளியேற்றிய பொலார்ட்
மான்கடிங் முறையில் அவுட் செய்ய தோனியை எச்சரித்த க்ருணால் பாண்ட்யா
மான்கடிங் முறையில் அவுட் செய்ய தோனியை எச்சரித்த க்ருணால் பாண்ட்யா
தோனி முன்பே ஹெலிகாப்டர் ஷாட் ஆடி அசத்திய ஹர்திக் பாண்ட்யா!
தோனி முன்பே ஹெலிகாப்டர் ஷாட் ஆடி அசத்திய ஹர்திக் பாண்ட்யா!
ஐபிஎல் 2019: 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வென்றது மும்பை! #Highlights
ஐபிஎல் 2019: 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வென்றது மும்பை! #Highlights
Advertisement