பும்ராவின் கடைசி ஓவர் பயத்தில் நோபாலால் தப்பித்த தோனி

Updated: 08 May 2019 11:17 IST

பும்ரா முக்கியமான போட்டிகளில் நோபால் வீசுவது ஒன்றும் புதிதல்ல. சாம்பியன் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 2017ல் நோபால் வீசினார்.

MS Dhoni Survives Jasprit Bumrah
முதல் பந்திலேயே தோனி இஷாந்த் கிஷனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ரீப்ளேயில் அது நோபால் என தெரியவர மீண்டும் ஆடினார். © BCCI/IPL

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த குவாலிஃபயர் 1 போட்டியில் இந்தியாவின் முன்னணி பந்துவீச்சாளர் பும்ராவிடம் தோனி கடைசி ஓவரில் திணறினார். முதல் பந்திலேயே தோனி இஷாந்த் கிஷனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ரீப்ளேயில் அது நோபால் என தெரியவர மீண்டும் ஆடினார். 29 பந்தில் 37 ரன்கள் குவித்தார் தோனி.

பும்ரா முக்கியமான போட்டிகளில் நோபால் வீசுவது ஒன்றும் புதிதல்ல. சாம்பியன் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 2017ல் நோபால் வீசினார். அது இந்தியாவின் தோல்விக்கு காரணமானது.

25 வயதான பும்ராவின் நோபால் ஐபிஎல் 2019 குவாலிஃபையரில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ரசிகர்கள் மட்டும் ட்விட்டரில் பும்ராவை கலாய்த்தனர்.

20 ஓவரில் சென்னை அணி மும்பையின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால் 131 ரன்களை மட்டுமே எடுத்தது. பும்ரா 4 ஓவர்கள் வீசி 31 ரன்களை கொடுத்தார். விக்கெட் எதையும் வீழ்த்தவில்லை.

Comments
ஹைலைட்ஸ்
  • பும்ரா முக்கியமான போட்டிகளில் நோபால் வீசுவது ஒன்றும் புதிதல்ல
  • முன்னணி பந்துவீச்சாளர் பும்ராவிடம் தோனி கடைசி ஓவரில் திணறினார்
  • 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது சிஎஸ்கே
தொடர்புடைய கட்டுரைகள்
தோனியை விமர்சித்த சச்சின்… சச்சினை வறுத்தெடுக்கும் தோனி ரசிகர்கள்!
தோனியை விமர்சித்த சச்சின்… சச்சினை வறுத்தெடுக்கும் தோனி ரசிகர்கள்!
'இவர் தான் அடுத்த தோனி' - லாங்கர் கூறும் அந்த வீரர் யார் தெரியுமா?
“தல-க்கு இப்படியொரு நிலைமையா!”- தோனியை மீம்ஸ்களால் வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்
“தல-க்கு இப்படியொரு நிலைமையா!”- தோனியை மீம்ஸ்களால் வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்
ஒருநாள் போட்டியில் ட்ராவிட் சாதனையை கடந்து தோனி சாதனை!
ஒருநாள் போட்டியில் ட்ராவிட் சாதனையை கடந்து தோனி சாதனை!
சர்ச்சையை கிளப்பிய தோனி கிளவுஸ்; முத்திரையை அகற்ற வேண்டும் என ஐசிசி திட்டவட்டம்!
சர்ச்சையை கிளப்பிய தோனி கிளவுஸ்; முத்திரையை அகற்ற வேண்டும் என ஐசிசி திட்டவட்டம்!
Advertisement