சாம் குரானின் ஸ்கூல் பாய் படத்தை வைரலாக்கிய கெயில்!

Updated: 05 April 2019 15:06 IST

2019ம் ஆண்டு ஐபிஎல்லின் முதல் ஹாட்ரிக்கை எடுத்த சாம் குரான் பள்ளிப்பருவத்தில் கெயிலும் இணைந்து எடுத்த அந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

Chris Gayle
20 வயதான குரான் 48 டி20 போட்டிகளில் ஆடி 44 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.  © Chris Gayle/Instagram

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் பஞ்சாப் அணியில் ஆடிவருகிறார். அவரது பழைய புகைப்படம் ஒன்றை கெயில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 2019ம் ஆண்டு ஐபிஎல்லின் முதல் ஹாட்ரிக்கை எடுத்த சாம் குரான் பள்ளிப்பருவத்தில் கெயிலும் இணைந்து எடுத்த அந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

பதிவிட்ட கொஞ்ச நேரத்தில் 1.8 லட்சம் லைக்குகளை வாங்கியது அந்த பதிவு. 

முன்னதாக சாம் குரான் ஐபிஎல் 2019 தொடரின் முதல் ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றினார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக இந்த சாதனையை அவர் படைத்தார். டெல்லி அணியின் கடைநிலை வீரர்களை வீழ்த்தி டெல்லியை 152 ரன்களுக்கு சுருட்ட உதவினார். இதன் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 18வது ஓவரின் கடைசி பந்தில் ஹர்ஷல் பட்டேலையும், 20வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் ரபாடா மற்றும் லாமிசனேயை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

குரான் வெறும் இரண்டு போட்டிகள் அனுபவம் உள்ள ஐபிஎல் வீரர்தான். ராஜஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 52 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

சாம் குரான் தான் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர். டெல்லிக்கு எதிரான போட்டியில் 2.2 ஓவர்கள் வீசி 11 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டெல்லி 144 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற நிலையிலிருந்து 152 ரன்களுக்கு ஆல் அவுட் என்ற நிலைக்கு சென்றது. 8 ரன்களை சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டை இழந்தது. பன்ட் மற்றும் இங்ராம் எளிதாக வெற்றி பெறலாம் என்ற நிலையில் ஆட்டமிழக்க பஞ்சப் பக்கம் ஆட்டம் மாறியது. 

சாம் குரான் பேட்டிங்கில் 10 பந்தில் 20 ரன்கள் எடுத்தார். 20 வயதான குரான் 48 டி20 போட்டிகளில் ஆடி 44 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 

சனியன்று நடக்கும் போட்டியில் சம் குரான் மற்றும் கெயில் இருவரும் சென்னைக்கு எதிராக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Comments
ஹைலைட்ஸ்
  • கெயில், சாம் குரானுடன் எடுத்த பழைய புகைப்படத்தை வெளியிட்டார்
  • கிறிஸ் கெயில் மற்றும் சாம் குரான் கிங்ஸ் லெவனுக்கு ஆடி வருகிறார்கள்
  • சாம் குரான் ஐபிஎல் 2019 தொடரின் முதல் ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றினார்
தொடர்புடைய கட்டுரைகள்
"ஓய்வு குறித்து நான் எதுவும் அறிவிக்கவில்லை" - கிறிஸ் கெயில்!
"ஓய்வு குறித்து நான் எதுவும் அறிவிக்கவில்லை" - கிறிஸ் கெயில்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற கெயிலுக்கு அழைப்பு!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற கெயிலுக்கு அழைப்பு!
முதல் ஒருநாள் போட்டி மழையால் தடை... மைதானத்தில் நடனமாடிய கோலி!
முதல் ஒருநாள் போட்டி மழையால் தடை... மைதானத்தில் நடனமாடிய கோலி!
கெயிலின் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் ஷர்மா?
கெயிலின் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் ஷர்மா?
கனடாவை தாக்கிய கிறிஸ் கெயில் புயல்...! - காண்க
கனடாவை தாக்கிய கிறிஸ் கெயில் புயல்...! - காண்க
Advertisement