Listen to the latest songs, only on JioSaavn.com
 

ஐபிஎல் 2019: அதிரடி கிங்ஸ் லெவனை சமாளிக்குமா ஆல்ரவுண்ட் மும்பை!

Updated: 09 April 2019 18:17 IST

தனது ஆறு போட்டிகளில் 4ஐ வென்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது பஞ்சாப்.

MI vs KXIP Preview: Mumbai Indians Eye 3rd Straight Win, Host Buoyant Kings XI Punjab
இதற்கு முன் இரு அணிகளும் ஆடிய ஆட்டத்தில் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது. © BCCI/IPL

மும்பை இந்தியன்ஸ் அணி தான் முதலில் ஆடிய 3 போட்டிகளில் இரண்டை தோற்று இருந்தது. பின்னர் நடப்பு சாம்பியன் சென்னை மற்றும் வலிமையான அணியான சன்ரைசர்ஸை வீழ்த்தி தன்னை பார்முக்கு திருப்பியுள்ளது மும்பை அணி. இந்த அணி அடுத்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை சந்திக்கவுள்ளது. தனது ஆறு போட்டிகளில் 4ஐ வென்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது பஞ்சாப். முதல் இரண்டு இடத்தில் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகள் உள்ளன. 

இந்த தொடரில் இதற்கு முன் இரு அணிகளும் ஆடிய ஆட்டத்தில் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆனால் வான்கடேயில் சூழல் வேறு என்பது இரு அணிகளும் அறிந்த விஷயமே.

சென்னை மற்றும் ஹைதரபாத் அணிகளுடனான போட்டியை பந்துவீச்சாளர்களை நம்பியே களமிறங்கி வென்றது மும்பை. அதேபோல பொலார்ட் மற்றும் பாண்ட்யாவின் அதிரடி ஆட்டம் மும்பைக்கு பலம் சேர்க்கிறது. 

இந்த ஐபிஎல் தொடரில் டாப் 20 பேட்ஸ்மேன்களில் ஒரு மும்பை வீரர்கூட இல்லை. ஆனால், வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். அல்ஸாரி 12 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையாக பதிவானது. 

அல்ஸாரியோடு பும்ரா, பெகண்ட்ராப் மற்றும் பாண்ட்யாவின் வேகம் மும்பைக்கு பலம் சேர்க்கும். 

கிங்ஸ் லெவனை பொறுத்தமட்டில் ராகுல், மயன்க், கெயில் 200 ப்ளஸ் ஸ்கோர்களை உறுதி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் குரான், ஷமி, அஷ்வின் பலம் சேர்க்கிறார்கள்.

அணி விவரம்:

கிங்ஸ் லெவன்:

ஆர்.அஷ்வின், கெயில், ராகுல் , ஷமி, மயங்க, கருண் நாயர், முஜீப், மில்லர், சாம் குரான், வருண் சக்கரவர்த்தி, போரான், ஹென்றிக்கஸ், விலஜோன், நல்கண்டே, சர்ஃபிராஸ் , அர்ஷ்திப் , அயாசி, ஹர்ப்ரித் பிரர், எம்.அஷ்வின், ஆன்ட்ரூ டை, ராஜ்புத், மன்தீப், சிம்ரான் சிங்.

மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித், டிகாக், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா, யுவராஜ்சிங், பொலார்ட், மலிங்கா, ராகுல் சஹார், பென் கட்டிங், பய்ஸ்வால், இஷான் கிஸன், சித்தேஷ் லட், லீவிஸ், மயன்க் மார்கண்டே, மெக்லென்ஹன், அல்ஸாரி, பெகன்ட்ராஃப், அன்குல் ராய், பரிந்தர் சரம், சலாம், ஆதித்யா தாரே, சூர்யகுமார் யாதவ், ஜெயந்த் யாதவ். 

Comments
ஹைலைட்ஸ்
  • மும்பை அணி பதனன்று பஞ்சாபை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது
  • மும்பை அணி இந்த சீசனில் மூன்று போட்டிகளில் வென்றுள்ளது
  • ஆறு போட்டிகளில் 4ஐ வென்று 3வது இடத்தை பிடித்துள்ளது பஞ்சாப்
தொடர்புடைய கட்டுரைகள்
அதிரடி சேஸிங் களத்தில் மோதிய ஹர்திக் மற்றும் வில்ஜோன்
அதிரடி சேஸிங் களத்தில் மோதிய ஹர்திக் மற்றும் வில்ஜோன்
ஐ.பி.எல். 2019: பொலார்ட் அதிரடியால் பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை த்ரில் வெற்றி!! #Highlights
ஐ.பி.எல். 2019: பொலார்ட் அதிரடியால் பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை த்ரில் வெற்றி!! #Highlights
ஐபிஎல் 2019: அதிரடி கிங்ஸ் லெவனை சமாளிக்குமா ஆல்ரவுண்ட் மும்பை!
ஐபிஎல் 2019: அதிரடி கிங்ஸ் லெவனை சமாளிக்குமா ஆல்ரவுண்ட் மும்பை!
Advertisement