Listen to the latest songs, only on JioSaavn.com
 

ஐபிஎல் 2019: பும்ரா, பாண்ட்யா சிறப்பான ஆட்டம்... ப்ளே ஆஃப் சுற்றில் மும்பை!

Updated: 03 May 2019 11:25 IST

13 போட்டிகளில் 16 புள்ளிகள் பெற்று 3ம் இடத்தில் இருக்கும் மும்பை ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது - IPL 2019: Jasprit Bumrah, Hardik Pandya Star As Mumbai Indians Outshine SunRisers Hyderabad To Qualify For Playoffs

IPL 2019: Jasprit Bumrah, Hardik Pandya Star As Mumbai Indians Outshine SunRisers Hyderabad To Qualify For Playoffs
பும்ரா, சூப்பர் ஓவரை அபாரமாக வீசி 8 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்த, ஹர்திக் பாண்ட்யா மும்பை சூப்பர் ஓவரை சிக்ஸரடித்து ஆரம்பித்து வெற்றி பெற வைத்தார். © BCCI/IPL

மும்பை இந்தியன்ஸ் அணி சன்ரசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. சன்ரைசர்ஸ் வீரர் மனிஷ் பாண்டேவின் அபாரமான 71 ரன்குவிப்பு போட்டியை சமன் ஆக்கியது. மும்பையின் 162 ரன்களை ஹைதராபாத்தும் குவிக்க போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. பும்ரா, சூப்பர் ஓவரை அபாரமாக வீசி 8 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்த, ஹர்திக் பாண்ட்யா மும்பை சூப்பர் ஓவரை சிக்ஸரடித்து ஆரம்பித்து வெற்றி பெற வைத்தார்.

13 போட்டிகளில் 16 புள்ளிகள் பெற்று 3ம் இடத்தில் இருக்கும் மும்பை ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. சன்ரைசர்ஸ் 12 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.

ஹைதராபாத் அணிக்கு கடைசி பந்தில் 7 ரன்கள் தேவைப்பட, சிக்ஸரடித்து ஸ்கோரை சமன் செய்தார் மனிஷ் பாண்டே.

163 என்ற இலக்கை துரத்திய ஹைதராபாத் 18 பந்தில் 41 ரன் அடிக்க வேண்டும் என்ற சூழலில் மலிங்கா 12, பும்ரா 12, ஹர்தில் 16 ரன்களை வழங்க போட்டி சமனானது.

மும்பை தரப்பில் க்ருணால் பாண்ட்யா அபாரமாக பந்து வீசி 2/22 என்று அசத்தினார். மேலும், கேப்டன் வில்லியம்சனை 3 ரன்னில் வெளியேற்றி அழுத்தம் தந்தார்.

Comments
ஹைலைட்ஸ்
  • பாண்ட்யா, மும்பை சூப்பர் ஓவரை சிக்ஸரடித்து ஆரம்பித்து வெற்றி பெற வைத்தார்
  • சன்ரைசர்ஸ் சூப்பர் ஓவரில் 8 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது
  • போலார்ட், ஹர்திக் மூன்று பந்தில் 9 ரன்கள் எடுக்க மும்பை வெற்றி பெற்றது
தொடர்புடைய கட்டுரைகள்
பவுண்டரிக்கு சென்ற பந்தை காலால் தடுத்து நிலைதடுமாறிய பொலார்ட்!
பவுண்டரிக்கு சென்ற பந்தை காலால் தடுத்து நிலைதடுமாறிய பொலார்ட்!
ஐபிஎல் 2019: பும்ரா, பாண்ட்யா சிறப்பான ஆட்டம்... ப்ளே ஆஃப் சுற்றில் மும்பை!
ஐபிஎல் 2019: பும்ரா, பாண்ட்யா சிறப்பான ஆட்டம்... ப்ளே ஆஃப் சுற்றில் மும்பை!
Advertisement