காற்றில் பேட்டை பறக்கவிட்டு அதிருப்தியை வெளிப்படுத்திய பொலார்ட்

Updated: 13 May 2019 14:47 IST

மும்பை இந்தியன்ஸ் வீரர் பொலார்ட் நேற்று தனது 32வது பிறந்த நாளை கொண்டாடினார்.

MI vs CSK Final: Kieron Pollard Throws Bat Up In The Air, Takes Strike At Tramlines After Umpiring Howler. Watch
க்ரீஸில் நின்றவாரே காற்றில் பேட்டை தூக்கி வீசி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார் பொலார்ட். © BCCI/IPL

மும்பை இந்தியன்ஸ் வீரர் பொலார்ட் நேற்று தனது 32வது பிறந்த நாளை கொண்டாடினார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பொலார்டின் அதிரடியான 25 பந்துகளில் 41 ரன் குவிப்பால் மும்பை 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரை ப்ராவோ வீசினார் அதில் முதல் இரண்டு பந்துகளை டாட் பாலாக ப்ராவோ வீச அதனை கள நடுவர் வைடாக அறிவிக்காமல் முறையான பந்து என அறிவிக்க விரக்தியின் உச்சத்துக்கு சென்றார் பொலார்ட். க்ரீஸில் நின்றவாரே காற்றில் பேட்டை தூக்கி வீசி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

சென்னை தரப்பில் இந்த போட்டியில் தீபக் சஹார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

டாஸ் வென்ற மும்பை பேட்டிங்கை தேர்வு செய்தது. மும்பை அணியின் துவக்க வீரர்களான ரோஹித் மற்றும் டிகாக் இருவரும் அதிரடியாக ஆடத்தை துவங்கினர்.

சென்னை அணியின் வேகப்பந்துவீச்சாளர் தாக்கூர் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் தாஹிர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் மும்பை வீரர்கள் பவுண்டரிகள் அல்லாமல் சிக்ஸர்கள் மூலமாக சென்னை வீரர்களின் பந்துவீச்சை அடித்தனர்.

மும்பை துவக்க வீரர் டிகாக் ஒரே ஓவரில் மூன்று சிக்ஸரை அடித்து அசத்தினார். சஹார் வீசிய அந்த ஓவரில் 20 ரன்கள் குவித்தது மும்பை அணி.

டிகாக் 29 ரன்களுக்கும், ரோஹித் 15 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

Comments
ஹைலைட்ஸ்
  • பொலார்ட் நேற்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடினார்
  • பொலார்ட் அதிரடியாக ஆடி 25 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார்
  • இந்த போட்டியில் தீபக் சஹார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்
தொடர்புடைய கட்டுரைகள்
நடுவரின் நோபால் முடிவை மாற்ற வற்புறுத்திய கீரோன் பொல்லார்ட்!
நடுவரின் நோபால் முடிவை மாற்ற வற்புறுத்திய கீரோன் பொல்லார்ட்!
"ஹர்திக் பாண்ட்யாவின் வளர்ச்சியில் எந்த ஆச்சரியமும் இல்லை" - கீரன் பொல்லார்ட்!
"ஹர்திக் பாண்ட்யாவின் வளர்ச்சியில் எந்த ஆச்சரியமும் இல்லை" - கீரன் பொல்லார்ட்!
இந்தியாவுக்கு எதிரான டி20: மேற்கிந்திய தீவுகள் அணியில் நரைன், பொலார்ட்
இந்தியாவுக்கு எதிரான டி20: மேற்கிந்திய தீவுகள் அணியில் நரைன், பொலார்ட்
ஐபிஎல் இறுதி போட்டி அதிருப்தியை வெளிப்படுத்திய பொலார்டுக்கு அபராதம்!
ஐபிஎல் இறுதி போட்டி அதிருப்தியை வெளிப்படுத்திய பொலார்டுக்கு அபராதம்!
காற்றில் பேட்டை பறக்கவிட்டு அதிருப்தியை வெளிப்படுத்திய பொலார்ட்
காற்றில் பேட்டை பறக்கவிட்டு அதிருப்தியை வெளிப்படுத்திய பொலார்ட்
Advertisement