ஐபிஎல் 2019: ஒரு ரன்னில் கோப்பையை இழந்தது சென்னை #Highlights

Updated:12 May 2019 23:46 IST

IPL Final 2019: Chennai Super Kings vs Mumbai Indians Live Score: மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி எட்டு முறை ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் ஆடியுள்ளது.

Live IPL Final Score, MI vs CSK Live Cricket Score: Mumbai Indians, Chennai Super Kings Eye Fourth IPL Trophy
MI vs CSK IPL 2019 Final Score: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் ஒருமுறை கூட மும்பை அணியை வென்றதில்லை. © BCCI/IPL

Chennai Super Kings vs Mumbai Indians : தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) மற்றும் ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியும் ஐபிஎல் 2019 தொடரின் இறுதிப்போட்டியில் ஆடவுள்ளன. இந்த போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ்காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ளது. குவாலிஃபையர் 1ல் சென்னையை மும்பை அணி வீழ்த்தியது.  இரு அணிகளும் 3 முறை பட்டம் வென்றுள்ள நிலையில் நான்காவது வெற்றியை ருசிக்க இரு அணிகளும் தயாராகி வருகின்றன. 

புள்ளிவிவரங்கள் இரு அணிகளுக்கும் சமபலம் வாய்ந்ததாகவே உள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கையே ஓங்கியுள்ளது. மும்பை அணி தான் ஆடிய நான்கு இறுதி போட்டிகளில் மூன்றை வென்றுள்ளது. அதில் இரண்டு சென்னை அணிக்கு எதிரானது. 

மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி எட்டு முறை ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் ஆடியுள்ளது. இரண்டு ஆண்டு தடைக்குபின் சென்ற ஆண்டு ஐபிஎல் தொடருக்கு திரும்பிய சென்னை சாம்பியன் பட்டம் பெற்றது. 

இன்றைய போட்டி ஐபிஎல் தொடரின் பரம எதிரிகளாக பார்க்கப்படும் சென்னை மும்பை அணிகளுக்கு மேலும் ஒரு சிறந்த போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கே:

வாட்சன், டூப்ளெசிஸ், ரெய்னா, ராயுடு, தோனி, ப்ராவோ, ஜடேஜா, தீபக் சஹார், ஹர்பஜன், தாஹிர், தாக்கூர்,

மும்பை இந்தியன்ஸ்: 

ரோஹித், டிகாக்,சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா,பொலார்ட், மலிங்கா, ராகுல் சஹார், மெக்லன்ஹன், பும்ரா

ஸ்கோர்கார்டு

வர்ணனை

வரைபடம்

 • 23:37 (IST)May 12, 2019
  20வது ஓவரை  மலிங்கா வீசினார். இந்த ஓவரில் சென்னை 8 ரன்  எடுத்தது. 20வது ஓவர் முடிவில் சென்னை 147/6
 • 23:24 (IST)May 12, 2019
  18வது ஓவரை  பும்ரா    வீசினார். இந்த ஓவரில் சென்னை 9 ரன்  எடுத்தது ப்ராவோ அவுட் ஆனார். 19வது ஓவர் முடிவில் சென்னை 141/5
 • 23:17 (IST)May 12, 2019
  18வது ஓவரை  க்ருணால் பாண்ட்யா   வீசினார். இந்த ஓவரில் சென்னை 20 ரன்  எடுத்தது. வாட்சன் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்தார். 18வது ஓவர் முடிவில் சென்னை 132/4
 • 23:09 (IST)May 12, 2019
  17வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் சென்னை 4 ரன் மட்டுமே எடுத்தது. 17வது ஓவர் முடிவில் சென்னை 112/4
 • 23:02 (IST)May 12, 2019
  16வது ஓவரை மலிங்கா வீசினார். இந்த ஓவரில் சென்னை 20 ரன் மட்டுமே எடுத்தது. 16வது ஓவர் முடிவில் சென்னை 108/4
 • 22:57 (IST)May 12, 2019
  15வது ஓவரை  மெக்லன்ஹன்   வீசினார். இந்த ஓவரில் சென்னை 3 ரன் மட்டுமே எடுத்தது. 15வது ஓவர் முடிவில் சென்னை 87/4
 • 22:50 (IST)May 12, 2019
  14வது ஓவரை  ராகுல் சஹார்  வீசினார். இந்த ஓவரில் சென்னை 3 ரன் மட்டுமே எடுத்தது. 14வது ஓவர் முடிவில் சென்னை 84/4
 • 22:46 (IST)May 12, 2019
  13வது ஓவரை  ஹர்திக் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரில் சென்னை 2 ரன் மட்டுமே எடுத்தது. தோனி ரன் அவுட் ஆகி வெளியேறினார். 13வது ஓவர் முடிவில் சென்னை 81/4
 • 22:37 (IST)May 12, 2019
  12வது ஓவரை  ராகுல் சஹார் வீசினார். இந்த ஓவரில் சென்னை 6 ரன் மட்டுமே எடுத்தது. 12வது ஓவர் முடிவில் சென்னை 79/3
 • 22:33 (IST)May 12, 2019
  11வது ஓவரை  பும்ரா வீசினார். இந்த ஓவரில் சென்னை 1 ரன் மட்டுமே எடுத்தது. ராயுடு டிகாக்கிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.11வது ஓவர் முடிவில் சென்னை 73/3
 • 22:26 (IST)May 12, 2019
  10வது ஓவரை ராகுல் சஹார் வீசினார். இந்த ஓவரில் சென்னை 2 ரன்கள் எடுத்தது. ரெய்னா எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.10வது ஓவர் முடிவில் சென்னை 72/2
 • 22:20 (IST)May 12, 2019
  ஒன்பதாவது ஓவரை மெக்லன்ஹன் வீசினார். இந்த ஓவரில் சென்னை 10 ரன்கள் எடுத்தது. 9வது ஓவர் முடிவில் சென்னை 70/1
 • 22:14 (IST)May 12, 2019
  8வது ஓவரை ராகுல் சஹார் வீசினார். இந்த ஓவரில் சென்னை 8 ரன்கள் எடுத்தது. 8வது ஓவர் முடிவில் சென்னை 60/1
 • 22:09 (IST)May 12, 2019
  ஏழாவது ஓவரை மெக்லன்ஹன் வீசினார். இந்த ஓவரில் சென்னை 4 ரன்கள் எடுத்தது. 7வது ஓவர் முடிவில் சென்னை 57/1
 • 22:01 (IST)May 12, 2019
  ஆறாவது ஓவரை மலிங்கா வீசினார். இந்த ஓவரில் சென்னை 15 ரன்கள் எடுத்தது. 6வது ஓவர் முடிவில் சென்னை 53/1
 • 21:55 (IST)May 12, 2019
  ஐந்தாவது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் சென்னை 5 ரன்கள் எடுத்தது. 5வது ஓவர் முடிவில் சென்னை 38/1
 • 21:51 (IST)May 12, 2019
  நான்காவது ஓவரை க்ருணால் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரில் சென்னை 14 ரன்கள் எடுத்தது. ஆனால் டூப்ளெசிஸ் 26 ரன்னில் டிகாக்கால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். 4வது ஓவர் முடிவில் சென்னை 33/1
 • 21:46 (IST)May 12, 2019
  மூன்றாவது ஓவரை மலிங்கா வீசினார். இந்த ஓவரில் சென்னை 7  ரன்கள் எடுத்தது. 3வது ஓவர் முடிவில் சென்னை 19/0
 • 21:39 (IST)May 12, 2019
  இரண்டாவது ஓவரை க்ருணால் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரில் சென்னை 5 ரன்கள் எடுத்தது. சென்னை 12/0
 • 21:37 (IST)May 12, 2019
  முதல் ஓவரை மெக்லன்ஹன் வீசினார். ஒரு ஓவர் முடிவில் சென்னை அணி 7 ரன்கள் எடுத்துள்ளது.
 • 21:18 (IST)May 12, 2019
  20வது ஓவரை ப்ராவோ வீசினார். இந்த ஓவரில் மும்பை 9 ரன்கள் எடுத்தது. 20வது ஓவர் முடிவில் மும்பை 149/8
 • 21:09 (IST)May 12, 2019
  19வது ஓவரை தீபக் சஹார் வீசினார். இந்த ஓவரில் மும்பை 4 ரன்கள் எடுத்தது. ஹர்திக் மற்றும் ராகுல் சஹாரை வீழ்த்தினார் தீபக் சஹார். 19வது ஓவர் முடிவில் மும்பை 140/7
 • 21:00 (IST)May 12, 2019
  18வது ஓவரை தாக்கூர் வீசினார். இந்த ஓவரில் மும்பை 16 ரன்கள் எடுத்தது. 18வது ஓவர் முடிவில் மும்பை 136/5
 • 20:54 (IST)May 12, 2019
  17வது ஓவரை தாஹிர் வீசினார். இந்த ஓவரில் மும்பை 10 ரன்கள் எடுத்தது. 17வது ஓவர் முடிவில் மும்பை 120/5
 • 20:50 (IST)May 12, 2019
  16வது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரில் மும்பை 8 ரன்கள் எடுத்தது. 16வது ஓவர் முடிவில் மும்பை 110/5
 • 20:45 (IST)May 12, 2019
  15வது ஓவரை தாஹிர் வீசினார். இந்த ஓவரில் மும்பை 8 ரன்கள் எடுத்தது. இஷான் கிஷன் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 15வது ஓவர் முடிவில் மும்பை 102/5
 • 20:38 (IST)May 12, 2019
  14வது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரில் மும்பை 4 ரன்கள் எடுத்தது. 14வது ஓவர் முடிவில் மும்பை 94/4
 • 20:34 (IST)May 12, 2019
  13வது ஓவரை தாக்கூர் வீசினார். இந்த ஓவரில் மும்பை 5 ரன்கள் எடுத்தது. க்ருணால் பாண்ட்யா 7 ரன் எடுத்த நிலையில் தாக்கூர் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 13வது ஓவர் முடிவில் மும்பை 90/4
 • 20:30 (IST)May 12, 2019
  12வது ஓவரை இம்ரான் தாஹிர் வீசினார். இந்த ஓவரில் மும்பை 5 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் தாஹிர் பந்தில் போல்டானர். 12 ஓவர் முடிவில் மும்பை 85/3
 • 20:25 (IST)May 12, 2019
  11வது ஓவரை ஹர்பஜன் வீசினார். இந்த ஓவரில் மும்பை 10 ரன்கள் எடுத்தது. 11 ஓவர் முடிவில் மும்பை 80/2
 • 20:20 (IST)May 12, 2019
  பத்தாவது ஓவரை ப்ராவோ வீசினார். இந்த ஓவரில் மும்பை 12 ரன்கள் எடுத்தது. 10 ஓவர் முடிவில் மும்பை 70/2
 • 20:14 (IST)May 12, 2019
  ஒன்பதாவது ஓவரை ஹர்பஜன் வீசினார். இந்த ஓவரில் மும்பை 5 ரன்கள் எடுத்தது. 9 ஓவர் முடிவில் மும்பை 58/2
 • 20:10 (IST)May 12, 2019
  எட்டாவது ஓவரை ப்ராவோ வீசினார். இதில் மும்பை 3 ரன்கள் எடுத்தது. 8 ஓவர் முடிவில் மும்பை 53/2
 • 20:06 (IST)May 12, 2019
  ஏழாவது ஓவரை ஹர்பஜன் வீசினார். இந்த ஓவரில் மும்பை 5 ரன்கள் எடுத்தது. 7 ஓவர் முடிவில் மும்பை 50/2
 • 20:02 (IST)May 12, 2019
  ஆறாவது ஓவரை தீபக் சஹார் வீசினார். ஓவரின் இரண்டாவது பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்தச்ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தார். இந்த ஓவரை தீபக் சஹார் மெய்டன் ஓவராக வீசினார். 6 ஓவர் முடிவில் மும்பை 45/2
 • 19:57 (IST)May 12, 2019
  ஐந்தாவது ஓவரை தாக்கூர் வீசினார். ஓவரின் நான்காவது பந்தில் சிக்ஸர் அடித்த டிகாக், 5வது பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 5 ஓவர் முடிவில் மும்பை 45/1
 • 19:51 (IST)May 12, 2019
  நான்காவது ஓவரை ஹர்பஜன் வீசினார். இந்த ஓவரில் மும்பை 7 ரன்கள் எடுத்தது. ரோஹித் 14 ரன்களுடனும், டிகாக் 22 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.  4 ஓவர் முடிவில் மும்பை 37/0
 • 19:46 (IST)May 12, 2019
  மூன்றாவது  ஓவரை தீபக் சஹார் வீசினார். டிகாக் இந்த ஓவரில் 3 சிக்சர் அடித்து அதிர வைத்தார். மும்பை இந்த ஓவரில் 20 ரன்கள் குவித்தது. மும்பை 30/0
 • 19:44 (IST)May 12, 2019
  இரண்டாவது ஓவரை ஷ்ரதுல் தாக்கூர் வீசினார். ரோஹித் ஷர்மா ஆட்டத்தின் முதல் சிக்ஸரை அடித்து அசத்தினார். இந்த ஓவரில் மும்பை எட்டு ரன்கள் குவித்தது. மும்பை 10/0
 • 19:38 (IST)May 12, 2019
  முதல் ஓவரை தீபக் சஹார் வீசினார். டிகாக் மற்றும் ரோஹித் துவக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரில் மும்பை 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. சஹார் 4 டாட் பால்களை வீசி அசத்தினார்.
  Comments
  தொடர்புடைய கட்டுரைகள்
  ஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்!
  ஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்!
  ''ஆரஞ்ச் கேப், பர்ப்பிள் கேப் எல்லாம் இல்லை.. ஆனால் கோப்பை உள்ளது'' மும்பை பயிற்சியாளர் ஜெயவர்த்தனே!
  வாட்சனை ரன் அவுட்டாக்கிய ஜடேஜாவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
  வாட்சனை ரன் அவுட்டாக்கிய ஜடேஜாவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
  ஐபிஎல் இறுதிப்போட்டி: க்ருணாலை வீட்டுக்கு அனுப்பிய தாக்கூரின் வாவ் கேட்ச்!
  ஐபிஎல் இறுதிப்போட்டி: க்ருணாலை வீட்டுக்கு அனுப்பிய தாக்கூரின் வாவ் கேட்ச்!
  ''இனிதான் சிறப்பான சம்பவம் காத்திருக்கு'' பும்ராவை புகழ்ந்த சச்சின்!
  Advertisement