சொந்த மண்ணின் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த 'தல' தோனிக்கு குவிந்த பாராட்டு!

Updated: 02 May 2019 19:15 IST

சிஎஸ்கே அணி சொந்த மண்ணான சென்னையில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியுடன் மோதி, புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ள்து. 80 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வென்றது சென்னை.

MS Dhoni Poses With Chepauk Ground Staff, Fans Applaud Noble Gesture
தொடர்ந்து முதல் இரண்டு இடத்துக்கும் சிஎஸ்கே அணி இருந்தால், குவாலிஃபையர் 1 சுற்றை சென்னையில் ஆட வாய்ப்புள்ளது. © Twitter

சிஎஸ்கே அணி சொந்த மண்ணான சென்னையில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியுடன் மோதி, புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ள்து. 80 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வென்றது சென்னை. தொடர்ந்து முதல் இரண்டு இடத்துக்கும் சிஎஸ்கே அணி இருந்தால், குவாலிஃபையர் 1 சுற்றை சென்னையில் ஆட வாய்ப்புள்ளது. நேற்றைய வெற்றிக்கு பிறகு, தோனி மற்றும் அணியினர் எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து, புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

"தலயுடன் சூப்பர்மேன்கள், அவர்கள் இல்லையெனில் இந்த வெற்றி சாதியாமாகியிருக்காது. #Anbuden #GroundStaff #WhistlePodu #Yellove" என்ற ஹேஷ்டேக்குடன், தோனி எடுத்து கொண்ட புகைப்படத்தை சிஎஸ்கே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

ரசிகர்கள் பலரும் தோனியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டனர். இன்னும் சிலர், தோனி மைதானத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை குறித்து புகழ்ந்துள்ளனர்.

"மைதானத்தில் மற்ற வேலை செய்பவர்களுக்கு இவரால் மட்டுமே மரியாதை கொடுக்க முடியும்" என ரசிகர் ஒருவர் ரீட்விட் செய்திருந்தார். தோனியின் செயலுக்கு பலரும் பாராட்டி பதிவிட்டனர்.

சென்னை கேப்டன் தோனி 22 பந்தில் 44 ரன்களையும், ஜடேஜா 10 பந்தில் 25 ரன்களையும் குவித்து சென்னை அணியை 20 ஓவரில் 179 ரன்களை குவிக்க வைத்தனர். 

தோனி, ஒரே ஓவரில் இரண்டு லைட்னிங் ஸ்டெம்பிங்கை செய்து ஆட்டத்தை சென்னையின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். 

10 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் எடுத்திருந்த டெல்லின் அணி 99 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 80 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

முதுகு வலியால் அவதிப்படும் தோனி, இரண்டு போட்டிகளில் ஆடவில்லை. ரெய்னா தலைமையில் ஆடிய அந்த இரண்டு போட்டிகளிலும் சிஎஸ்கே தோற்றுள்ளது.

இன்று, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டிக்கு பிறகும் சிஎஸ்கே புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் ஞாயிறன்று நடக்கும் போட்டியில் தோனி ஓய்வெடுக்க வாய்ப்புள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"தோனி என்ன விரும்புகிறார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்" - சவுரவ் கங்குலி!
"தோனி என்ன விரும்புகிறார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்" - சவுரவ் கங்குலி!
"கங்குலி, தோனியை விட விராட் கோலி தான் சிறந்தவர்" - கவுதம் கம்பீர்
"கங்குலி, தோனியை விட விராட் கோலி தான் சிறந்தவர்" - கவுதம் கம்பீர்
டெஸ்ட் கேப்டனாக சவுரவ் கங்குலியின் சாதனையை முந்தினார் விராட் கோலி!
டெஸ்ட் கேப்டனாக சவுரவ் கங்குலியின் சாதனையை முந்தினார் விராட் கோலி!
"கிரிக்கெட் வீரர்களில் தோனி எப்போதும் சிறந்தவர்" - ரவி சாஸ்திரி
"கிரிக்கெட் வீரர்களில் தோனி எப்போதும் சிறந்தவர்" - ரவி சாஸ்திரி
100 டி20 போட்டிகளில் இடம்பெற்ற முதல் இந்தியரானார் ஹர்மன்பிரீத் கவுர்!
100 டி20 போட்டிகளில் இடம்பெற்ற முதல் இந்தியரானார் ஹர்மன்பிரீத் கவுர்!
Advertisement