ஐ.பி.எல். ஃபைனல் மேட்ச் சென்னைல இல்ல! எங்க நடக்கப்போகுது தெரியுமா?!

Updated: 22 April 2019 18:57 IST

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் I, J, K ஆகிய இருக்கைகள் பிரிவுக்கு அனுமதி கிடைக்காததால் போட்டி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

IPL 2019 Final To Be Held In Hyderabad, Chennai To Host Qualifier 1, Vizag Gets Eliminator, Qualifier 2, Say Reports
குவாலிஃபையர் 1 மேட்ச் மே 7-ம்தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. © Twitter

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐ.பி.எல். 2019 கிரிக்கெட் லீக்கின் ப்ளே ஆஃப் சுற்றுக்கான அட்டவணை இன்று அறிவிக்கப்பட்டது. இதன்படி நடப்பாண்டின் ஐ.பி.எல். இறுதிப் போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. 

முன்னதாக நடப்பாண்டின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. பொதுவாக கடந்த லீக்கின் இறுதிப்போட்டியில் ரன்னர் மற்றும் வின்னர்களின் சொந்த மைதானத்தில்தான் ப்ளே ஆஃப் சுற்று நடத்தப்படும் என்பது விதி. 

அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானம்தான் இறுதிப்போட்டியை நடத்தும் தகுதியை  பெற்றிருந்தது. ஆனால் இங்குள்ள I, J, K ஆடியன்ஸ் கேலரிக்கு அனுமதி  இன்னும் பெறப்படாததால் இறுதிப்போட்டியை நடத்தும் வாய்ப்பை சென்னை மைதானம் இழந்திருக்கிறது. 
 

ப்ளே ஆஃபை பொறுத்தவரையில் எலிமினேட்டர் போட்டி மே 8-ம்தேதி  நடைபெறும். இதில் ப்ளே ஆஃபுக்கு தகுதி பெற்ற 3 மற்றும் 4-வது அணிகள் மோதும். இதில் தோல்வி அடையும் அணி ஆட்டத்தை விட்டு வெளியேறி விடும்.

மே 7-ம்தேதி முதலில் நடைபெறும் குவாலிஃபையர் 1 போட்டியில் ப்ளே ஆஃபுக்கு தகுதிபெற்ற முதல் 2 அணிகள் மோதும். வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும். தோல்வி அடையும் அணி, எலிமினேட்டர் பிரிவில் வென்ற அணியுடன் மோதும். 

இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் 2-வது அணியாக இருக்கும். தோல்வி அடையும் அணி ஆட்டத்தை விட்டு வெளியேறும். 

இதில் குவாலிஃபையர் 1 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. எலிமினேட்டர் மற்றும் குவாலிஃபயர் 2 போட்டி ஐதராபாதில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தேர்தலை கருத்தில் கொண்டு இந்த போட்டி விசாகப்பட்டினத்திற்கு இந்த 2 போட்டிகளும் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இறுதிப்போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மே 12-ம்தேதி நடைபெறுகிறது.
 

(With inputs from agencies)

Comments
ஹைலைட்ஸ்
  • The final of the 12th edition of the IPL will be played in Hyderabad
  • TNCA wasn't given permission to open stands I, J and K
  • Qualifier 1 will be played on May 7 in Chennai
தொடர்புடைய கட்டுரைகள்
இணையத்தில் வைரலான கைஃப்போடு கைஃப் எடுத்த புகைப்படம்
இணையத்தில் வைரலான கைஃப்போடு கைஃப் எடுத்த புகைப்படம்
"அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி" - வாட்சனின் இன்ஸ்டாகிராம் பதிவு!
"அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி" - வாட்சனின் இன்ஸ்டாகிராம் பதிவு!
"என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ள ஐபிஎல் உதவியது" - ஜானி பாரிஸ்ட்டோ
"என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ள ஐபிஎல் உதவியது" - ஜானி பாரிஸ்ட்டோ
ஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்!
ஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்!
 தோனி தவறாக முடிவெடுப்பார். ஆனால், அவரிடம் சொல்ல முடியாது சர்ச்சையை ஏற்படுத்தும் குல்தீப் கருத்து!!
'' தோனி தவறாக முடிவெடுப்பார். ஆனால், அவரிடம் சொல்ல முடியாது'' சர்ச்சையை ஏற்படுத்தும் குல்தீப் கருத்து!!
Advertisement