ஐபிஎல் இறுதி போட்டி அதிருப்தியை வெளிப்படுத்திய பொலார்டுக்கு அபராதம்!

Updated: 13 May 2019 20:37 IST

க்ரீஸில் நின்றவாறே காற்றில் பேட்டை தூக்கி வீசி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

MI vs CSK IPL 2019 Final: Mumbai Indians
க்ரீஸில் நின்றவாறே காற்றில் பேட்டை தூக்கி வீசி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். © BCCI/IPL

மும்பை இந்தியன்ஸ் வீரர் பொலார்ட் நேற்று தனது 32வது பிறந்த நாளை கொண்டாடினார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பொலார்டின் அதிரடியான 25 பந்துகளில் 41 ரன் குவிப்பால் மும்பை 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரை ப்ராவோ வீசினார் அதில் முதல் இரண்டு பந்துகளை டாட் பாலாக ப்ராவோ வீச அதனை கள நடுவர் வைடாக அறிவிக்காமல் முறையான பந்து என அறிவிக்க விரக்தியின் உச்சத்துக்கு சென்றார் பொலார்ட். க்ரீஸில் நின்றவாறே காற்றில் பேட்டை தூக்கி வீசி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

சென்னை தரப்பில் இந்த போட்டியில் தீபக் சஹார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  டாஸ் வென்ற மும்பை பேட்டிங்கை தேர்வு செய்தது. மும்பை அணியின் துவக்க வீரர்களான ரோஹித் மற்றும் டிகாக் இருவரும் அதிரடியாக ஆடத்தை துவங்கினர்.

பொலார்ட் கடைசி ஓவரில் அதிருப்தியை வெளிப்படுத்திய போது கள நடுவர்கள் மேனன் மற்றும் இயான் கோட் பொலார்டுடன் உரையாடினர். அதன் பின் ஆடிய மும்பை அணி த்ரில் வெற்றியை பதிவு செய்தது. 

கடைசி ஓவரில் இப்படி ஆக்ரோஷமாக நடந்து கொண்டதற்காக பொலார்டுக்கு ஆட்ட சம்பளத்தில் 25 சதவிகித சம்பளத்தை அபராதமாக விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். லெவல் 1 குற்றம் மற்றும் 2.8வது ஐபிஎல் விதியின் படி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"ஹர்திக் பாண்ட்யாவின் வளர்ச்சியில் எந்த ஆச்சரியமும் இல்லை" - கீரன் பொல்லார்ட்!
"ஹர்திக் பாண்ட்யாவின் வளர்ச்சியில் எந்த ஆச்சரியமும் இல்லை" - கீரன் பொல்லார்ட்!
இந்தியாவுக்கு எதிரான டி20: மேற்கிந்திய தீவுகள் அணியில் நரைன், பொலார்ட்
இந்தியாவுக்கு எதிரான டி20: மேற்கிந்திய தீவுகள் அணியில் நரைன், பொலார்ட்
ஐபிஎல் இறுதி போட்டி அதிருப்தியை வெளிப்படுத்திய பொலார்டுக்கு அபராதம்!
ஐபிஎல் இறுதி போட்டி அதிருப்தியை வெளிப்படுத்திய பொலார்டுக்கு அபராதம்!
காற்றில் பேட்டை பறக்கவிட்டு அதிருப்தியை வெளிப்படுத்திய பொலார்ட்
காற்றில் பேட்டை பறக்கவிட்டு அதிருப்தியை வெளிப்படுத்திய பொலார்ட்
பவுண்டரிக்கு சென்ற பந்தை காலால் தடுத்து நிலைதடுமாறிய பொலார்ட்!
பவுண்டரிக்கு சென்ற பந்தை காலால் தடுத்து நிலைதடுமாறிய பொலார்ட்!
Advertisement