வாட்சனை ரன் அவுட்டாக்கிய ஜடேஜாவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

Updated: 13 May 2019 18:07 IST

அடுத்ததாக சேஸிங்கில் ஆட்டம் முடிய 10 பந்துகள் மீதமிருக்கையில் களமிறங்கிய ஜடேஜா 5 பந்துகளை வீணடித்தும், தேவையில்லாமல் ரன் ஓடி வாட்சனை ரன் அவுட்டும் ஆகினார். 

MI vs CSK IPL Final: Ravindra Jadeja Faces Fans
ஜடேஜா,மும்பை அணிக்கு எதிராக ஐந்து பந்தில் ஐந்து ரன்கள் எடுத்தார். © AFP

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் பெயர் நேற்றைய போட்டியில் சென்னை வென்றிருந்தால் வரலாற்றில் இடம்பிடித்திருக்கும். 2019 ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஆச்சர்யமளிக்கும் விதமாக ஜடேஜாவுக்கு தோனி இரண்டு ஓவர்களை அளித்தார். அதில் வெறும் 12 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். அடுத்ததாக சேஸிங்கில் ஆட்டம் முடிய 10 பந்துகள் மீதமிருக்கையில் களமிறங்கிய ஜடேஜா 5 பந்துகளை வீணடித்தும், தேவையில்லாமல் ரன் ஓடி வாட்சனை ரன் அவுட்டும் ஆகினார். 

59 பந்தில் 80 ரன்கள் அடித்து சிஎஸ்கேவை வெற்றிக்கு மிக அருகில் அழைத்து சென்ற வாட்சனை கடைசி 2 பந்துகள் மீதமிருக்கும் போது ரன் அவுட் ஆக்கினார் ஜடேஜா. 

இதனால் சி.எஸ்.கே-வால் வெற்றி இலக்கை அடைய முடியாமல் ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது. மும்பை நான்காவது முறையாக பட்டம் வென்று அசத்தியது.  

இந்த ஆட்டம் முடிந்தது ஜடேஜாவை ரசிகர்கள் ட்விட்டரில் வறுத்தெடுத்தனர். 2017 சம்பியன் கோப்பையில் ஹர்திக் பாண்ட்யாவை ரன் அவுட் செய்ததையும் நினைவு கூர்ந்து ஜடேஜாவை கலாய்த்தனர். 

தொலைகாட்சி ரீப்ளேயில் அது ஜடேஜாவின் அழைப்பு என்றுதான் தெரிந்தது. இதற்கும் வாட்சனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெளிவாக இருந்தது. 

வாட்சன் களத்தில் இருக்கும் வரை வெற்றி சென்னை வசமே இருந்தது. அவர் அவுட் ஆனதும் கடைசியில் 2 பந்தில் 4 ரன்கள் எடுக்க முடியாமல் போக சென்னை ஒரு ரன்னில் தோல்வியுற்றது. 

வாட்சன் 4 சிக்சர் மற்றும் 8 பவுண்டரிகளும் அடித்து 80 ரன்களை குவித்தார். முதல் 3 ஓவர்களில் 37 ரன்களை மலிங்கா விட்டு கொடுத்தாலும் தன் அனுபவத்தால் கடைசி ஓவரில் சிறப்பாக பந்துவீசி அசத்தினார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"ஜடேஜாவின் பேட்டிங் முன்னேற்றம் இந்திய அணிக்கு முக்கியமானது" - சவுரவ் கங்குலி
"ஜடேஜாவின் பேட்டிங் முன்னேற்றம் இந்திய அணிக்கு முக்கியமானது" - சவுரவ் கங்குலி
3வது ஒருநாள் போட்டிக்கு முன் வீரர்களுடன் நேரம் கழித்த விராட் கோலி!
3வது ஒருநாள் போட்டிக்கு முன் வீரர்களுடன் நேரம் கழித்த விராட் கோலி!
ஜடேஜாவின் சர்ச்சைக்குரிய ரன் அவுட்... கொந்தளித்த விராட் கோலி!
ஜடேஜாவின் சர்ச்சைக்குரிய ரன் அவுட்... கொந்தளித்த விராட் கோலி!
India vs Ban 1st Test Highlights - வங்கதேசத்தைத் தவிடுபொடியாக்கி இந்தியா வெற்றி!
India vs Ban 1st Test Highlights - வங்கதேசத்தைத் தவிடுபொடியாக்கி இந்தியா வெற்றி!
சஞ்சய் மஞ்ச்ரேகரின் "Being A Parent" ட்விட்டுக்கு எழுந்த விமர்சனம்!
சஞ்சய் மஞ்ச்ரேகரின் "Being A Parent" ட்விட்டுக்கு எழுந்த விமர்சனம்!
Advertisement