ஐ.பி.எல். 2019: 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வென்றது ஐதராபாத் சன் ரைசர்ஸ்!! #Highlights

Updated: 04 April 2019 23:43 IST

ஆட்ட நாயகன் விருது 28 பந்துகளில் 48 ரன்களை குவித்த பேர்ஸ்டாவுக்கு வழங்கப்பட்டது.

Live IPL Score, DC vs SRH Live Cricket Score: Delhi Capitals, SunRisers Hyderabad Eye To Top Table With A Win
ஐதராபாத்தின் பந்து வீச்சு சிறப்பாக இருந்ததால் டெல்லி அணி ரன் குவிக்க திணறியது. © BCCI/IPL

ஐ.பி.எல். போட்டியில் இன்று டெல்லி கேபிடர்சும், சன்ரைசர்ஸ் ஐதராபாத்தும் மோதுகின்றன. ஏற்னவே 4 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி கேபிடல்ஸ் 2 மேட்ச்சுகளிலும், 3 போட்டிகளை எதிர்கொண்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இந்தப் போட்டி நடக்கிறது. ஒட்டுமொத்தமாக டெல்லி கேபிடல்சும், சன்ரைசர்ஸ் ஐதராபாத்தும் 12 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஐதராபாத் 8 முறையும், டெல்லி கேபிடல்ஸ் 4 முறையும் வென்றுள்ளது. 

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இரு அணிகளும் 5 முறை மோதியிருக்கின்றன. இதில் ஐதரபாத் 5 முறையும், டெல்லி அணி 2 முறையும் வெற்றியை ருசித்துள்ளது. 

டெல்லி அணியின் பேட்டிங் வரிசை பலவீனமாக உள்ளது. இதனை கேப்டன் ஷ்ரேயாஸ் சரி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று முறை டைட்டில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியை இந்த தொடரில் டெல்லி வென்றுள்ளது. 

சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை பொறுத்தளவில் மிகவும் வலுவான பேட்டிங் வரிசை அவர்களுக்கு உள்ளது. பெங்களூருவுக்கு எதிராக நடந்த போட்டியில் ஐதராபாத் 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

3-வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இரு அணிகளும் விளையாடியது.

டெல்லிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 129 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் 43 ரன்களை எடுத்தார்.

ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார், முகமது நபி, சித்தார்த் கவுல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் பேட் செய்த ஐதராபாத், 18.3 ஓவரில் இலக்கை எட்டியது.

ஆட்ட நாயகன் விருது 28 பந்துகளில் 48 ரன்களை குவித்த பேர்ஸ்டாவுக்கு வழங்கப்பட்டது.

ஸ்கோர்கார்டு தமிழில்

தமிழில் வர்ணனை

வரைபடம் தமிழில்

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
தோல்விக்கு பிட்சை குறை சொல்லும் ரிக்கி பாண்டிங்!
தோல்விக்கு பிட்சை குறை சொல்லும் ரிக்கி பாண்டிங்!
ஐ.பி.எல். 2019: 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வென்றது ஐதராபாத் சன் ரைசர்ஸ்!! #Highlights
ஐ.பி.எல். 2019: 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வென்றது ஐதராபாத் சன் ரைசர்ஸ்!! #Highlights
சன்ரைசர்ஸ், டெல்லி ஆட்டம் எங்கு, எப்போது, எதில் பார்க்கலாம்?
சன்ரைசர்ஸ், டெல்லி ஆட்டம் எங்கு, எப்போது, எதில் பார்க்கலாம்?
Advertisement