ராஜஸ்தானை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த கொல்கத்தா

Updated: 08 April 2019 12:57 IST

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் ஐபிஎல் 2019 புள்ளிப்பட்டியலில் 5 போட்டிகளில் 4ஐ வென்று முதலிடத்தில் உள்ளது.

KKR Crush Rajasthan Royals By 8 Wickets To Go Top Of The Table
கிறிஸ் லின் 32 பந்தில் 50 ரன்கள் எடுத்து, அணியின் வெற்றிக்கு உதவினார். © BCCI/IPL

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கிறிஸ் லின்னின் அதிரடி அரைசதம், நரேன் மற்றும் உத்தப்பாவின் அதிரடி பேட்டிங்கால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் ஐபிஎல் 2019 புள்ளிப்பட்டியலில் 5 போட்டிகளில் 4ஐ வென்று முதலிடத்தில் உள்ளது. டாஸ் வென்று பந்துவிச்சை தேர்ந்தெடுத்த கொல்கத்தா, ராஜஸ்தான் அணியை 139/3 என்று கட்டுப்படுத்தியது. ஸ்மித் அதிகபட்சமாக 73 ரன்கள் குவித்து ஆட்டமிசக்காமல் இருந்தார். 140 என்ற இலக்கை கொல்கத்தா 13.5 ஓவரில் எட்டி வெற்றி பெற்றது.

நரேன் 47, லின் 50 என துவக்க வீரர்கள் அசத்த முதல் விக்கெட்டுக்கு 8.3 ஓவரில் 91 ரன்கள் சேர்த்தது கொல்கத்தா. இந்த பார்ட்னர்ஷிப்பே ராஜஸ்தானின் வெற்றியை பறித்தது. 

அதிக பந்துகள் மிதமிருக்கையில் வென்ற போட்டியாக இந்த போட்டி அமைந்துதுள்ளது. 37 பந்துகள் மிதமிருக்கையில் கொல்கத்தா வெற்றி பெற்றது.

நரேன் மற்றும்  லின் இருவரும்  6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் முறையே 47,50 ரன்கள் குவித்தனர். 

உத்தப்பா 16 பந்தில் 26 ரன் குவிக்க, கொல்கத்தா எளிதாக 13.5 ஓவரில் இலக்கை எட்டியது. 

கிறிஸ் லின் பேட்டிங் செய்யும் போது தவல் குல்கர்னி வீசிய பந்து பேட்டில் பட்டு ஸ்டெம்பை தாக்கியது. ஸ்டெம்ப் லைட் எரிந்ததும் குல்கர்னி துள்ளி குதித்தார். ஆனால், பெயில்ஸ் கீழே விழாமல் அப்படியே பந்து நகர்ந்து பவுண்டரிக்கு சென்றது. இதனை அம்பயர் விதிகளின் படி அவுட் இல்லை என்று கூற, லின் பேட்டிங்கை தொடர்ந்தார். 

முன்னதாக தடைக்கு பின் அணிக்கு திரும்பிய ஸ்டீவ் ஸ்மித் 59  பந்துகளில் 73 ரன்கள் குவித்து ராஜஸ்தான் அணி கெளரவமான ஸ்கோரை எட்ட உதவினார். 

Comments
ஹைலைட்ஸ்
  • ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கிறிஸ் லின் அரைசதம் அடித்தார்
  • ஐபிஎல் 2019 புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது கொல்கத்தா
  • உத்தப்பா 16 பந்தில் 26 ரன் குவித்தார். இது இலக்கை எட்ட உதவியாக இருந்தது
தொடர்புடைய கட்டுரைகள்
''லைட் எரிந்தாலே அவுட்'' ஐபிஎல் சர்சசைக்கு தீர்வு சொல்லும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன்
ஸ்டெம்ப்ல பட்டுச்சு... லைட் எரிஞ்சுச்சு... ஆனா அவுட் இல்ல!
ஸ்டெம்ப்ல பட்டுச்சு... லைட் எரிஞ்சுச்சு... ஆனா அவுட் இல்ல!
ராஜஸ்தானை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த கொல்கத்தா
ராஜஸ்தானை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த கொல்கத்தா
கொல்கத்தா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி. #Liveupdates
கொல்கத்தா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி. #Liveupdates
Advertisement