ஐபிஎல் 2019: 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வென்றது மும்பை! #Highlights

Updated:04 April 2019 00:07 IST

Chennai Super Kings vs Mumbai Indians: சென்னை மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளும் தலா மூன்று முறை பட்டம் வென்றுள்ளன

Live IPL Score, MI vs CSK Live Cricket Score: Heavyweights Mumbai Indians, Chennai Super Kings Face-Off In Clash Of Titans
IPL 2019, MI vs CSK: ஐபிஎல் 2019, சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் © BCCI/IPL

ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தும் முனைப்பில் களமிறங்குகிறது. ஐபிஎல் 2019ல் இதுவரை தோற்கடிக்கப்படாத அணியாக சென்னை அணி உள்ளது. இந்த இரு அணிகளும் ஐபிஎல் தொடர்களின் பலம் வாய்ந்த அணிகளாக உள்ளன. இரு அணிகளும் தலா மூன்று முறை பட்டம் வென்றுள்ளன. 

இரு அணிகளும் மும்பை வான்கடே மைதானத்திஒல் நடப்பு ஐபிஎல் தொடரின் 15வது போட்டியில் மோதுகின்றன. சென்னை அணி ஆர்சிபி, டெல்லி, ராஜஸ்தான் அணிகளை வென்றுள்ளது. மும்பை அணியோ டெல்லி மற்றும் பஞ்சாப்பிடம் தோற்று ஆர்சிபியுடன் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இரு அணிகளுக்குமிடையேயான போட்டி தற்போது மும்பைக்கு சாதகமாகவே உள்ளது. கடைசியாக மும்பை சென்னை ஆடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளை மும்பையே வென்றுள்ளது. ஒட்டு மொத்தமாகவும் 14-12 என மும்பையே முன்னிலை வகிக்கிறது.

டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. மும்பை அணியில் பெகண்ட்ராஃப் , ராகுல் சஹார் சேர்க்கப்பட்டுள்ளனர். சென்னையில் சாண்ட்னருக்கு பதிலாக மோஹித் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.

டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் குவித்தது. சூர்யகுமார்யாதவ் அபாரமாக ஆடி அரைசதமடித்தார். க்ருணால் பாண்ட்யா 42 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பாண்ட்யா 25, பொலார்ட் 17 ரன்களை கடைசி கட்டத்தில் அதிரடியாக குவிக்கமும்பை இந்தியன்ஸ் 170 ரன்களை கடந்தது.  சென்னை தரப்பில் ப்ராவோ, சஹார், ஜடேஜா, தாஹிர், மோஹித் ஷர்மா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. கேதர் ஜாதவ் மட்டும் அரைசதமடித்தார். மற்ற யாரும் ரன் குவிக்காததால் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இது சென்னையின் ஐபிஎல் 2019 தொடரின் முதல் தோல்வி ஆகும். மும்பை தரப்பில் மலிங்கா, ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும், பெகண்ட்ராஃப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஸ்கோர்கார்டு தமிழில்

தமிழில் வர்ணனை

வரைபடம் தமிழில்

ஐபிஎல் 2019 மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் இடையேயான ஆட்டத்தின் ஹைலைட்ஸ் மும்பை, வான்கடே மைதானத்திலிருந்து...

 • 23:56 (IST)Apr 03, 2019

  ஓவர் 20:

  20வது ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். 20வது ஓவரில் 11 ரன்கள் கொடுத்தார்.   தீபக் சஹார் அவுட் ஆனார். இதன் மூலம் மும்பை  37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை ஐபிஎல் 2019ல் முதல் தோல்வியை தழுவியது.
 • 23:53 (IST)Apr 03, 2019

  ஓவர் 19:

  19வது ஓவரை பும்ரா வீசினார். 19வது ஓவரில் 7 ரன்கள் கொடுத்தார்.  சி.எஸ்.கே 122/7
 • 23:48 (IST)Apr 03, 2019

  ஓவர் 18:

  18வது ஓவரை மலிங்கா வீசினார். 18வது ஓவரில் 7 ரன்கள் கொடுத்தார்.  சி.எஸ்.கே 115/7. மலிங்கா வீசிய ஓவரில் ஜாதவ், ப்ராவோ அவுட்.
 • 23:42 (IST)Apr 03, 2019

  ஓவர் 17:

  17வது ஓவரை பும்ரா வீசினார். 17வது ஓவரில் 3 ரன்கள் கொடுத்தார்.  சி.எஸ்.கே 108/5.
 • 23:35 (IST)Apr 03, 2019

  ஓவர் 16:

  16வது ஓவரை மலிங்கா வீசினார். 16வது ஓவரில் 11 ரன்கள் கொடுத்தார்.  சி.எஸ்.கே 105/5. ஜாதவ் பொறுப்பாக ஆடி அரைசதமடித்தார்.
 • 23:28 (IST)Apr 03, 2019

  ஓவர் 15:

  15வது ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். இதில் தோனி சூர்யகுமாரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஆட வந்த ஜகேஜா 1 ரன் எடுத்த நிலையில் டிகாக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். சென்னை 95/5
 • 23:19 (IST)Apr 03, 2019

  ஓவர் 14:

  14வது ஓவரை க்ருணால் பாண்ட்யா  வீசினார். இந்த ஓவரில் 5 ரன்கள் கொடுத்தார்.  சி.எஸ்.கே 87/3
 • 23:17 (IST)Apr 03, 2019

  ஓவர் 13:

  13வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் சென்னை 3 ரன்கள் எடுத்தது. சென்னை 80/3
 • 23:12 (IST)Apr 03, 2019

  ஓவர் 12:

  12வது ஓவரை க்ருணால் பாண்ட்யா  வீசினார். 12வது ஓவரில் 6 ரன்கள் கொடுத்தார்.  சி.எஸ்.கே 77/3
 • 23:09 (IST)Apr 03, 2019

  ஓவர் 11:

  11வது ஓவரை ஹர்திக் பாண்ட்யா  வீசினார். 11வது ஓவரில் 5 ரன்கள் கொடுத்தார்.  சி.எஸ்.கே 71/3
 • 23:04 (IST)Apr 03, 2019

  ஓவர் 10:

  10வது ஓவரை ராகுல் சஹார் வீசினார். 10வது ஓவரில் 3 ரன்கள் கொடுத்தார்.  சி.எஸ்.கே 66/3
 • 23:04 (IST)Apr 03, 2019

  ஓவர் 9:

  9வது ஓவரை பெகண்ட்ராஃப் வீசினார். 9வது ஓவரில் 6 ரன்கள் கொடுத்தார்.  சி.எஸ்.கே 63/3
 • 22:55 (IST)Apr 03, 2019

  ஓவர் 8:

  8வது ஓவரை ராகுல் சஹார் வீசினார். 8வது ஓவரில் 8 ரன்கள் கொடுத்தார்.  சி.எஸ்.கே 57/3
 • 22:46 (IST)Apr 03, 2019

  ஓவர் 7:

  7வது ஓவரை பும்ரா வீசினார். 7வது ஓவரில் 3 பவுண்டரியுடன் 15 ரன் கொடுத்தார்.  சி.எஸ்.கே 49/3
 • 22:43 (IST)Apr 03, 2019

  ஓவர் 6:

  6வது ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். 6வது ஓவரில் 1 ரன் கொடுத்தார்.  சி.எஸ்.கே 34/3
 • 22:37 (IST)Apr 03, 2019

  ஓவர் 5:

  5வது ஓவரை பெகண்ட்ராஃப் வீசினார். 5வது ஓவரில் 8 ரன் கொடுத்து ரெய்னாவை  16 ரன்னில் அவுட் ஆக்கினார். சி.எஸ்.கே 33/3
 • 22:29 (IST)Apr 03, 2019

  ஓவர் 4:

  4வது ஓவரை மலிங்கா வீசினார். 4வது ஓவரில் மும்பை 11 ரன் எடுத்தது. சி.எஸ்.கே 25/2
 • 22:25 (IST)Apr 03, 2019

  ஓவர் 3:

  3வது ஓவரை பெகண்ட்ராஃப் வீசினார். 3வது ஓவரில் மும்பை 8 ரன் எடுத்தது. சி.எஸ்.கே 14/2
 • 22:22 (IST)Apr 03, 2019

  ஓவர் 2:

  2வது ஓவரை மலிங்கா வீசினார். 2வது ஓவரில் 5 ரன் கொடுத்து வாட்சனை  அவுட் ஆக்கினார். சி.எஸ்.கே 6/2
 • 22:14 (IST)Apr 03, 2019

  ஓவர் 1:

  முதல் ஓவரை பெகண்ட்ராஃப் வீசினார். முதல் ஓவரில் ஒரு ரன் கொடுத்து ராயுடுவை டக் அவுட் ஆக்கினார். சி.எஸ்.கே 1/1
 • 21:51 (IST)Apr 03, 2019

  ஓவர் 20:

  20வது ஓவரை ப்ராவோ வீசினார்.இதில் மும்பை 3 சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 29 ரன்கள் எடுத்தது. மும்பை 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்துள்ளது.
 • 21:44 (IST)Apr 03, 2019

  ஓவர் 19:

  19வது ஓவரை தாக்கூர் வீசினார்.இதில் மும்பை 15 ரன்கள் எடுத்தது. மும்பை 19 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்துள்ளது.
 • 21:40 (IST)Apr 03, 2019

  ஓவர் 18:

  18வது ஓவரை ப்ராவோ வீசினார்.இதில் மும்பை 6 ரன்கள் எடுத்தது. மும்பை 18 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்துள்ளது. சூர்யகுமார் யாதவ் 43 பந்தில் 7 பவுண்டரி ஒரு சிக்ஸருடன் 59 ரன்கள் எடுத்து ப்ராவோ பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
 • 21:34 (IST)Apr 03, 2019

  ஓவர் 17:

  17வது ஓவரை மோஹித் ஷர்மா வீசினார்.இதில் மும்பை 16 ரன்கள் எடுத்தது. மும்பை 17 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் எடுத்துள்ளது. க்ருணால் பாண்ட்யா 32 பந்தில் 5 பவுண்டரி ஒரு சிக்ஸருடன் 42 ரன்கள் எடுத்து மோஹித் ஷர்மா பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 39 பந்தில் 7 பவுண்டரி ஒரு சிக்ஸருடன் அரைசதமடித்து அசத்தினார்.
 • 21:27 (IST)Apr 03, 2019

  ஓவர் 16:

  16வது ஓவரை தாஹிர் வீசினார்.இதில் மும்பை 10 ரன்கள் எடுத்தது. மும்பை 16 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் எடுத்துள்ளது.
 • 21:20 (IST)Apr 03, 2019

  ஓவர் 15:

  15வது ஓவரை தாஹிர் வீசினார்.இதில் மும்பை 11 ரன்கள் எடுத்தது. மும்பை 15 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் எடுத்துள்ளது.
 • 21:12 (IST)Apr 03, 2019

  ஓவர் 14:

  14வது ஓவரை தாக்கூர் வீசினார்.இதில் மும்பை 4 ரன்கள் எடுத்தது. மும்பை 14 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் எடுத்துள்ளது.
 • 21:04 (IST)Apr 03, 2019

  ஓவர் 13:

  13வது ஓவரை ப்ராவோ வீசினார்.இதில் மும்பை 4 ரன்கள் எடுத்தது. மும்பை 13 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 78 ரன்கள் எடுத்துள்ளது.
 • 20:58 (IST)Apr 03, 2019

  ஓவர் 12:

  12வது ஓவரை மோஹித் வீசினார்.இதில் மும்பை 10 ரன்கள் எடுத்தது. மும்பை 12 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் எடுத்துள்ளது.
 • 20:55 (IST)Apr 03, 2019

  ஓவர் 11:

  11வது ஓவரை தாஹிர் வீசினார்.இதில் மும்பை 7 ரன்கள் எடுத்தது. மும்பை 11 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 64 ரன்கள் எடுத்துள்ளது.
 • 20:51 (IST)Apr 03, 2019

  ஓவர் 10:

  10வது ஓவரை ஜடேஜா வீசினார்.இதில் மும்பை 7 ரன்கள் எடுத்தது. மும்பை 10 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் எடுத்துள்ளது.
 • 20:48 (IST)Apr 03, 2019

  ஓவர் 9:

  யுவராஜ்சிங் தாஹிர் பந்தில் ராயுடுவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மும்பை 9 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் எடுத்துள்ளது.
 • 20:41 (IST)Apr 03, 2019

  ஓவர் 8:

  ரோஹித் ஷர்மா ஜடேஜா பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மும்பை 8 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்கள் எடுத்துள்ளது.
 • 20:33 (IST)Apr 03, 2019

  ஓவர் 7:

  ஏழாவது ஓவரை தாஹிர் வீசினார். மும்பை இந்த ஓவரில் ஐந்து ரன்கள் எடுத்தது. மும்பை 45/1.
 • 20:30 (IST)Apr 03, 2019

  ஓவர் 6:

  ஆறாவது ஓவரை மோஹித் ஷர்மா வீசினார். இந்த ஓவிரில் மும்பை 1 ரன் மட்டுமே எடுத்தது. மும்பை 40/1.
 • 20:26 (IST)Apr 03, 2019

  ஓவர் 5:

  ஐந்தாவது ஓவரை சஹார் வீசினார். ஹாட்ரிக் பவுண்டரியுடன் மும்பை அதிரடியாக ஆடி வருகிறது. மும்பை 39/1
 • 20:22 (IST)Apr 03, 2019

  ஓவர் 4:

  நான்காவது ஓவரை தாக்கூர் வீசினார். சூர்யகுமார் 11, ரோஹித் ஷர்மா 8 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். மும்பை 25/1 
 • 20:15 (IST)Apr 03, 2019

  ஓவர் 3:

  மூன்றாவது ஓவரை சஹார் வீசினார். மும்பை முதல் பவுண்டரி அடித்தது. டிகாக் 4 ரன்கள் எடுத்திருந்த வேளையில் ஜாதவ்விடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மும்பை 9/1
 • 20:10 (IST)Apr 03, 2019

  ஓவர் 2:

  இந்த ஓவரை ஷரதுல் தாக்கூர் வீசினார். இதில் ஒரு ரன் மட்டுமே எடுத்தது மும்பை. 3/0 
 • 20:06 (IST)Apr 03, 2019

  ஓவர் 1:

  முதல் ஓவர் சஹார் வீசினார். இதில் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்தது  மும்பை.
  Comments
  தொடர்புடைய கட்டுரைகள்
  மும்பை போட்டியின் போது தோனியுடன் செல்ஃபி எடுத்த பாட்டி
  மும்பை போட்டியின் போது தோனியுடன் செல்ஃபி எடுத்த பாட்டி
  ஒற்றைக் கையில் கேட்ச் செய்து ரெய்னாவை வெளியேற்றிய பொலார்ட்
  ஒற்றைக் கையில் கேட்ச் செய்து ரெய்னாவை வெளியேற்றிய பொலார்ட்
  மான்கடிங் முறையில் அவுட் செய்ய தோனியை எச்சரித்த க்ருணால் பாண்ட்யா
  மான்கடிங் முறையில் அவுட் செய்ய தோனியை எச்சரித்த க்ருணால் பாண்ட்யா
  தோனி முன்பே ஹெலிகாப்டர் ஷாட் ஆடி அசத்திய ஹர்திக் பாண்ட்யா!
  தோனி முன்பே ஹெலிகாப்டர் ஷாட் ஆடி அசத்திய ஹர்திக் பாண்ட்யா!
  ஐபிஎல் 2019: 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வென்றது மும்பை! #Highlights
  ஐபிஎல் 2019: 37 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வென்றது மும்பை! #Highlights
  Advertisement