டிவி ஷோ சர்ச்சை... உலகக் கோப்பை கனவு... மும்பையின் வெற்றிக்கு பிறகு பாண்ட்யா

Updated: 05 April 2019 18:14 IST

" கடந்த ஏழு மாதங்களாக தீவிர பயிற்சியில் மட்டுமே ஈடுப்பட்டேன். 'காஃப் வித் கரண்' நிகழ்ச்சியில் ஏற்பட்ட சர்ச்சைக்கு பிறகு நான் வெளிவர இதுவே உதவியாக இருந்தது" என்றார் பாண்ட்யா.

Hardik Pandya Speaks About Koffee With Karan Controversy, World Cup Dream
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக ஆடி ஆட்ட நாயகனுக்கான விருதை பெற்றார் பாண்ட்யா. © BCCI/IPL

2019ம் ஆண்டு ஐபிஎல்லில் ஹர்திக் பாண்ட்யா தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக ஆடி ஆட்ட நாயகனுக்கான விருதை பெற்றார். அதன் பிறகு பேசிய பாண்ட்யா, " கடந்த ஏழு மாதங்களாக தீவிர பயிற்சியில் மட்டுமே ஈடுப்பட்டேன். 'காஃப் வித் கரண்' நிகழ்ச்சியில் ஏற்பட்ட சர்ச்சைக்கு பிறகு நான் வெளிவர இதுவே உதவியாக இருந்தது" என்றார். சிஎஸ்கேவுக்கு எதிராக ஆடிய பாண்ட்யா, 8 பந்தில் 25 ரன்கள் குவித்தார். மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி 37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற காரணமாக இருந்தார்.

"அணி வெற்றி பெற உதவியது எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. கடந்த 7 மாதங்களாக விளையாட்டில் ஈடுபடாமல் இருந்தேன். என்ன செய்வது என்று புரியாமல் இருந்தும் பயிற்சியை மட்டும் விடாமல் தொடர்தேன். என்னுடைய விளையாட்டில் ஒவ்வொரு நாளும் மேம்பட வேண்டும் என்பதில் மட்டும் கவனம் செலுத்தி வந்தேன். சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற உதவுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது" என்று பாண்ட்யா பரிசளிக்கும் விழாவில் கூறினார்.

"காயம் காரணமாக ஆட்டத்தை விட்டு விலகியிருந்தேன். பின்னர் வேறு ஒரு சர்ச்சை ஏற்பட்டது. இந்த விருதை நான் கடினமான நேரத்தில் என்னுடன் இருந்த என் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் சமர்பிக்கிறேன்" என்றார்.

"இப்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறேன். உலகக் கோப்பையை இந்தியா நிச்சயம் வெல்லும்" என்றார் பண்ட்யா.

பண்ட்யாவுடன் மும்பை அணியில் விளையாடும் பொலார்ட் இணைந்து 45 ரன்கள் பார்னர்ஷிப்பில் குவித்தனர். பாண்ட்யா குறித்து அவர் கூறும்போது, "அவர் தனித்துவமானவர். எங்களுக்கு அவரை உற்சாகப்படுத்துவதும் விளையாட வாய்ப்பு அளிப்பதும் மட்டுமே தேவையாக இருந்தது. இப்படி விளையாட அவர் தீவிர பயிற்சி எடுக்கிறார்" என்றார்.

ப்ராவோ வீசிய கடைசி ஓவரில் இருவரும் இணைந்து 29 ரன்கள் குவித்தனர். 2019 ஐபிஎல்லில் ஒரு ஓவரில் எடுக்கப்பட்ட அதிக ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
ஹைலைட்ஸ்
  • சிறப்பாக ஆடி ஆட்ட நாயகனுக்கான விருதை பெற்றார் பாண்ட்யா
  • கடந்த ஏழு மாதங்களாக தீவிர பயிற்சியில் மட்டுமே ஈடுப்பட்டேன்: பாண்ட்யா
  • கடைசி ஓவரில் பொலார்ட், பாண்ட்யா இணைந்து 29 ரன்கள் குவித்தனர்
தொடர்புடைய கட்டுரைகள்
விஜய் சங்கரின் சட்டையில்லா புகைப்படத்தை ட்ரோல் செய்த ரசிகர்கள்!
விஜய் சங்கரின் சட்டையில்லா புகைப்படத்தை ட்ரோல் செய்த ரசிகர்கள்!
"நீங்கள் வந்தது மகிழ்ச்சி" - நீதா அம்பானிக்கு நன்றி தெரிவித்த ஹர்திக் பாண்ட்யா!
"நீங்கள் வந்தது மகிழ்ச்சி" - நீதா அம்பானிக்கு நன்றி தெரிவித்த ஹர்திக் பாண்ட்யா!
ஹர்திக் பாண்ட்யாவின் வாழ்த்துக்கு அமைதியாக பதிலளித்த ஜாகீர் கான்!
ஹர்திக் பாண்ட்யாவின் வாழ்த்துக்கு அமைதியாக பதிலளித்த ஜாகீர் கான்!
ஜாகீர் கான் பிறந்தநாளுக்கு ஹர்திக் பாண்ட்யாவின் சர்ச்சையான ட்விட்!
ஜாகீர் கான் பிறந்தநாளுக்கு ஹர்திக் பாண்ட்யாவின் சர்ச்சையான ட்விட்!
"எந்த நேரமும் திரும்பி வருவேன்" - சிகிச்சைக்கு பின் ஹர்திக் பாண்ட்யா
"எந்த நேரமும் திரும்பி வருவேன்" - சிகிச்சைக்கு பின் ஹர்திக் பாண்ட்யா
Advertisement