சிஎஸ்கே, மும்பை ஆட்டம் எதில், எங்கு, எப்போது பார்க்கலாம்?

Updated: 02 April 2019 18:37 IST

இரு அணிகளும் மும்பை வான்கடே மைதானத்திஒல் நடப்பு ஐபிஎல் தொடரின் 15வது போட்டியில் மோதவுள்ளன.

MI vs CSK: When And Where To Watch Live Telecast, Live Streaming
ஐபிஎல் 2019ல் இதுவரை தோற்கடிக்கப்படாத அணியாக சென்னை அணி உள்ளது. © BCCI/IPL

ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தும் முனைப்பில் களமிறங்குகிறது. ஐபிஎல் 2019ல் இதுவரை தோற்கடிக்கப்படாத அணியாக சென்னை அணி உள்ளது. இந்த இரு அணிகளும் ஐபிஎல் தொடர்களின் பலம் வாய்ந்த அணிகளாக உள்ளன. இரு அணிகளும் தலா மூன்று முறை பட்டம் வென்றுள்ளன. 

இரு அணிகளும் மும்பை வான்கடே மைதானத்திஒல் நடப்பு ஐபிஎல் தொடரின் 15வது போட்டியில் மோதவுள்ளன. சென்னை அணி ஆர்சிபி, டெல்லி, ராஜஸ்தான் அணிகளை வென்றுள்ளது. மும்பை அணியோ டெல்லி மற்றும் பஞ்சாப்பிடம் தோற்று ஆர்சிபியுடன் வெற்றியை பதிவு செய்துள்ளது. 

இரு அணிகளுக்குமிடையேயான போட்டி தற்போது மும்பைக்கு சாதகமாகவே உள்ளது. மும்பை சென்னை கடைசியாக ஆடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளை மும்பையே வென்றுள்ளது. ஒட்டு மொத்தமாகவும் 14-12 என மும்பையே முன்னிலை வகிக்கிறது. எனினும் தோனியின் கம்பேக் ராஜஸ்தானுக்கு எதிராக அபாரமாக இருந்தது. 46 பந்தில் 75 ரன்கள் குவித்து அசத்தினார். தோனி பேட்டிங் செய்ய வரும் போது சிஎஸ்கே 3 விக்கெட்டுகளை இழந்து 27 ரன்கள் எடுத்திருந்தது. ரெய்னாவுடன் இணைந்து தோனி 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அடுத்து ப்ராவோவுடன் இணைந்து 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

சிஎஸ்கே, மும்பை ஆட்டம் எப்போது?

சிஎஸ்கே, மும்பை ஆட்டம் ஏப்ரல் 3, 2019 அன்று நடைபெறும்.

சிஎஸ்கே, மும்பை ஆட்டம் எங்கே நடைபெறுகிறது?

சிஎஸ்கே, மும்பை ஆட்டம் சென்னை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

சிஎஸ்கே, மும்பை ஆட்டம் எப்போது நடைபெறுகிறது?

சிஎஸ்கே, மும்பை ஆட்டம் இரவு 8 மணிக்கு துவங்குகிறது.

சிஎஸ்கே, மும்பை ஆட்டத்தை எதில் கண்டு ரசிக்கலாம்?

சிஎஸ்கே, மும்பை ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் கண்டு ரசிக்கலாம்.

சிஎஸ்கே, மும்பை ஆட்டத்தின் லைவ் அப்டேட்டுகளை எதில் பெறலாம்?

சிஎஸ்கே, மும்பை ஆட்டத்தின் லைவ் அப்டேட்டுகளை ஹாட் ஸ்டார் மற்றும்  sports.ndtv.com/tamil மூலம் பெறலாம்.

Comments
ஹைலைட்ஸ்
  • இரு அணிகளும் தலா மூன்று முறை பட்டம் வென்றுள்ளன.
  • ஒட்டு மொத்தமாகவும் 14-12 என மும்பையே முன்னிலை வகிக்கிறது
  • சென்னை அணி ஆர்சிபி, டெல்லி, ராஜஸ்தான் அணிகளை வென்றுள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
மும்பை போட்டியின் போது தோனியுடன் செல்ஃபி எடுத்த பாட்டி
மும்பை போட்டியின் போது தோனியுடன் செல்ஃபி எடுத்த பாட்டி
ஒற்றைக் கையில் கேட்ச் செய்து ரெய்னாவை வெளியேற்றிய பொலார்ட்
ஒற்றைக் கையில் கேட்ச் செய்து ரெய்னாவை வெளியேற்றிய பொலார்ட்
மான்கடிங் முறையில் அவுட் செய்ய தோனியை எச்சரித்த க்ருணால் பாண்ட்யா
மான்கடிங் முறையில் அவுட் செய்ய தோனியை எச்சரித்த க்ருணால் பாண்ட்யா
தோனி முன்பே ஹெலிகாப்டர் ஷாட் ஆடி அசத்திய ஹர்திக் பாண்ட்யா!
தோனி முன்பே ஹெலிகாப்டர் ஷாட் ஆடி அசத்திய ஹர்திக் பாண்ட்யா!
ஐபிஎல் 2019: 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வென்றது மும்பை! #Highlights
ஐபிஎல் 2019: 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வென்றது மும்பை! #Highlights
Advertisement