ராஜஸ்தானுடன் அதிரடி ஆட்டம் ஆடிய தோனியை புகழ்ந்த ப்ராவோ!

Updated: 02 April 2019 15:48 IST

தோனி 4 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸருடன் 46 பந்தில் 75 ரன்கள் குவித்து அசத்தினார். இவரது இன்னிங்ஸால் சென்னை 175/5 என்ற ஸ்கோரை எட்டியது.

Dwayne Bravo All Praise For MS Dhoni After Stunning Knock For CSK vs RR
ரெய்னாவுடன் இணைந்து தோனி 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அடுத்து ப்ராவோவுடன் இணைந்து 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். © BCCI/IPL

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றதற்கு கேப்டன் தோனியை பாராட்டியுள்ளார் சி.எஸ்.கே வீரர் ப்ராவோ. தோனி 4 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸருடன் 46 பந்தில் 75 ரன்கள் குவித்து அசத்தினார். இவரது இன்னிங்ஸால் சென்னை 175/5 என்ற ஸ்கோரை எட்டியது. முன்னதாக 5 ஓவரில் 27/3 என்ற நிலையில் இருந்தது சிஎஸ்கே.

மேலும் ப்ராவோ தோனி பற்றி கூறும்போது ''அவர் மிகவும் அமைதியானவர். அவரது ஆட்டம் என்ன, வலிமை என்ன என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அவர் பாசிட்டிவாகவும், உற்சாகத்துடனும் ஆட்டத்தை அணுகுகிறார்" என்று சக வீரர் சாம் பில்லிங்ஸுடனான உரையாடலில் தெரிவித்தார். 

தோனி, பேட்டிங் செய்ய வரும் போது சிஎஸ்கே 3 விக்கெட்டுகளை இழந்து 27 ரன்கள் எடுத்திருந்தது. ரெய்னாவுடன் இணைந்து தோனி 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அடுத்து ப்ராவோவுடன் இணைந்து 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் உனக்டட் வீசிய கடைசி ஓவரில் தோனி ஹாட்ரிக் சிக்சருடன் சேர்த்து 28 ரன்கள் குவித்தது சிஎஸ்கே. ராஜஸ்தான் அணியில் தோனி போன்ற இன்னிங்ஸை ஆட ஆள் இல்லாமல் 167 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தழுவியது.

Comments
ஹைலைட்ஸ்
  • கேப்டன் தோனியை பாராட்டியுள்ளார் சி.எஸ்.கே வீரர் ப்ராவோ
  • தோனி 4 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸருடன் 46 பந்தில் 75 ரன்கள் குவித்தார்
  • 167 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தழுவியது ராஜஸ்தான்
தொடர்புடைய கட்டுரைகள்
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"தோனியின் ஓய்வு குறித்து தேர்வுக்குழு, கோலி முடிவெடுக்க வேண்டும்": கங்குலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
"பாடம் கற்றுக்கொண்டேன்" - தோனி ஓய்வு வதந்திக்கு பின் கோலி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
#12YearsOfCaptainDhoni - இந்திய ட்ரண்டாக மாறிய தோனி!
தோனியின் ஓய்வு வதந்தி:
தோனியின் ஓய்வு வதந்தி: 'Game of Thrones' வசனம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே!
"இதை வதந்தி என்பார்கள்" - தோனி ஓய்வு செய்தி குறித்து சாக்‌ஷி!
"இதை வதந்தி என்பார்கள்" - தோனி ஓய்வு செய்தி குறித்து சாக்‌ஷி!
Advertisement