"ஹர்திக் பாண்ட்யா, மும்பை மற்றும் இந்திய அணியின் சொத்து" : பொலார்ட்

Updated: 03 May 2019 10:40 IST

ஹர்திக் 12 போட்டிகளில் 198.32 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 355 ரன்களை குவித்துள்ளார். கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 34 பந்தில் 91 ரன்கள் விளாசினார்.

Hardik Pandya Will Be Great For Mumbai Indians And India, Says Kieron Pollard
ஹர்திக், 12 போட்டிகளில் 198.32 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 355 ரன்களை குவித்துள்ளார். © BCCI/IPL

மும்பை அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிரண் போலார்ட், "ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் மற்றும் இந்திய அணிக்கு மிகப்பெரிய சொத்து"  என்று கூறியுள்ளார். ஹர்திக் 12 போட்டிகளில் 198.32 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 355 ரன்களை குவித்துள்ளார். கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 34 பந்தில் 91 ரன்கள் விளாசினார்.

அதுமட்டுமின்றி, 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அதிகபட்சமாக நடப்பு சாம்பியன் சென்னையுடனான போட்டியில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

"ஆரம்பத்தில் அணிக்குள் நுழைந்த போது பெரிய ஷாட்களை ஆடமாட்டார். ஆனால்" தற்போது தீவிர பயிற்சியால் அதிரடியாக ஆடி ஆட்டங்களை வெற்றிக்கு அழைத்து செல்கிறார்" என்றார் பொலார்ட்.

மேலும், "ஹர்திக் அதிக தன்னம்பிக்கை கொண்டவர். ஆட்டத்தை ஒற்றை ஆளாக வெல்லக்கூடியவர்" என்றார்.

பொலார்ட், இந்த சீசனில் 12 போட்டிகளில் 158 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 223 ரன்கள் குவித்துள்ளார். கிங்ஸ் லெவனுக்கு எதிரான போட்டியில் 10 சிக்ஸருடன் 31 பந்தில் 83 ரன்கள் குவித்து அசத்தினார்.

Comments
ஹைலைட்ஸ்
  • கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 34 பந்தில் 91 ரன்கள் விளாசினார் 
  • இந்த சீசனில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் ஹர்திக் பாண்ட்யா
  • மும்பை இந்தியன்ஸ், இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா மிகப்பெரிய சொத்து"
தொடர்புடைய கட்டுரைகள்
ஹர்திக் பாண்ட்யாவை கலாய்த்த க்ருணால் பாண்ட்யா!
ஹர்திக் பாண்ட்யாவை கலாய்த்த க்ருணால் பாண்ட்யா!
தென்னாப்பிரிக்க தொடருக்கு முன் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுப்பட்ட க்ருணால் பாண்ட்யா !
தென்னாப்பிரிக்க தொடருக்கு முன் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுப்பட்ட க்ருணால் பாண்ட்யா !
"ஹர்திக் பாண்ட்யாவின் வளர்ச்சியில் எந்த ஆச்சரியமும் இல்லை" - கீரன் பொல்லார்ட்!
"ஹர்திக் பாண்ட்யாவின் வளர்ச்சியில் எந்த ஆச்சரியமும் இல்லை" - கீரன் பொல்லார்ட்!
ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹர்திக் பாண்ட்யா!
ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹர்திக் பாண்ட்யா!
பேபி சிட்டராக மாறிய ஹர்திக் பாண்ட்யா! #Video
பேபி சிட்டராக மாறிய ஹர்திக் பாண்ட்யா! #Video
Advertisement