ஐ.பி.எல். 2019 : ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சி.எஸ்.கே. வெற்றி!!

Updated: 12 April 2019 00:07 IST

பொறுப்புடன் விளையாடிய அம்பதி ராயுடு - தோனி இணை ஆட்டத்தை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றது.

Live IPL Score, RR vs CSK Live Cricket Score: Chennai Super Kings Win Toss, Opt To Bowl Against Rajasthan Royals
கடைசி ஓவரின் கடைசி பந்து வரைக்கும் மேட்ச் விறு விறுப்பாக இருந்தது. © BCCI/IPL

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சி.எஸ்.கே. வெற்றி பெற்றுள்ளது. 158 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய சென்னை கடைசி ஓவரின் கடைசி பந்தில் வெற்றி இலக்கை எட்டியது.

சென்னை அணி தொடக்க வீரர் வாட்சன் ரன் ஏதும எடுக்காமலும், டுப்ளெசிஸ் 7 ரன்களிலும் வெளியேறினர். சுரேஷ் ரெய்னா 4 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த தோனி மற்றும் அம்பதி ராயுடு ஜோடி மேட்சை கடைசி ஓவர் வரைக்கும் கொண்டு சென்றனர். ராயுடு 57 ரன்களும், தோனி 58 ரன்களும் எடுத்தனர். 

முன்னதாக ராஜஸ்தான் பேட் செய்தபோது ரகானே, பட்லர் ஆகியோர் தொடக்க பேட்ஸ்மேன்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடி காட்டிய நிலையில் ஜோஸ் பட்லர் 10 பந்துகளில் 23 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். ரகானே 14, சாம்சன் 6, ஸ்மித் 15, திரிபாதி, 10 ரன்களில் வெளியேற, சற்று நேரம் தாக்குப்பிடித்த பென் ஸ்டோக் 28 ரன்களை எடுத்தார். 

அடுத்து வந்தவர்கள் மிதமான வேகத்தில் ரன் சேர்க்க ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்தது. சென்னை தரப்பில் தீபக் சஹார், ஷர்துல் தாகூர், ரவிந்திரா ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

ஸ்கோர்கார்டு தமிழில் 

தமிழில் வர்ணனை  

வரைபடம் தமிழில்  
 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"நோபால் சர்ச்சைக்காக தோனிக்கு 3 போட்டிகளில் தடை விதிக்க வேண்டும்" - சேவாக்
"நோபால் சர்ச்சைக்காக தோனிக்கு 3 போட்டிகளில் தடை விதிக்க வேண்டும்" - சேவாக்
"அவரும் மனிதர்தான்" தோனி விஷயத்தில் மைக்கேல் வாகனுக்கு பதிலளித்த கங்குலி!
"அவரும் மனிதர்தான்" தோனி விஷயத்தில் மைக்கேல் வாகனுக்கு பதிலளித்த கங்குலி!
படுத்துக் கொண்டே சிக்ஸரடித்த ஜடேஜாவை தலையில் தட்டிய தோனி!
படுத்துக் கொண்டே சிக்ஸரடித்த ஜடேஜாவை தலையில் தட்டிய தோனி!
களத்தில் கோபப்பட்ட தோனியை விமர்சித்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன்!
களத்தில் கோபப்பட்ட தோனியை விமர்சித்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன்!
பரபரப்பான போட்டியில் படுத்துகொண்டே சிக்ஸர் அடித்த ஜடேஜா
பரபரப்பான போட்டியில் படுத்துகொண்டே சிக்ஸர் அடித்த ஜடேஜா
Advertisement