‘சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னர்…’- மனம் திறந்த ஹர்திக் பாண்டியா

Updated: 17 April 2019 13:15 IST

தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் பாண்டியா, 186 ரன்களை 191 ஸ்டிரைக் ரேட்டில் அடித்து அசத்தி வருகிறார்.

Hardik Pandya Admits Suspension "Setback" Allowed Him To Improve, Focus Better
சமீபத்தில் ஆர்.சி.பி-க்கு எதிரான போட்டியில் 16 பந்துகளில் 37 ரன்கள் அடித்து, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றியை ஈட்டித் தந்தார். © AFP

சில மாதங்களுக்கு முன்னர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சஸ்பெண்ட் ஆர்டருக்கு உள்ளானார் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. ஆனால், அந்த சஸ்பெண்டுக்குப் பிறகு அவர் களத்துக்கு வந்தது குறித்து தற்போது மனம் திறந்து பேசியுள்ளார் ஹர்திக் பாண்டியா. 

தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் பாண்டியா, 186 ரன்களை 191 ஸ்டிரைக் ரேட்டில் அடித்து அசத்தி வருகிறார். சமீபத்தில் ஆர்.சி.பி-க்கு எதிரான போட்டியில் 16 பந்துகளில் 37 ரன்கள் அடித்து, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றியை ஈட்டித் தந்தார். 

“எல்லோருக்கும் வாழ்க்கையில் பின்னடைவு இருக்கும். எனக்கு பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து நான் எனது உடற்பயிற்சியில் கவனம் செலுத்தினேன். நான் களத்தில் இருந்து வெளியே வந்து இருந்த நேரம் எனக்கு நல்ல உதவி புரிந்தது. இப்போது நல்ல மனநிலையில் இருக்கிறேன். அனைத்தும் சரியாக வருகிறது” என்று பாண்டியா மகிழ்ச்சியுடன் கூறினார்.

உலகக் கோப்பையில் விளையாட உள்ளது குறித்து பாண்டியா, ‘நான் இப்போதுதான் முதன்முறையாக உலகக் கோப்பையில் விளையாட உள்ளேன். நான் நல்ல ஃபார்மில் இருக்கிறேன். தொடர்ந்து முழுத் திறனையும் வெளிக்காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். 2017 ஆம் ஆண்டு நாங்கள் ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராஃபியை இங்கிலாந்தில்தான் விளையாடினோம். அதனால் இந்த முறை எங்களுக்கு அந்த சூழல் சாதகமாக இருக்கும்' என்று பேசியுள்ளார்.  

(பிடிஐ தகவல்களுடன்)

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக் கோப்பைக்காக இங்கிலாந்து புறப்பட்ட இந்திய வீரர்களின் ட்விட்டர் பதிவுகள்!
உலகக் கோப்பைக்காக இங்கிலாந்து புறப்பட்ட இந்திய வீரர்களின் ட்விட்டர் பதிவுகள்!
"நட்புனா என்னனு தெரியுமா" கே.எல்.ராகுல் விருதை வாங்கிய ஹர்திக் பாண்ட்யா
"நட்புனா என்னனு தெரியுமா" கே.எல்.ராகுல் விருதை வாங்கிய ஹர்திக் பாண்ட்யா
ஐபிஎல் குவாலிஃபையர் 1: வைரலான தோனி - ஹர்திக் பாண்ட்யா
ஐபிஎல் குவாலிஃபையர் 1: வைரலான தோனி - ஹர்திக் பாண்ட்யா ''ப்ரோமேன்ஸ்''
பவுண்டரிக்கு சென்ற பந்தை காலால் தடுத்து நிலைதடுமாறிய பொலார்ட்!
பவுண்டரிக்கு சென்ற பந்தை காலால் தடுத்து நிலைதடுமாறிய பொலார்ட்!
ஐபிஎல் 2019: பும்ரா, பாண்ட்யா சிறப்பான ஆட்டம்... ப்ளே ஆஃப் சுற்றில் மும்பை!
ஐபிஎல் 2019: பும்ரா, பாண்ட்யா சிறப்பான ஆட்டம்... ப்ளே ஆஃப் சுற்றில் மும்பை!
Advertisement
ss