ஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்!

Updated: 16 May 2019 15:05 IST

இறுதுப் போட்டியில் வாட்சன் காயத்துடன் ஆடியதை சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்திருந்தார்.

MI vs CSK: Harbhajan Singh Reveals Shane Watson Batted In IPL Final With Massive Handicap
பேட்டிங்கின் போது ஏற்பட்ட காயத்துடன் ஆடிய வாட்சனுக்கு 6 தையல்கள் போடப்பட்டுள்ளன.  © AFP

ஐபிஎல் இறுதிப்போட்டியில் கிட்டத்தட்ட வாட்சன் சென்னையை வெற்றியின் விளிம்புக்கே அழைத்து சென்றார். ஆனால், எதிர்பாராதவிதமாக வாட்சன் ரன் அவுட் ஆனார். இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்று சாம்பியன் ஆகும் வாய்ப்பை இழந்தது சி.எஸ்.கே. இந்த போட்டியில் வாட்சன் காயத்துடன் ஆடியதை சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்திருந்தார். பேட்டிங்கின் போது ஏற்பட்ட காயத்துடன் ஆடிய வாட்சனுக்கு 6 தையல்கள் போடப்பட்டுள்ளன. 

வாட்சன் முட்டியில் ரத்தம் கசிய ஆடும் புகைப்படத்தை பதிவிட்டார் ஹர்பஜன். அந்த புகைப்படத்தில் வாட்சனின் இடது தொடைக்கு மேலே ரத்தம் வழிய ஆடுவது தெரிந்தது. 

இந்த பதிவில் ஹர்பஜன் '' அவரது முட்டியில் உள்ள ரத்தத்தை பாருங்கள். 6 தையல் போடப்பட்டுள்ளது. ஆனால் யாரிடமும் சொல்லாமல் ஆடியுள்ளார். இதுதான் வாட்சன் போன்ற அனுபவ வீரரின் செயல்" என்று பாராட்டியுள்ளார்.

mrbmoh2c

மலிங்கா கடைசி ஓவரின் நான்காவது பந்தில் வாட்சன் ரன் அவுட் ஆனார். கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் தக்கூர் அவுட் ஆக சென்னையை மும்பை ஒரு ரன்னில் வீழ்த்தியது. 

சி.எஸ்.கே அணிக்காக அபாரமாக ஆடிய வாட்சன் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Comments
ஹைலைட்ஸ்
  • வாட்சனுக்கு 6 தையல்கள் போடப்பட்டதை ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளார்
  • வாட்சன் 59 பந்தில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
  • 1 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வென்றது மும்பை இந்தியன்ஸ்
தொடர்புடைய கட்டுரைகள்
ட்விட்டரை தொடர்ந்து இன்ஸ்டாகிராம்... ஹேக் செய்யப்பட்ட வாட்சன் கணக்குகள்
ட்விட்டரை தொடர்ந்து இன்ஸ்டாகிராம்... ஹேக் செய்யப்பட்ட வாட்சன் கணக்குகள்
"அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி" - வாட்சனின் இன்ஸ்டாகிராம் பதிவு!
"அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி" - வாட்சனின் இன்ஸ்டாகிராம் பதிவு!
ஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்!
ஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்!
வாட்சனை ரன் அவுட்டாக்கிய ஜடேஜாவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
வாட்சனை ரன் அவுட்டாக்கிய ஜடேஜாவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
ஆட்டத்தின் தலையெழுத்தை மாற்றியதா தோனி ரன் அவுட்?
ஆட்டத்தின் தலையெழுத்தை மாற்றியதா தோனி ரன் அவுட்?
Advertisement