தோல்விக்கு பிட்சை குறை சொல்லும் ரிக்கி பாண்டிங்!

Updated: 05 April 2019 19:09 IST

டெல்லி கேப்பிட்டல் அணி தனது மூன்றாவது தோல்வியை ஐபிஎல் தொடரில் பதிவு செய்துள்ளது. ஃபெரோஷா கோட்லாவில் ஹைதராபாத் அணிக்கு எதிராக 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

DC vs SRH: Ricky Ponting Slams Delhi Pitch After Loss To SunRisers Hyderabad
தோல்வி குறித்து டெல்லி பிட்ச் தயாரிப்பாளர் மீது அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். © BCCI/IPL

டெல்லி கேப்பிட்டல் அணி தனது மூன்றாவது தோல்வியை ஐபிஎல் தொடரில் பதிவு செய்துள்ளது. ஃபெரோஷா கோட்லாவில் ஹைதராபாத் அணிக்கு எதிராக 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் இந்த வெற்றி மூலம் புள்ளிப்பட்டியலில் அந்த அணி முன்னிலை வகிக்கிறது. பஞ்சாப், சென்னை அணிகளும் இதே புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளன. இந்த தோல்வி குறித்து டெல்லி பிட்ச் தயாரிப்பாளர் மீது அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

"இந்த பிட்ச் ஒரு மோசமான பிட்ச். இது சொந்த அணியை விட எதிரணிக்கு அதிகம் உதவுகிறது" என்றார். போட்டிக்கு முன் தயாரிப்பாளரிடம் பேசியதாகவும், ஆனால் அவர் சொன்ன தன்மையில் பிட்ச் இல்லை என்றும் சாடினார் ரிக்கி பாண்டிங்.

"சூழலுக்கு ஏற்ப ஆரம்பத்தில் எங்கள் வீரர்கள் சிறப்பாக பந்துவீசினாலும், அவர்கள் பின்பு பிட்ச்சின் தன்மையால் தடுமாறினர்" என்றார்.

"இப்படியே சென்றால் அணியில் நிறைய மாறுதல்களை கொண்டு வர வேண்டியிருக்கும். அதேபோல் ஒருபோதும் இனி சன்ரைசர்ஸுடன் ஆடிய பிட்ச் போன்ற ஒரு பிட்ச் இருக்ககூடாது" என்றார்.

பிட்ச்சுக்கு இணையாக பேட்ஸ்மேன்களையும் திட்டி தீர்த்தார். 160-165 ரன்கள் எடுக்க வேண்டிய இடத்தில் மோசமான ஷாட்களால் இலக்கை எட்டதவறியதாக குற்றம் சாட்டினார். 

டெல்லி அணி வீரர்களின் மோசமான ஷாட்களால் 8 விக்கெட்டுகளை இழந்து வெறும் 129 ரன்களையே எடுத்தது. கேப்டன் ஷ்ரேயாஸ் மட்டும் 41 பந்தில் 43 ரன்கள் குவித்தார். சன்ரைசர்ஸின் பாரிஸ்டோ 28 பந்தில் 48 ரன் எடுத்து சேசிங்கிற்கு உதவினார். 

Comments
ஹைலைட்ஸ்
  • டெல்லி பிட்ச் தயாரிப்பாளர் மீது கோபத்தை வெளிப்படுத்தினார் பாண்டிங்
  • இந்த பிட்ச் ஒரு மோசமான பிட்ச் என்றார் ரிக்கி பாண்டிங்
  • ஹைதராபாத் அணிக்கு எதிராக 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது டெல்லி
தொடர்புடைய கட்டுரைகள்
"டிம் பெயினுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை ஸ்மித் வழிநடத்துவார்" - மார்க் டெய்லர்!
"டிம் பெயினுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை ஸ்மித் வழிநடத்துவார்" - மார்க் டெய்லர்!
ஜீனியஸ் என்றால் ஸ்மித் நினைவுக்கு வருகிறார் - பாண்டிங் புகழாரம்!
ஜீனியஸ் என்றால் ஸ்மித் நினைவுக்கு வருகிறார் - பாண்டிங் புகழாரம்!
ரிக்கி பாண்டிங்கின் சத சாதனையை சமன் செய்வாரா கோலி?
ரிக்கி பாண்டிங்கின் சத சாதனையை சமன் செய்வாரா கோலி?
"டெல்லி ப்ளே ஆஃப்க்கு தகுதிபெற கங்குலி, பாண்டிங்தான் காரணம்" - தவான்
"டெல்லி ப்ளே ஆஃப்க்கு தகுதிபெற கங்குலி, பாண்டிங்தான் காரணம்" - தவான்
தோல்விக்கு பிட்சை குறை சொல்லும் ரிக்கி பாண்டிங்!
தோல்விக்கு பிட்சை குறை சொல்லும் ரிக்கி பாண்டிங்!
Advertisement