''லைட் எரிந்தாலே அவுட்'' ஐபிஎல் சர்சசைக்கு தீர்வு சொல்லும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

Updated: 08 April 2019 19:02 IST

கிறிஸ் லின் பேட்டிங் செய்யும் போது தவல் குல்கர்னி வீசிய பந்து பேட்டில் பட்டு ஸ்டெம்பை தாக்கியது. ஆனால் பெயில்ஸ் கீழே விழாமல் அப்படியே பந்து நகர்ந்து பவுண்டரிக்கு சென்றது.

RR vs KKR: Michael Vaughan Suggests Rule Change After Strange Incident During IPL 2019 Match
பந்து ஸ்டெம்ப்பில் பட்டும் கிறிஸ் லின் அவுட் ஆகவில்லை. © BCCI/IPL

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அதிர்ஷ்டமே இல்லை. கொல்கத்தா அணியுடனான நேற்றைய போட்டியில் அந்த அணியின் துவக்க வீரர் கிறிஸ் லின் பேட்டிங் செய்யும் போது தவல் குல்கர்னி வீசிய பந்து பேட்டில் பட்டு ஸ்டெம்பை தாக்கியது. ஸ்டம்ப் லைட் எரிந்ததும் குல்கர்னி துள்ளி குதித்தார். ஆனால் பெயில்ஸ் கீழே விழாமல் அப்படியே பந்து நகர்ந்து பவுண்டரிக்கு சென்றது.

இதனை அம்பயர் விதிகளின் படி அவுட் இல்லை என்று கூற லின் பேட்டிங்கை தொடர்ந்தார். இது ஒன்றும் ஐபிஎல் தொடரில் புதிய சம்பவமில்லை. இந்த தொடரிலேயே பலமுறை இப்படி நடந்திருக்கிறது. 

இதனை டிவிட்டரில் ஃபெவிகால் வைத்த பெயில்ஸ்கள் என்று நெட்டிசன்கள் கேலி செய்தனர்..

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் " 'லைட் எரிந்தாலே அவுட்' என்ற விதிமுறை  அறிமுகம் செய்யப்பட வேண்டும்" என்றார்.

சனிக்கிழமையன்று தோனி செய்த ரன் அவுட்டிலிருந்து கிங்ஸ் லெவன் வீரர் ராகுல் தப்பினார். 

மார்ச் 31 அன்று ராஜஸ்தான் ராயல்ஸுக்கு  எதிரான போட்டியில் சி.எஸ்.கே பேட்டிங்கின் போது தோனி ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆர்ச்சர் வீசிய பந்தில் இதே சம்பவம் நிகழ்ந்தது. 

நேற்றைய போட்டியில் லின் 50 ரன்களை குவித்தார். இதன் மூலம் 37 பந்துகள் மீதமிருந்த நிலையில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கொல்கத்தா.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஐபில் வேண்டாம்... டாம் பான்டனை கவுண்டி சீசனில் ஆட சொல்லும் மைக்கேல் வாகன்!
ஐபில் வேண்டாம்... டாம் பான்டனை கவுண்டி சீசனில் ஆட சொல்லும் மைக்கேல் வாகன்!
ரவி சாஸ்திரியின் பதிவில் புத்தாண்டு வாழ்த்து சொன்ன மைக்கேல் வாகன்!
ரவி சாஸ்திரியின் பதிவில் புத்தாண்டு வாழ்த்து சொன்ன மைக்கேல் வாகன்!
"ஆஸ்திரேலியாவிலும் பிங்க் பால் டெஸ்ட் வேண்டும்" - மைக்கேல் வாகன்
"ஆஸ்திரேலியாவிலும் பிங்க் பால் டெஸ்ட் வேண்டும்" - மைக்கேல் வாகன்
டயாப்பருடன் கிரிக்கெட் விளையாடும் சுட்டிக் குழந்தை!! பேட்டிங்கில் கலக்கும் வீடியோ!
டயாப்பருடன் கிரிக்கெட் விளையாடும் சுட்டிக் குழந்தை!! பேட்டிங்கில் கலக்கும் வீடியோ!
டி20 போட்டியை முன் கணிப்பு செய்த மைக்கேல் வாகனை... ட்ரோல் செய்த ரசிகர்கள்!
டி20 போட்டியை முன் கணிப்பு செய்த மைக்கேல் வாகனை... ட்ரோல் செய்த ரசிகர்கள்!
Advertisement